Adsense

விதுர நீதி 4


ஒன்று ஒன்றாகக் கூறப்படும் நீதிகள்

மு கு: இந்தப் பகுதியில் வரும் ஸ்லோகங்கள் அனைத்திலும் ஒன்று என்ற எண்ணிக்கையின் அடிப்படையில் உரைக்கப்பட்ட நீதிகளைக் காணலாம்


கூட இருப்பவர்களுக்கு அளிக்காமல் உணவை ஒருவனே உண்டு, ஆடையையும் ஒருவனே உடுத்திக் கொள்ளுகின்றவனை விட துஷ்டன் என வெறு யாரைக் கூற முடியும்.
ஒருவன் பாவங்களைச் செய்வான். அதனால் ஏற்படும் சில நன்மைகளைப் பலர் அனுபவிப்பார்கள். ஆனால், பாவத்தின் பயனாகிய நரகம் முதலியவை, நன்மைகளை அனுபவிக்கும் பொதுமக்களுக்குச் சம்பவிக்கமாட்டா. பாவத்தைச் செய்தவனுக்கே அவை ஏற்படும்.
சிறந்த வில்லாளியால் விடப்பட்ட அம்பு ஒருவனைக் கொல்லலாம். அல்லது, கொலாமல் இருக்கலாம். ஆனால் அறிவாளியில் ஓர் சிறந்த ஆலோசனை எதிரியையும் அவன் ராஜ்ஜியம் முழுவதையுமே அழித்து விடும்.
 
“ஒன்றால் இரண்டை ஜெயித்து நான்கினால் மூன்றை வசமாக்கிக் கொள். ஐந்தை ஜெயித்து, ஆறை அறிந்து ஏழை விட்டு சுகமாக இரு” என்று இதற்கு நேரடியான பொருள் ஏற்படுகிறது. இங்குள்ள ஒன்று,இரண்டு முதலியவற்றை அடியிற்கண்டவாறு உரையாசிரியர்கள் விளக்கியுள்ளார்கள். 
ஒன்றால் - ஒரே உறுதியான புத்தியால், இரண்டை - செயத்தகுந்தது, செய்யத் தகாதது - இவ்விரண்டையும் தீர்மானம் செய்து, மூன்றை - சிநேகிதர், விரோதி, விரோதமுமில்லாமல், சிநேகமுமில்லாமல், நடுநிலைமையில் இருப்பவர்கள் இம்மூவரையும். நான்கினால் - ஸாம, தான, பேத, தண்டம் ஆகிய உபாயங்களைக் கொண்டு  (சினேகிதனை ஸாம அல்லது சமாதான முறையிலும், விரோதியை நான்கு உயாயங்களாலும், நடுநிலைமையில் இருப்பவனை ஸாமத்தினாலும், பேதத்தினாலும்) வசமாகச் செய்து வாழ வேண்டும்.
ஐந்தை - ஐந்து இந்திரியங்களை ஜெயித்து, ஆறை - ஸந்தி, விக்ரஹம், யானம் ஆஸனம், த்வைதீபாவம், ஸமாச்ரயணம் என ராஜ நீதியில் கூறப்பட்ட ஆறு உபாயங்களை அறிந்து, ஏழை - ஸ்த்ரீகளிடம் மோஹம், சூதாட்டம், வேட்டை, குடி, கடுஞ்சொல், கொடிய தண்டனை, பொருளை வீணாக விரயஞ் செய்தல் ஆகியி ஏழையும் ஒழித்துச் சுகமாக இரு
இதற்கு வேறு விதமாகவும் பொருள் கூறலாம். உறுதியான புத்தியால், இது நித்யம், இது அநித்யம் என்ற இரண்டையும் தீர்மானம் செய்து, சமம், தமம், உபாரம், சிரத்தை என்ற நான்கினால், காமம், குரோதம், லோபம் ஆகிய மூன்றையும் உனக்கு வசமாகச் செய்துகொள்.
ஐந்து இந்திரியங்களை ஜெயித்துப் பசி, தாகம், சோகம், மோஹம், ஜரை, ம்ருத்யூ ஆகிய ஆறையும் அறிந்து அதாவது பசியும் தாகமும், பிராணனைச் சேர்ந்தவை, சோகம் மோஹம் ஆகிய இரண்டும் மனதைச் சேர்ந்தவை, ஜரை பிருத்யூ ஆகிய இரண்டும் உடலைச் சேர்ந்தவை, இவையெல்லாம் ஆத்மாவைச் சேர்ந்தவையல்ல என்பதை உணர்ந்து, ஐந்து இந்தியங்கள், புத்தி, மனஸ் ஆகிய ஏழையும் தியாகம் செய்து சுகமாக இரு.
விஷம் ஒருவனையே கொல்லும். ஆயுதத்தாலும் ஒருவனே கொல்லப்படுகிறான். ஆனால் மந்திரிகளின் விபரீத ஆலோசனை நாடு, மக்கள் இவற்றுடன் கூடிய அரசனையே அழித்துவிடும்.
இனிமையான வஸ்துவை ஒருவனே தனியாக புசிக்கலாகாது. விஷயங்களை ஒருவனாக ஆலோசிக்கக்கூடாது. தனியாக வெகுதூரம் பயணிக்கலாகாது. பலர் தூங்கிக் கொண்டிருக்கையில் ஒருவன் மட்டும் விழித்துக் கொண்டிருக்கலாகாது.
சமுத்திரத்தைக் கடக்க கப்பல் மட்டுமே சாதனமாவது போல, ஸ்வர்கத்திற்குச் செல்ல ஒரே வழி உண்மை மட்டுமே. இந்த விஷயதைத் தான் நீங்கள் அறியவில்லை.
பொறுமையுள்ளவர்களிடம் இருக்கும் குற்றம் ஒன்றே ஒன்றுதான். அதாவது திறமையற்றவர்கள் அவர்களை சாமானிய மனிதனாகக் கருதுகிறான்.
உண்மையில் அது ஒரு குற்றமாகக் கருதலாகாது. பொறுமையே பிராணிகளுக்கு நிகரற்ற பலம். சக்தியுள்ளவர்களுக்கு அது ஓர் சிறந்த ஆபரணம்.
பொறுமையினால் சாதிக்க இயாலாதது எதுவும் உண்டோ. பொறுமையெனும் ஆயுதத்தை ஏந்தி நிற்பவனை துஷ்டர்கள் என்ன் செய்து விட முடியும்.

உலர்ந்த புல் பூண்டற்ற தரையில் விழுந்த நெருப்புத் துண்டு தானே அணைந்து விடும். பொறுமையற்றவன் தானும் கெட்டுப் பொறரையும் கெடுப்பான்.
தர்மம் ஒன்றினாலேயே சிறந்த சிரேயஸை அடைய முடியும். பொறுமை ஒன்றாலே தான் சாஸ்வதமன ஷாந்தியைப் பொறலாம். அறிவு ஒன்றே அளவு கடந்த திருப்தியைத் தரும். அஹிம்ஸை ஒன்றே சுகத்தைத் தரும்.

No response to “விதுர நீதி 4”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman