Adsense

சிதறல்கள் - 18


மிக நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட Chromecast இப்போது UKவில் விற்பனைக்கு வந்து விட்டது. சென்ற புதன் கிழமை முதல். 30 பவுண்ட் விலை. இந்திய மதிப்பில் 3000 ரூபாய். இந்த வார இறுதியில் வாங்க இருக்கிறேன்.

இதனால் ஆகும் பயன் என் சொல் என்று வினவுவீர்களேயானால், ஒரு சிறிய டாங்கில் (dongle) கொண்டு நீங்கள் இணையத்திலிருக்கும் வீடியோக்களை பார்க்க முடியும், எந்த விதமான கேபிள்களின் சிக்களும் இன்றி. கணிப்பொறியிலிருந்து டீவிக்கு வீடியோவைக் கொண்டு வர ஒரு HDMI கேபிளோ, அல்லது AV கேபிளோ தேவை. ஆனால், Chromecast கொண்டு நீங்கள் கேபிள்கள் சிக்களின்றி நீங்கள் வீடியோக்களை கண்டு களிக்கலாம்.

இந்த உபகரணம் இதன் வகைகள் முதண்மையானது கிடையாது. இந்த வகையான media streamerகள் முன்னோடி Roku என்று சொல்லலாம். ஆனால், chromecast Roku மற்றும் apple TV-இலிருந்து நிறைய வேறுபாடு கொண்டது என்று சொல்லலாம்.

இது பெரிய பெட்டி வடிவத்தில் இல்லை, சின்னதாக ஒரு dongle. அவ்வளவு தான். தனி ரிமோட் கிடையாது. இதை இயக்க உங்களுக்கு செல்ஃபோனோ, டேப்லெட்டோ இருந்தால் போதும். பலரும் இந்த feature-ஐ குறை சொன்னாலும் எனக்கு இந்த விஷயம் தான் பிடித்திருக்கிறது. எவ்வளவு ரிமோட் வைத்துக் கொள்வது ?

ஆனால் குறை என்னவென்றால், இப்போதைக்கு சில சேனல்களே பார்க்க முடியும் Youtube, Netflix மற்றும் இதில் பார்க்க முடியும். Netflix இந்தியாவில் வருவதற்கு சில காலம் ஆகலாம். தேவைப்பட்டால் VPN போட்டுக் கொண்டுப் பார்க்க வேண்டியது தான்.

இதைப் பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை எல்லாம் இவையே

1. Chromecast டாங்கிளை உங்கள் டிவியில் இருக்கும் HDMI ஸ்லாட்டில் சொருகுங்கள் (பெரும்பாலும் அனைத்து டீவிக்களிலும் இப்போது HDMI ஸ்லாட் இருக்கவே செய்கிறது)
2. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் இயங்கும் டேப்லெட்டோ மொபைலோ வைத்திருந்தால் நீங்கள் ப்ளேஸ்டோரிலிருந்து Chromecast app டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்
3. பின்னர், அந்த டேப்லெட்டிலிருந்து நீங்கள் உங்களுக்குத் தேவையான வீடியோவை உங்கள் டீவிக்கு stream செய்ய முடியும்.

இந்த டாங்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. அதனால், இந்தியவிலிருந்து உங்களால், Chromecast app டவுன்லோட் செய்ய முடியாது. கவலை வேண்டாம். இதன் Installer அதாவது APK file பல இடங்களிலும் இணையத்தில் கிடைக்கிறது. அதைக் கொண்டு நீங்கள் Install செய்து கொள்ளலாம். ஆனால் நான் இங்கிலாந்திலிருக்கும் போது ப்ளேஸ்டோரில் டவுன்லோட் செய்து என் டேப்லெட்டில் ஏற்றியுள்ளேன்.

இப்போதைக்கு நான் ஒரு Chromecast வாங்கும் முடிவில் இருக்கிறேன். இதை இந்தியாவில் வந்து ஓட விட்டு பார்த்துவிட்டு எப்படி வேலை செய்கிறது. என்ன சாதக பாதகங்கள் இருக்கின்றன என்று எழுதுகிறேன்.

No response to “சிதறல்கள் - 18”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman