இந்த வெள்ளிக்கிழமையோடு இப்போது பணிபுரியும் இந்த கம்பெனியிலிருந்து விலகுகிறேன் (இரண்டாவது கம்பெனி). ஒன்பது வருடம். ஓடியதே தெரியவில்லை. நிறைய கற்றுக் கொண்டேன். என்னை அடுத்தடுத்த நிலைக்குத் தள்ளிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. சந்தோஷமாகவே இருந்தேன். நன்றி.
சிதறல்கள் - 5
பேஞ்ஜோ
இந்தப் பேரைக் கேட்டதும் எனக்கு என்னுடன் ஸ்கூலில் படித்த பாலா தான் நியாபகத்துக்கு வந்தான். பேஞ்ஜோ (என் நினைவு சரியென்றால்), 80களின் இறுதியில் தொலைக்காட்சியில் வந்த ஒரு நாடகத்தில் காத்தாடி ராமமூர்த்தி நடித்த கதாபாத்திரத்தின் பெயர். ஷாலினி குட்டிப் பெண்ணாக நடித்த நாடகம். நட்டு கழண்ட ரோபோ கதாபாத்திரம் என்று நினைக்கிறேன். கேஸ் சிலிண்டர் என்று நினைத்து போஸ்ட்பாக்ஸை தூக்கிக் கொண்டு வந்து விடும் அந்த ரோபோ. அது போல சில கெக்கெபெக்கே காரியங்கள் செய்து வாண்டுப் பசங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
பதிவு வகை::
சிதறல்கள்



