Adsense

சிதறல்கள் - 6


இந்த வெள்ளிக்கிழமையோடு இப்போது பணிபுரியும் இந்த கம்பெனியிலிருந்து விலகுகிறேன் (இரண்டாவது கம்பெனி). ஒன்பது வருடம். ஓடியதே தெரியவில்லை. நிறைய கற்றுக் கொண்டேன். என்னை அடுத்தடுத்த நிலைக்குத் தள்ளிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. சந்தோஷமாகவே இருந்தேன். நன்றி.


நான் கிளம்பும் விஷயம் தெரிந்து சில பல ஜூனியர்கள் பேசினார்கள். அதில் சிலர் முதல் முறையாக மனம் திறந்து பேசினார்கள். கடந்த ஐந்தாண்டுகளுக்குள் ஐ டி துறைக்குள் வந்தவர்கள். அவர்களிடம் நான் பார்க்கும் பொதுவான அம்சம் - குழப்பம். சற்று அதிகமாகவே இருக்கிறது. பத்து பைசா பெறாத விஷயத்திற்கு அதிகமாக அலட்டிக் கொள்கிறார்கள். 

ஸ்டாக் மார்க்கெட் கூட விழுகிறதே, அடுத்த ரிஸஷன் வருவதற்கு அறிகுறியா என்று கேட்கிறார்கள். L1 விசா இண்டர்வியூ ரிஜக்ட் ஆனதற்குப் பின் தன் கரியர் என்ன ஆகுமென்று கவலைப்படுகிறார்கள். கம்பெனியைப் பற்றி அவர்களுக்குத் தெரியாதா ஏதோ ஒரு விஷயம் எனக்குத் தெரிந்து நான் எஸ்ஸாகிறேனோ என்று நினைத்து, சாமர்த்தியமாக வாயைக் கிண்டுவதாக நினைத்துக் கொள்கிறார்கள். சிரிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

மனிதர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு பத்து வருடங்களிலும் ஒரு தேக்கம் வரும். 20 வயது மாதிரி, 30 கிடையாது. 30 மாதிரி 40 இல்லை. அந்த தேக்கத்தை அனுபவத்தைக் கொண்டு மீண்டு வருகிறோம். ஆனால் பணியிடங்களில் ஒவ்வொரு 5 வருடங்களிலும் ஒரு தேக்கம் வரும். பொதுவாக IT Service கம்பெனிகளில் வேலை செய்பவர்களுக்கு முக்கியம் என நான் நினைப்பது மனம் சார்ந்த அறிவுரைகளும் வழிகாட்டல்களும் தான். தொழில்நுட்பத்தில் யாரும் குறைந்தவர்கள் இல்லை. சில அறிவுரைகள்...

1)  உங்கள் கரியரை 5 வருடக் கணக்காக பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு 5 வருடத்திற்கும் ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொள்ளுங்கள் - அந்த இலக்கை நோக்கி நகருங்கள் (ஒவ்வொரு முறையும் இந்த வேலை எனக்கு சரியானது தானா, நான் ஏதாவது புதிதாக கற்றுக் கொண்டேனா என்று கேட்டுக் கொண்டே இருங்கள்)
2) உங்களுக்கென்ற நம்பிக்கையான வட்டத்தை அலுவலகத்தில் உருவாக்கிக் கொள்ளுங்கள். அவர்களிடம் கம்பெனி பற்றியும் Industry பற்றியும் விவாதியுங்கள். பிஸினஸ் மெகஸின்கள் படியுங்கள். கம்பெனிக்குள் Mentorஐ தேர்ந்தெடுங்கள். நீங்கள் சிலரைத் தேர்ந்தெடுத்து mentor செய்யுங்கள்.
3) காதுகளையும் கண்களையும் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். எது புரளி எது நம்பத்தகுந்த செய்தி என்பதை இனம் காண கற்றுக் கொள்ளுங்கள். பொதுவாக இன்னிக்கு ஹாட் நியூஸ் தெரியுமா என்று அடிக்கடி ஹாட் நியூஸ் சொல்பவர்களை தவிர்த்து விடுங்கள்
4) ஓரிரு வருடம் ஏதேனும் ஒரு சாதாரண ப்ராஜெக்ட்டில் வேலை செய்வதால் உங்கள் கரியர் வீழ்ந்து விடாது. அதை சுவாரஸ்யமான சவாலாக ஏற்றுக் கொண்டு, உங்கள் அடுத்த நிலைக்குத் தேவையான ப்ராஜெக்ட்டுக்கோ, டெக்னாலஜிக்கோ ட்ராண்ஸ்ஃபர் வாங்க negotiate செய்யுங்கள் (தப்பில்லை, பொதுவாக எல்லா மேனேஜர்களும் தங்களுக்கு அவசியமான சமயத்தில் உதவியவர்களுக்கு பிரதியுதவி செய்ய தயங்க மாட்டார்கள்)
5) எந்த காரணம் கொண்டும், மனிதர்களோடு பிணக்குகளை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள் People are more important than performances
6) உங்கள் ஒருவரால் மட்டுமே உங்கள் நிறுவனம் ஏற்றம் பெறுவதும் இல்லை வீழ்வதும் இல்லை. நீங்கள் ஆற்றுவது ஒரு பங்கு, அவ்வளவே
7) உங்களுக்கு என்ன தேவை/ எது சரி என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எந்த வழியில் நீங்கள் வளர விரும்புகிறீர்கள் என்பதை தீர்மாணம் செய்து அந்த வழியில் வளரும் வாய்ப்பு கம்பெனிக்குள் இருக்கிறதா என்று தேடுங்கள். இல்லாவிட்டால், வெளியே தேடுங்கள்
8) மேனேஜர் சரியில்லை, ப்ராஜெக்ட் சரியில்லை போன்ற காரணங்களுக்காக வேறு வேலை தேடாதீர்கள். அதே பிரச்சனை அடுத்த நிறுவனங்களிலும் வராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. முடிந்த வரை ஒரே கம்பனியில் கனிசமாக வளர முயற்சி செய்யுங்கள். அடுத்தடுத்து கம்பெனி மாறுவது உங்களுக்கு நீண்ட கால கரியருக்கு நல்லதில்லை
9) ப்ரமோஷனுக்காகவும், சம்பள உயர்வுக்காகவும் கொடி பிடிக்காதீர்கள். உங்கள் கோரிக்கையில் நியாயம் இருப்பதாக நினைத்தால், அதை தக்க தகவல்களோடு தொகுத்து case build செய்யுங்கள் (customer appreciation, manager appreciation, அனைத்தையும் சேமித்து வையுங்கள் - ஆண்டு இறுதியில் அப்ரைஸலில் பயன்படும்)
10) மிக முக்கியமான விஷயம். ரிலாக்ஸ்டாக இருங்கள். மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒரு பொழுது போக்கில் ஈடுபடுங்கள். சந்தோஷமாக இருப்பவர்கள் எல்லோருமே வெற்றி பெறுகிறார்கள். வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதில்லை.

_oO0Oo_

இந்த மாதம் துவக்கத்தில், TicTac மெம்பர்ஷிப்பிலிருந்து விலகினேன். சென்னை வாசியாக இருந்தால், TicTac பற்றித் தெரிந்திருக்கலாம். RA Puramஇல் இருக்கும் வீடியோ லைப்ரரி. உலகத் திரைப்படங்களுக்காகத் தான் அவர்களிடம் சேர்ந்தேன். அவர்களிடம் இருக்கும் பெரும்பாலான உலக திரைப்படங்களையும் ஏறக்குறைய பார்த்து விட்டேன். அவர்கள் தங்கள் கலெக்ஷனை அப்டேட் செய்வதாய் தெரியவில்லை. மெம்பர்ஷிப்பிலிருந்து விலகிவிட்டேன்.

 அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். Bharti Airtel மற்றும் BigFlix இருவரும் ஒரு பார்ட்னர்ஷிப் போட்டு ஒரு 229 ரூபாய்க்கு 500 படம் காட்டுகிறார்களாம். தேறுமா என்று பார்க்க வேண்டும். வேறு ஏதேனும் ஆப்ஷன் இருந்தால் தெரியப்படுத்துங்கள். ரேபிட்ஷேர், மெகாஷேர் விளையாட்டுக்கு நான் வரவில்லை.

4 Responses to “சிதறல்கள் - 6”

Cricket Pithan said...

Good post da KC. All the best and good luck.

Jo said...

All the very best! Hope you are moving to a chennai based company only.

Jo/ Paarvaiyaalan: I will be in chennai. Not leaving the city :)

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman