Adsense

விதுர நீதி 5


இரண்டு இரண்டாகக் கூறப்படும் நீதிகள்:

 கடுஞ்சொற்களைப் பேசாமல் இருத்தல், துஷ்டர்களைக் கொண்டாடாமல் இருத்தல் ஆகிய இவ்விரண்டையும் பின்பற்றும் மனிதன் இவ்வுலகில் நன்கு விளங்குவான்.
பிறரால் கொண்டாடப்படும் ஒருவனை அதற்க்குரிய காரணங்களை அறியாமலே போற்றிவரும் மூடனும், பிறர் ஆசைப்படும் பொருளையே ஆசைப்படும் ஸ்திரீயும் சொந்தபுத்தியற்றவர்கள்
கையில் பொருள் இல்லாதவன் பல விஷயங்களில் வைக்கும் ஆசை, சக்தியற்றவன் கொள்ளும் கோபம் ஆகிய இவ்விரண்டும், கூர்மையான இரு முட்களைப் போல உடலைத் துன்புறுத்தும்.
 செய்யவேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்காமலிருக்கும் கிருஹஸ்தன், எப்போதும் பல காரியங்களை செய்து கொண்டிருக்கும் சன்னியாசி இவ்விருவரும் அவர்களுடைய இந்த விபரீத செயல்கள் காரணமாக நன்கு விளங்க மாட்டார்கள்.

சக்தியுடையவனாக இருந்தும் பொறுமை காப்பவனும், ஏழையாக் இருந்தும் தான் செய்கின்றவனும் சுவர்கத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில் இருப்பவர்கள் என்று கருதப்படுகின்றனர்.
நியாயமாக சம்பாதித்தப் பொருளை உத்தமபாத்திரத்திற்கு கொடுக்காமலிருத்தலும் (நல்ல விஷயத்தில் செலவு செய்யாமலிருத்தல்) கெட்ட விஷயங்களுக்கு செலவு செய்தலும் அதிக்கிரமங்கள் (அடாத செயல்கள்)
தானம் செய்யாத தனிகன், நியமங்களை சரிவர அனுஷ்டிக்காத ஏழை இவ்விருவரையும் கழுத்தில் பெரிய கற்பாறையைக் கட்டி சமுத்திரத்தில் தள்ளிவிட வேண்டும்.
யோகத்தில் சிறந்தவரும், போரில் நற்கதியடைந்தவரும் சூரிய மண்டலத்தில் திகழ்வார்கள்

No response to “விதுர நீதி 5”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman