Adsense

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (NKPK) - 1


சரி புதிதாக ஒரு ஆட்டத்தை ஆரம்பிப்போம் - புதிர் தான்.

ஆனால், google இருக்கும் போது என்ன புதிர் போட்டு என்ன பயன். இண்டர்நெட்டில் ஒரு தட்டு தட்டினால் பதில் வந்து விடுகிறது. அதனால், விளையாட்டில்  எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லை.

ஆட்டத்தை கொஞ்சம் மாத்துவோம். ஆட்டம் இது தான்.

ஒவ்வொரு புதிரிலும் மூன்று அல்லது நான்கு துப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த துப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். ஏதோ ஒரு விதத்தில் அவை அப்படி அமைந்து இருக்கும். அந்த தொடர்பை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.

புதிர் போடும் என் பணி, உங்களுக்கான பதில் எந்த தேடு பொறியிலும் நேரடியாகக் கிடைக்கக் கூடாது என்று மெனக்கெடுவது. ஆனால் பெரும்பாலும், சுலபமாகத் தான் இருக்கும். உங்கள் வேலை, கண்டுபிடிப்பது.

உதாரணம், கீழே.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இம்மூவரும் எதை இணைக்கிறார்கள்.

1. Mohamed Ould Abdel Aziz
2. Mamnoon Hussain
3. Recep Tayyip Erdoğan


நீங்கள் கூகிள் உதவியோடு இவர்கள் மூவரும் மூன்று நாடுகளுக்கான அதிபர்கள் என்று பதில் சொன்னால், மன்னிக்கவும் அது எதிர்பார்த்த பதில் அன்று.  அதிபர் என்பது முதல் கட்ட துப்பு மட்டுமே, அதிலிருந்து கொஞ்சம் எந்த நாட்டின் அதிபர்கள் என்று பார்த்தீர்களேயானால், உங்களுக்கு ஒரு ஒற்றுமை புலப்படும். அந்த ஒற்றுமையை கீழே கொடுத்துள்ளேன். நீங்களே பாருங்கள்.

                                                         

இவர்கள் அதிபர்களாக இருக்கும் நாடுகளின் கொடிகள் பிறை சந்திரனையும் நட்சத்திரத்தையும் பிரதானமாகக் கொண்டிருக்கின்றன. இது ஒரு அவதானிப்பு. இதே போல நீங்கள் வேறு ஒன்றை கண்டுபிடிக்கலாம். அதுவும் சரியான பதிலாக இருந்தால் ஏற்றுக்கொள்ளப்படும் :-)

ஒரு புதிருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள் இருக்கலாம். உங்கள் முதல் கூகிள் தேடலில் பதில் கிடைத்து விட்டால், அது பதிலல்ல என்று புரிந்து கொள்ளவும். ஒவ்வொரு புதிருக்கான விடையையும் நான் மறுநாள் இடுவேன். உங்கள் விடையை வழக்கம் போல பின்னூட்டத்தில் இடவும்.

சரி, ஆட்டத்தை ஆரம்பிக்கலாமா - இன்றைய புதிர்....

புதிர் 001


பின்வரும் நகரங்கள் எதை இணைக்கின்றன

அலகாபாத் (Allahabad), பாயின்ஸ்க் (Płońsk), க்ளேப் (Glebe).

No response to “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (NKPK) - 1”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman