இந்த வருடம் எனக்கு நிறைவாகவே அமைந்தது. புதிய முயற்சிகள் திருப்தியாக முடிந்தன. எனக்கு நான் இட்டுக்கொண்ட் இலக்குகளை முடித்தேன். ஆனால் 2011 என்னை வலுவாகப் பிழிந்து எடுத்தது. மூச்சு விடக்கூட நேரமில்லை. திருப்தி. கடவுளுக்கு நன்றி.
இந்த வருடத்தில் நான் சிதறல்கள் எழுத ஆரம்பித்தேன் - ஆறு மாதத்தில் இது 12 வது சிதறல். நான் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் என நினைப்பது இந்த எழுத்தில் தான். உண்மையில் நான் இதை நேரம் கிடைக்கும் போது செய்கிறேன். இதற்காக இதுவரை தனியாக நேரத்தை ஒதுக்கிச் செய்யவில்லை. யாராவது குரல் வளையை நெரித்தால் தனியாக நேரத்தை ஒதுக்குவேன் அவ்வளவே. இதை நான் வரும் வருடத்தில் மாற்ற நினைக்கிறேன். தினமும் 60 நிமிட படிப்பும் 30 நிமிட எழுத்தும் கட்டாயம் வேண்டும் என நேரத்தை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். பார்ப்போம் எவ்வளவு தூரம் செல்கிறதென்று. இதுவரை நான் எழுதிய வருடங்களில், அதிகமாக எழுதியது 2012இல் தான் என்று அமைந்தால் சந்தோஷம். (இப்படி முதலிலேயே சொல்லிவிட்டால், நாளை யாராவது கேலி செய்வார்களோ என்ற பயத்திலாவது கொஞ்சம் ஓடலாம்)
2011இல் நான் செய்ததில் உருப்படியான விஷயம் என்று நான் நினைப்பது, (with due respect to Twitter and its fans) ட்விட்டரில் வெறும் பார்வையாளனாக என்னை நான் மாற்றிக் கொண்டது. ட்விட்டர், செய்தியோடைகளைப் போல முக்கியமான விஷயங்களை அறிந்துக் கொள்ளவும், பகிரவும் அற்புதமான ஊடகம். ஆனால், அர்த்தமேயில்லாத அக்கப்போர்கள் கொஞ்சம் அதிகம். பல சமயங்களில் சம்பந்தமேயில்லாத விஷயங்கள் தான் என் டைம்லைனில் அதிகம் தென்பட்டன. இப்போதைக்கு நான் ட்விட்டரில் செலவிடும் நேரம் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 10 நிமிடம். அதிலேயே, எனக்குத் தேவையான விஷயங்களை பெரும்பாலும் அள்ளிவிட முடிகிறது.
-oOo-




No response to “சிதறல்கள் - 12”
Post a Comment
Trackbacks
Leave a trackback