Adsense

விதுர நீதி - 9


ஆறு ஆறாக சொல்லப்படும் நீதிகள்ஐஸ்வர்யத்தை அடைய விரும்புகின்றவன் அடியிற்கண்ட ஆறு குற்றங்களையும் அடியோடு ஒழிக்க வேண்டும். அளவுக்கு மிஞ்சின தூக்கம், மயக்கம், அவசியமில்லாத பயம், கோபம், சோம்பல், எக்காரியத்தையும் தாமதமாகவே செய்தல் - ஆகிய இவற்றில் ஈடுபட்டவர்கள் ஒருநாளும் முன்னேற்றமடைய முடியாது.


சாஸ்திரங்களைத் தெளிவாகக்கூறும் திறமையற்ற ஆச்சார்யன், குடிகளைக் காப்பாற்றாத அரசன், எப்போதும் பிரியமில்லாத வார்த்தைகளைப் பேசும் மனைவி, காட்டிற்குச் சென்று ஆடு மாடுகளாஇ மேய்க்காமல் கிராமத்திலேயே வசிக்க விரும்பும் இடையன், கிராமத்தில் இருந்து தம் தொழிலை கவ்னிக்காமல் காட்டில் வசிக்க வேண்டும் எனக் கருதும் நாவிதன் - ஆகிய இந்த ஆறு பேர்களையும் நம்பினால் ஓட்டைக் கப்பலில் ஏறி சமுத்திரத்தை கடக்க விரும்புகிறவனுடைய கதியே ஏற்படும்.


இந்த ஸ்லோகம் மூலத்தில் விட்டுப் போயிருக்கிறது. இதன் பொருளாவது.
எந்த மனிதனும் பின் வரும் ஆறு குணங்களை எக்காரணம் கொண்டும் கைவிடலாகாது - அவை, உண்மை, பிறருக்குதவுதல், விடா முயற்சி, கருணை, மன்னிக்கும் குணம் மற்றும் பொறுமை.

பிரதி தினம் பொருள் சேர்த்துக் கொண்டே இருத்தல், நோவு நொடி இல்லாமை, மனத்திற்கு இசைந்தவளாயும், பிரியத்தைப் பேசுகின்றவளுமான மனைவி, தனக்கு அடங்கியிருக்கும் பிள்ளை, பணத்தைத் தரும் படிப்பு இவ்வாறும், இவ்வுலகில் சுகத்தை அளிக்க வல்ல சாதனங்களாம்.

நல்ல படிப்பு படித்தவுடன், ஏராளமான வருவாயுள்ள ஓர் உத்தியோகம், உடனே தன் மனதிற்குப் பிடித்த பெண்ணின் லாபம், உசிதமான காலங்கள் அந்த பிரியாமனவளிம் இனிமையான சொற்களைக் கேட்கும் பாக்கியம், சரியான சமயத்தில் பிறந்த கீழ்படிந்து நடக்கும் பிள்ளை, பல துறைகளிலிருந்தும் பிரதிதினம் வருவாய் வந்துக் கொண்டு இருப்பது - ஆகிய இவை ஒருவனுக்கு சம்பவித்தால் அதைவிட இவ்வுலகில் வேறு என்ன சுகமிருக்கிறது.காமம்-குரோதம், சோஹம்-மோஹம், மதம்-அஹங்காரம் ஆகிய மனதின் ஆறு தோஷங்களை ஒருவன் அடக்கிவிட்டால், புலன்கள் அடங்கப்பெற்ற அந்த மனிதன் எந்த பாவமும் செய்யமாட்டான் - எத்துன்பத்திற்கும் ஆளாகமாட்டான்.


இந்த உலகத்தில், ஒரு ஆறு நபர்கள் மற்றொரு ஆறு நபர்களை அண்டியே பிழைத்து வருகின்றனர். அதாவது, திருடர்கள் ஏமாந்தவர்களை அண்டியும், வைத்தியர்கள் ரோகிகளை அண்டியும், ஸ்த்ரீகள் காமுகர்களை அண்டியும், யாகம் செய்துவிக்கின்றவர்கள், யாகம் செய்பவர்களை அண்டியும், அரசர்கள் சண்டை போடுகின்றவர்களை அண்டியும், அறிவாளிகள் மூடர்களை அண்டியும் பிழைக்கிறார்கள்.

ஒருவன் ஏமாறாமல், மிக ஜாக்கிரதையாக இருந்தால் அவனிடம் திருடன் என்ன செய்ய முடியும் ? ஒருவனுக்கு வியாதி இல்லையென்றால், வைத்தியனுக்கு அங்கு என்ன வேலை, ஆதலால் வியாதி வராமல் பார்த்துக் கொள்ளவேண்டுமென்பது தான் கருத்து. வைத்தியனை விரட்டிட வேண்டுமென்பது அல்ல. வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு என்பது பழமொழி. வைத்தியத்திற்கு கொடுத்தால் அதிகமான பொருள் செலவு - உடலுக்கு சிரமம் வேறு. அந்த கருத்தே இங்கு சொல்லப்படுகிறது. ஒரு ஊரில் வழக்கே இல்லாவிட்டால் அந்த ஊரில் கோர்ட்டுக்கு என்ன வேலை. “மூடர்களை அண்டியே கெட்டிக்காரர்கள் பிழைக்கிறார்கள்” என்ற சொல், இங்கு கௌரவர்களையும், பாண்டவர்களையும் கருத்தில் கொண்டு சொல்லப்பட்டது. மூடர்களுக்கு ராஜ்யத்தை ஆளும் திறமை இல்லாத்தால் அந்த ராஜ்யம் காலக்கிரமத்தில் அறிவாளிகளை வந்து அடைந்துவிடும். அவ்விதம் செல்லாமலிருக்க மூடர்கள், அறியாமையைத் தான் ஒழிக்க முற்பட வேண்டுமேயன்றி, அறிவாளிகளை தூஷிப்பதால் எந்த பயனும் இல்லை.


பசுக்கள், பிறறிடமிருந்து பெறும் சேவை, விவசாயம், மனைவி, வித்யை, தமக்கு சமமில்லதவரின் நட்பு, ஆகிய இவ்வாறையும் இடைவிடாமல் கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். தவறினால் இவை நசிந்து விடும்.

மாடோ பாடோ என்பது பழமொழி. மாட்டை வாங்கி தொழுவத்தில் கட்டினால் மட்டும் போதாது - அதனுடன் இடைவிடாது பாடுபட வேண்டும். அப்போது தான் பலன் கிடைக்கும்.

நிலத்தை வாங்கிப்போட்டு விட்டு, நிலச்சுவாந்தார் நகரத்திலேயே உல்லாசமாக கழித்தால், அந்த நிலம் அவருக்கு சொந்தமாந்தாக இல்லாமலே ஆகிவிடும்.

விதயை பயனுள்ளதாக ஆக வேண்டுமானால், அதை எப்பொதும் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் மறந்து விடும். மிகப்பரிச்சயமுள்ள ஒரு விஷயத்தை எடுத்துரைப்பதானாலும், விஷயமுள்ளவர்கள் பூர்வாலோகனம் செய்யாமல் இருக்க மாட்டார்கள். அதன் காரணமாகவே வேதத்தை பிரதி தினம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும் என விதிக்கப்பட்டிருக்கிறது.

விவாஹம் ஆனபிறகு பிரதி தினம் அக்னியை ரக்ஷித்து வர வேண்டும். அதற்காக மனைவி கூட்வே இருக்க வேண்டும் என்பது சாஸ்திரங்களின் முடிவு. அந்த முடிவில் பல கருத்துகள் அடங்கியிருக்கின்றன. மனைவியின் ஒழுக்கம் மாறாமல் வைத்தலும் அதன் முக்கிய நோக்கமாகும். குடிப்பழக்கம், கெட்டவர்களுடன் சேர்க்கை, கணவனை விட்டுப் பிரிந்திருத்தல், தனியாக தேசாடனம் செய்தல், பகலில் தூங்குதல், அடிக்கடி பிறர் வீட்டில் தங்கியிருத்தல் ஆகிய இவ்வாறும், ஸ்த்ரிகளைக் கெடுத்து விடும் என்கிறார் மனு.


கல்வியை கற்றபிறகு சீடர்கள் ஆசிரியர்களையும், திருமணத்திற்குப் பின் தாயையும், காமம் தீர்ந்த பின் மனைவியையும், காரியம் முடிந்த பிறகு அக்காரியத்திற்கு உதவியவனையும், சமுத்திரத்தைக் கடந்தபின் கப்பலையும், வியாதி குணமானபிறகு வைத்தியர்களையும் பெரும்பாலோனோர் அலட்சியம் செய்கின்றனர். அது பெரும் தவறு. ஒருவர் செய்த உதவி சிறிதானாலும், அதை மறக்கலாகாது.


நோயற்றவாழ்வு, கடனில்லாமலிருத்தல், சுற்றத்தாரைப் பிரிந்து வெளிநாடுகளில் வாழாமலிருத்தல், நல்ல மனிதர்களுடன் ஸ்நேகம் கொண்டிருத்தல், சொந்த புத்தியைக் கொண்டு காரியத்தை தீர்மாணித்து அதன்படி நடத்தல், பயமற்ற வாழ்க்கை இவ்வாறும் இந்த உலகத்தில் சுகத்தை அளிக்க வல்லவை.

 பொறாமையுடையவன், அளவுக்கு மிஞ்சிய தயையுடையவன், எவ்வளவு வருமானம் வந்தபோது சந்தோஷமற்று இருப்பவன், கோபக்காரன், எப்போதும் எல்லாவற்றையும் சந்தேகிக்கிறவன், பிறருடைய பாக்கியத்தை அண்டிப் பிழைக்கிறவன் ஆகிய இவ்வாறு பேரும் எப்போதும் துன்பத்தையே அடைகின்றனர்.

No response to “விதுர நீதி - 9”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman