Adsense

விதுர நீதி 6


மூன்று மூன்றாக சொல்லப்படும் நீதிகள்

* மனிதர்களுக்கு மூன்று வழிகள் என்று வேதமறிந்தவர்கள் உரைத்திருக்கிறார்கள் - நல்வழி, தீயவழி, இவ்விரண்டுமற்ற பொதுவழி.

* மனிதர்களும் அவ்வண்ணமே மூன்று விதத்திலானவர்கள் - நல்லவர்கள், தீயவர்கள், இரண்டுமற்ற பொதுகுணம் கொண்டவர்கள். அரசர்கள், அவர்களின் குணங்களுக்கு ஏற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்
* மனைவி, மகன் மற்றும் அடிமை ஆகிய இம்மூவரும் தமக்கென பொருள் கொள்ளலாகாது- அப்படியே அவர்கள் கொண்டாலும் அது அவர்களுடைய உரிமை கொண்டவனையே சாரும்
பிறர் பொருளை அபகரித்தல், பிறர் மனைவியை நேசித்தல் மற்றும் நல்ல எண்ணமுள்ள சிநேகிதர்களை தியாகம் செய்தல் ஆகிய இம்மூன்றும் ஒருவனை அடியோடு அழித்துவிடும்

நரகத்திற்கு மூன்று வாயிற்படிகள் - காமம், குரோதம் மற்றும் லோபம். அவற்றில் ஈடுபட்டால் ஆத்மஸ்வருபம் இருக்குமிடம் தெரியாமலே போய்விடும். ஆதலால் அவற்றை அறவே ஒழித்து விட வேண்டும்.
* எதிரியின் துன்பத்தைப் போக்குவது என்பது வரமளித்தல், பிள்ளை பேறு பெருதல் மற்றும் ராஜ்யத்தை ஸ்விகரித்தல் ஆகிய மூன்றின் நன்மைகளும் சேர்ந்து கிடைப்பதற்கு சமம்
* உன்னை பின்பற்றுபவன், அபயம் என்று வந்தவன், விருந்தினன் இம்மூவரையும் எந்த துன்பத்தில் கைவிடலாகாது.

* இக்குறியிட்ட ஸ்லோகங்கள் மூல நூலில் ஆசிரியர் தொகுக்கவில்லை. ஒருவேளை அர்த்தங்களில் தவறிருப்பின் எனக்குத் தெரியப்படுத்தவும்

No response to “விதுர நீதி 6”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman