கிழக்கிலிருந்து வெளிவரும் ஆழம் இதழ் சனிக்கிழமை சாயங்காலம் கையில் கிடைத்தது. பளிச்சென்று இருக்கிறது. முழுக்க முழுக்க கட்டுரைகள் தான். நிகழ்வுகளுக்காக சிறிய இடம். கட்டுரை இல்லாத பக்கங்களில் கிழக்கு புத்தகங்களின் விளம்பரம். இலக்கிய பத்திரிக்கைக்கும் வெகுஜன பத்திரிக்கைக்கும் நடுவில் இருகிறது இந்த இதழ். கவிதைகளும், ஜோக்குகளும் இல்லை (இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்பவர்கள் இந்த பத்திரிக்கையை நிச்சயம் விரும்புவார்கள்).
படித்ததில் முக்கியமானதாகக் கருதும் இரண்டு விஷயங்கள்
1) முன்னூறு ராமாயணங்களும் மூர்க்கத் தாக்குதல்களும்
2) அணுமின்சாரம் குறித்த கவர் ஸ்டோரி
இதன் வடிவமைப்பு எனக்குப் பிடித்திருக்கிறது. அழுத்தமான பக்கங்கள். சந்தா அடிப்படையிலானதா அல்லது விகடனுக்குப் பக்கத்தில் செய்தித் தாள் கடைகளில் தொங்கப்போகிறதா என்பதெல்லாம் தெரியவில்லை. விநியோக முறையை, இந்த பத்திரிக்கையை அறிமுகப்படுத்தும் போது சொல்வார்கள் என்று நினைக்கிறேன்.
பத்து வருடங்களுக்கு முன்பு விகடன் மேல் தகர்ந்த நம்பிக்கையை (தமிழ் ரீடர்ஸ் டைஜஸ்ட்) பூர்த்தி செய்யுமா என்ற கேள்வியுடனே நான் எந்த ஒரு புதிய இதழையும் அனுகுகிறேன். மிகுந்த நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது முதல் இதழ். போகப் போகத் தெரியும்.
இதில் என்னுடைய சிறிய கட்டுரை ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது.




No response to “ஆழம் இதழ்”
Post a Comment
Trackbacks
Leave a trackback