Adsense

விதுர நீதி 7


நான்கு நான்காகக் கூறப்படும் நீதிகள்

ஒரு அரசன் எவ்வளவு வலியமையானவனாயினும், கீழ்கண்ட நால்வரின் ஆலோசனைகளைப் பெறுதலாகாது
1) சிறிய அறிவு கொண்டவர்கள்
2) காரிய சாமர்த்தியமற்றவர்கள் - விரைந்து செய்ய வேண்டியவற்றை தாமதித்துச் செய்கின்றவர்கள்
3) சோம்பேறிகள்
4) முகஸ்துதி செய்பவர்கள்



விபவமுள்ள ஒரு கிருஹஸ்தன் அடியிற்கண்ட நான்கு நபர்களை பூர்ண வசதியளித்து வீட்டில் வசிக்கும் படி செய்ய வேண்டும்.
1) வயதான் ஒரு ஞாதி - அவன் நமக்கு குலதர்மங்களை உபதேசிப்பான்
2) தற்காலம் கொஞ்சம் சிரம தசையிலிருக்கும் ஒரு உத்தமக்குடி பிறப்பாளன் - அவன் குடும்பத்தில் இருக்கும் சிறுவர் சிறுமிகளுக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுக் கொடுப்பான்
3) ஏழையான நண்பன் - அவன் நமக்கு நன்மை தீமைகளை எடுத்துரைப்பான்
4) குழந்தையில்லாத சகோதரி - அவள் நமது சொத்தை ரக்ஷிப்பாள்

தேவதைகளுடைய விருப்பம் மஹான்களுடைய திறமை, அறிஞர்களுடைய விநயம், நாசத்தையளிக்கும் திருட்டு ஆகிய செயல்கள் உடனேயே பலனையளிக்கும் என இந்திரனுக்கு பிரஹஸ்பதி கூறினார்.

அக்னிஹோத்ரம், மௌனம், அத்தியயணம், யாகம் ஆகிய இந்நான்கும் முறைப்படி அனுஷிக்கப்பட்டால் மோக்ஷம் வ்ரையில் உள்ள பயனை அளிக்கும். இவற்றையே கௌரவத்திற்கென்றே முறை தவறி ஆடம்பரமாக அனுஷ்டித்தால் தீங்கையே (அதனால் பயத்தை) விளைவிக்கும்.

No response to “விதுர நீதி 7”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman