Adsense

விதுர நீதி - 3



மூடர்களின் லக்ஷணங்கள்

அறிஞர்களின் லக்ஷணங்களைக் கூறிவிட்டுப் பின்னர் அறிவீனர்களின் லக்ஷணங்களைப் பற்றிக் கூறுகிறார். அவர்களைப் போல நாம் நடந்துக் கொள்ளக்கூடாது என்று அறிவுருத்துவதே இதன் நோக்கம்.


 நூல்களை முறைப்படிக் கேட்டறியாமல், எல்லாம் கற்றதாகக் கருதி திமிருடன் இருப்பவனும், கொஞ்சம் பொருள் கூட இல்லாமல் மிகப் பெரிய காரியங்களைச் சாதிக்க விரும்புகின்றவனும், நியாயமான வேலைகளில் ஈடுபடாமல் சூதாட்டம் முதலியவற்றால் பொருளை சம்பாதிக்க விரும்புகின்றவனும், அறிஞர்களால்மூடன்எனக் கருதப்படுவான்தன் சொந்தக் காரியங்களச் சரிவர செய்யாமல் பிறர் காரியங்களில் ஈடுபடுகின்றவனும், சிநேகிதனிடம் உண்மைக்கு மாறாக நடக்கின்றவனும் மூடன் எனக் கருதப்படுவான். இதற்கு சகுனியும் துரியோதனனும் சரியான உதாரணமாவார்கள்.
தன் சொந்தப் பிரயோஜனத்தைக் கருதாமல், பிறருக்கு உபகாரம் செய்வானேயாகில் அவனை சத்புருஷன் என்று மகாகவிபர்த்ருஹரிகூறியுள்ளார். இங்கே அப்படிப்பட்ட மனிதனை மூடன் என்று விதுரர் சொல்லவில்லை. ஒருவன் கட்டாயம் செய்தேயாகவேண்டும் என்று சில கடமைகள் உண்டு. உதாரணமாகத் தன் பெண், பிள்ளை, , மனைவி, தாய், தந்தை இவர்களை அவசியம் ரக்ஷித்தே ஆகவேண்டும். அவரிகளையெல்லாம் கவனிக்காமல் பிறருக்காகவே ஒருவன் உழைத்து வந்தானேயானாகில் அவனைத்தான் “மூடன்” என்று விதுரர் குறிப்பிடுகிறார்.



 
மேலும் தன்னிடம் பிரியமில்லாதவர்களை நேசிப்பான். பிரியமுள்ளவர்களை வெறுப்பான். பலம் பொருந்தியவர்களிடம் விரோதித்துக் கொளவான். தானே நேரில் செய்ய வேண்டிய காரியங்களை சேவகர்களைக் கொண்டு செய்விப்பான். எல்லா விஷயங்களிலும் யாரிடத்திலும் எப்போதும் சந்தேஹத்துடனே பழகுவான். விரைவில் செய்து முடிக்க வேண்டிய காரியங்களை மிகவும் தாமதப்படுத்துவான். தேவர்கள் பித்ருக்கள் ஆகியோர்களைப் போற்றமாட்டான் (நாஸ்திகர்களை விதுரர் மூடர்களாகக் கருதுகிறார் என்பது இதிலிருந்து தெரியவருகிறது)



அழைக்கப்படாமலே பிறர் வீட்டிற்குள் நுழைவான். கேட்கப்படாமலே பல வார்த்தைகளைப் பேசிக் கொண்டிருப்பான். தன்னிடமுள்ள குற்றங்களாஇக் கவனிக்காமல் அக்குற்றங்களுடன் கூடிய பிறரை நிந்திப்பான். திறமையற்ற காரணத்தால் திடீரென்று கோபித்துக் கொள்வான். தன்னுடைய சக்திய அறியாமலே தன்னால் அடைய முடியாத பொருளை விரும்புவான். அவற்றையும் இருக்கும் இடத்தை விட்டு எழுந்திருக்காமலே அடைய ஆசைப்படுவான்.

No response to “விதுர நீதி - 3”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman