Adsense

சிதறல்கள் - 15


வெகு நாட்கள் ஆகின்றன. தமிழில் எதையும் எழுதி. ஏதாவது காரணம் சொல்லொக்கொள்ளலாம் தான். ஆனால், சோம்பறித்தனம் கிடையவே கிடையாது என்று சொல்ல நான் தேர்தல் நேரத்து அரசியல்வாதி ஆனால் தான் உண்டு. மனமிருந்தால் மார்க்கபந்து.

எல்லா தொழில்களுக்கும் போட்டிகள் உண்டு அதே போல பொதுத் துறை வங்கிகளுக்கு தனியார் துறை வங்கிகள் போட்டியாக வந்தன. ஆனால் இன்னும் சில காலத்தில், அதாவது அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளுக்குள், வங்கிகளுக்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டியாக வ்ந்து விடும்.

நம்பிக்கையில்லையா ?

சிம்பிள் (வங்கி) என்று வங்கி சேவை வழங்கும் நிறுவனம். ஆனால் பதியப்பட்ட வங்கி கிடையாது :-) வடிவேலு வசனம் போல வங்கி தான் ஆனால் வங்கி இல்லை. அமெரிக்காவில் இயங்கி வருகிறது. simple.com என்ற இணைய தள முகவரியில்.

இவர்கள் மூன்று வருடங்களுக்கு முன் செய்தது ஒரு முன்னோடி செயல். அவர்கள் Banccorp வங்கியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு சேமிப்பு சேவையைத் துவங்கி விட்டனர்.

நீங்கள் வாடிக்கையாளராக சேர்ந்தால், உங்களுக்கு ஒரு டெபிட் கார்டு கொடுத்து விடுவார்கள். அதன் மூலம் நீங்கள் உங்கள் வங்கிக்கணக்கை ஆன்லைனிலோ, அதற்காக ப்ரத்யேகமாக இருக்கும் செயலிகள் கொண்டோ இயக்கலாம். உங்கள் பணம் Banccorp இடம் பத்திரமாக இருக்கும். interest Marginஐ கூட்டாளிகள் பகிர்ந்துக் கொள்வார்கள். அதே போல டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு visa கொடுக்கும் interchange feeஐயும் கூட்டாளிகள் பகிர்ந்துக் கொள்வார்கள்.

ஒரு வெப்சைட், மொபைல் இயங்குதளத்திற்கு ஒன்றாக செயலிகள், ஒரு வங்கியுடன் கூட்டு, டெபிட் கார்டு - வங்கி சேவை தயார். எளிதாக இருக்கிறதல்லாவா - அதனால் தான் simple.com.

விஷயம் என்னவென்றால், இந்த சேவை நிறுவனத்தை இப்போது லத்தின் அமெரிக்க வங்கி ஒன்று $ 117 மில்லியனுக்கு வாங்கி விட்டது.

இதே போல போட்டி போட கூகிளும், ஃபேஸ்புக்கும் முன்வந்தால் ஆச்சர்யப்பட எதுவுமில்லை. அதுவும், பிக் டேட்டாவிற்கான சகல கட்டுமானமும் அவர்களிடத்தில் தற்போது இருக்கும் சூழ்நிலையில்.

~oOo~

இன்னொரு செய்தியும் தொழில் நுட்பம் சார்ந்ததே. Dondesta என்று ஒர் செயலி. குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறார்களா இல்லையா என்று அவர்களை நோட்டம் விட பயன்படுத்தலாம்.

விசேஷமான தொழில்நுட்பமில்லை, சாதாரண GPS தான். நீங்கள் உங்கள் செல்ஃபோனிலிருந்தே உங்களுக்க்குத் தேவையானவர்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல்களைப் பெறலாம். ஹிட் ஆகும் என்று தோன்றவில்லை.

No response to “சிதறல்கள் - 15”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman