Adsense

Ordo ab chao


ஆகாயத்தை நோக்கி விரித்த கால்களுடன்
மல்லாந்து கிடக்கின்றன யானைகள்
அங்கங்கே ஒரு சிங்கமும் புலியும் சிறுத்தையும்
ஒற்றைத் தண்டவாளத்தின் அருகே
சக்கரமில்லாத ஒரு காரும், ரயிலின் ஒரு பெட்டியும்
சரிந்து கிடக்கின்றன
கொத்தாகக் காய்த்த குலையுடைய
ஒரு தென்னை மரத்தை
கையில் கெட்டியாய் பிடித்தபடி
தண்டவாளத்தின் மீது உடல் கிடத்தி
உறங்கிக் கொண்டிருக்கிறது ஒரு குழந்தை

No response to “Ordo ab chao”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman