Adsense

இரண்டு கவிதைகள்


1.நீயும் நானும்

என்னால் உன்போல் இருக்க முடிவதில்லை
எனக்கு எதுவுமே பைத்தியக்காரத்தனம் இல்லை
எனக்கு எதுவுமே அசட்டுத் தனம் இல்லை
எனக்கு எதுவுமே உளரல் இல்லை
எனக்கு எதுவுமே அவமானம் இல்லை
எனக்கு எதுவுமே தீர்மாணம் இல்லை
நிரந்தரமாக….
எனக்கு எல்லாமே பைத்தியக்காரத்தனம் தான்
எனக்கு எல்லாமே அசட்டுத்தனம் தான்
எனக்கு எல்லாமே உளரல் தான்
எனக்கு எல்லாமே அவமானம் தான்
எனக்கு எல்லாமே தீர்மாணம் தான்
க்ஷண பொழுதிற்கு….
நிரந்திரத்தின் அளவின்மையினாலான
மகிழ்ச்சியில்
பொங்கிக் கொண்டிருக்கிறது நம் பந்தம்.
என்னால் உன்போல் இருக்க முடிவதில்லை,
இந்த க்ஷணத்தில்.
உன்போலவே இருக்கிறேன், எப்போதும்.

--------------------------------------------------------------------------

2. கயிற்றரவு

இந்த நதியில்
இந்த இடத்தில்
இப்போது கையிலள்ளி மீண்டும் விட்ட இந்த நீர்த்துளி
இந்த வரியை எழுதி இருக்கும் போது இருக்காது இல்லை
நீர்த்துளி நதியாகிவிட்டது
நான் அள்ளியது நீர்த்துளியைதான் என்றாலும்
காவேரியை அள்ளியதாகத் தான் உலகம் சொல்கிறது
நான் ஒரே இடத்தில் 20 வருடமாக இருந்தாலும்
உலகம் சுற்றுகிறது என்று சொல்வது போல.

No response to “இரண்டு கவிதைகள்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman