Adsense

சிதறல்கள் 15


சில நாட்களுக்கு முன் நான் எழுதிய ஒரு பதிவு இப்போது எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. முக்கியமாக ஒரு விஷயத்தைப் பற்றி அப்போது சொல்ல நினைத்தேன்.

அது Bionics துறையில் சமிபத்தில் நிகழ்ந்த முன்னேற்றம் பற்றி வந்த செய்தி. மிகவும் ஆச்சரியப்படுத்ததோடு மட்டுமல்லாமல், நம்பிக்கையூட்டுவதாகவும் இருந்தது. க்ளையர் லோமாஸ் என்ற பெண்மணி ஒரு மாரத்தான் நடந்து (43 கிலோமீட்டர்) சாதனை புரிந்திருக்கிறார். முக்கியமான விஷயம், அவர் ஒரு விபத்துக்குப் பின் முழுமையாக செயலற்ற கால்களைப் பெற்றிருந்தார் !
Photo Copyright: Peter Macdiarmid/Getty Images
பயானிக் உடை அணிந்துக் கொண்டு அவர் செய்திருக்கும் இந்த சாதனையில் இரண்டு முக்கியமான செய்திகள். முதலாவது அவரது அந்த பயானிக் உடையை வடிவமைத்தவரும் பராலடிக் என்பது. இஸ்ரேலி இஞ்சினியர். அன்னாரைப் பற்றிய வீடியோ கீழே



இவரது இந்த தீர்வு Paraplegicsகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும். இவர்களையும் தாண்டி Quadraplegics என்ற வகையானவர்கள் இருக்கிறார்கள்.  இரண்டு கைகள் மற்றும் கால்கள் இரண்டுமே முற்றிலுமாக செயலற்றதாக அமைந்தவர்கள். அவர்களுக்கான தீர்வையும் கண்டறிந்திருக்கிறார்கள் என்பது தான் அந்த இரண்டாம் செய்தி.

மூளையிலிருந்து சிக்னல்களை சின்ன சின்ன எலக்ட்ரோடுகள் வைத்து உருவுகிறார்கள். பின்னர் அந்த சிக்னல்களை புரிந்துக் கொள்ளும் நிரலிகள் வழியாக கைகளையும் கால்களையும் இயங்கச் செய்கிறார்கள். சிக்கல் என்னவென்றால், இந்த எலக்ட்ரோடுகளைப் பதியச் செய்வதால் சிறிய ஒயர் வழியாக அவற்றை மூளைக்கு வெளியே எடுக்க வேண்டி இருந்தது. அதனால் தொற்று அபாயம் இருப்பதால் அதற்கான மாற்றையும் இப்போது கண்டறிந்து இருக்கிறார்கள்.

சிறிய குல்லா ஒன்றை தலையில் கவிழ்க்கிறார்கள் - அதன் வழியாக சிக்னல்களை எடுத்து பின்னர் அவற்றை ப்ராஸஸ் செய்கிறார்கள். இந்த வகையிலிருக்கும் தீர்வு இன்னும் வணிக வடிவம் பெறவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் அதுவும் நடந்து விடும். பின்னர், பக்கவாதத்தால் செயலற்றவர்களுக்கு முழுமையான தீர்வாக இது போன்ற பயானிக் உடைகள் அமையும். அப்பா இருந்திருந்தால் ஒன்று வாங்கிக் கொடுத்திருப்பேன்.

No response to “சிதறல்கள் 15”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman