Adsense

விதுர நீதி – 10ஏழு ஏழாக சொல்லப்படும் நீதிகள்
ஸ்திரீகளிடம் அதிக மோஹம், சூதாட்டம், வேட்டையாடுதல், குடி, கடுஞ்சொல், கொடிய தண்டனை, வீண் செலவு – இந்த ஏழு குற்றங்களையும் அனைவரும் முக்கிய அரசர்கள் கட்டாயம் வர்ஜிக்க வேண்டும். இந்த தோஷங்களால் மிகப்பிரபலமான பிரபுக்கள் கூட அழிந்து விடுகின்றனர்.
இதைப்பற்றி அர்த்த சாஸ்திரத்தில் “வியசன ஸமுத்தேசம்” என்ற பிரகரணத்தில் விவரமாக கூறப்பட்டுள்ளது. அதன் ஸாரம் – “ஸ்திரீகளிடம் விசேஷமாக ஈடுபடுகின்றவன் விரைவில் மூன்றாவது பிரகிருதியாக அதாவது நபும்சகனாக ஆகக்கூடும். ஆண் சரிரத்திலுள்ள சக்ர நாசமே சர்வ நாசத்திற்கும் காரணம். குடியால் மதி மயங்கி பல அடாத காரியங்களைச் செய்யக்கூடும். வேட்டையில் விசேஷமாக ஈடுபடுகின்றவன் ஒருக்கால் யானை புலி போன்ற துஷ்ட மிருகங்களுக்கு இரையாகலாம். சூதாட்ட வெறியனுக்கு செய்யத் தகாதென்று எதுவுமில்லை. வீண் செலவு செய்யும் குபேரன் கூட பிச்சைக்காரனாகிவிடுவான். அதிக செலவும், சத் பாத்திரத்தில் கொடுக்கப்படாததும், கெட்ட பாத்திரத்தில் கொடுக்கப்பட்டதும் வீண் செலவாகவே கருதப்படும்.

எட்டு எட்டாக சொல்லப்படும்  நீதிகள்பிராமணர்களைத் துன்புறுத்த வேண்டும் என்று நினைத்தல், பிறகு அவ்விதமே செய்தல், அவர்களுடைய பொருளை அபகரித்தல், அவர்களைக் கொன்று விட வேண்டும் என நினைத்தல், அவர்களை தூஷிப்பதில் விருப்பம் கொள்ளுதல், அவர்களுடைய புகழில் வெறுப்பு கொள்ளுதல், எக்காரியத்திலும் அவர்களை நினைக்காமலிருத்தல், அவர்களிடம் இல்லாத குற்றங்களை அவர்கள் மேல் வீணாக சுமத்துதல் ஆகிய இந்த எட்டும் ஒருவம்ன் விரைவில் அழிந்து விடுவான் என்பதற்கு சூசனம் செய்யும் பூர்வ நிதானங்கள்

 நண்பர்களுடன் சேர்க்கை, ஏராள பொருள் வருமானம், செல்லப்பிள்ளை தன்னைத் தழுவிக் கொள்ளுதல், தம்பதிகள் மன ஒற்றுமையுடன் இன்பத்தை அனுபவித்தல், சரியான சமயத்தில் பிரியமான வார்த்தைகளை பேசுதல், தன் இனத்தவர்களுள் மிகப்பெருமையுடன் வாழ்தல், தான் விரும்பியதை அடைதல், ஜனங்களுடைய கூட்டத்தில் கௌரவிக்கப்படுதல் ஆகிய இந்த எட்டும் ஒருவனுக்கு சந்தோஷத்திற்கான காரணங்களாம்.
மெண்மையான அறிவு, உயர் குடி பிறப்பு, புலனடக்கம், கல்வி, வலிமை, நிதானமான பேச்சு, சத்பாத்திரத்திற்கு கொடுக்கப்படும் கொடை, நன்று ஆகிய இந்த எட்டு குணங்களும் ஒருவனுக்கு புகழைக் கொடுக்கும்


ஒன்பது துவாரங்களுடையதும், மூன்று தூண்களை உடையதும் (வாதம், பித்தம், கபம் என்று ஒரு விதத்தில் பொருள் கொள்ளலாம் – அல்லது அவித்யை, காமம் கர்ம ஆகிய மூன்று என்றும் பொருள் கொள்ளலாம்), சப்தம் முதலான் ஐந்து சாக்ஷிகளுடன் கூடியதுமாகிய ஜீவன் வசிக்கும் இந்த உடல் என்னும் வீட்டின் தத்துவத்தை எவன் அறிகிறானோ அவனே சிறந்த அறிவாளி.
“க்ஷேத்திரம்” எனப்படும் இவ்வுடல் அழியக்கூடியது. அதில் பிரகாசிக்கும் ஜீவன் பரமாத்மஸ்வரூபமே என்று அறிகின்றவன் சிறந்த அறிவாளி என்பது கருத்து.
“க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம்வித்தி ஸர்வக்ஷேத்ரேஷு பாரத” என்று கீதாசார்யனும் இதை வெளியிட்டிருக்கிறார்.
கள் குடித்தவன், கவனம் இல்லாதவன், பைத்தியம் பிடித்தவன், களைப்புற்றவன், கோபக்காரன், பசி எடுத்தவன், அவசரப்படுகின்றவன், உலோபி, பயங்கொண்டவன், காமவெறி கொண்ட்வன் ஆகிய இந்த பத்து பேரும் தர்மத்தின் தத்துவத்தை உணரமாட்டார்கள்.No response to “விதுர நீதி – 10”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman