Adsense

சிதறல்கள் - 5பேஞ்ஜோ
இந்தப் பேரைக் கேட்டதும் எனக்கு என்னுடன் ஸ்கூலில் படித்த பாலா தான் நியாபகத்துக்கு வந்தான். பேஞ்ஜோ (என் நினைவு சரியென்றால்), 80களின் இறுதியில் தொலைக்காட்சியில் வந்த ஒரு நாடகத்தில் காத்தாடி ராமமூர்த்தி நடித்த கதாபாத்திரத்தின் பெயர். ஷாலினி குட்டிப் பெண்ணாக நடித்த நாடகம். நட்டு கழண்ட ரோபோ கதாபாத்திரம் என்று நினைக்கிறேன். கேஸ் சிலிண்டர் என்று நினைத்து போஸ்ட்பாக்ஸை தூக்கிக் கொண்டு வந்து விடும் அந்த ரோபோ. அது போல சில கெக்கெபெக்கே காரியங்கள் செய்து வாண்டுப் பசங்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். 


ஆனால், அந்த கதாபாத்திரத்தின் பெயரை பாலாவுக்கு ஏன் வைத்தோம் என்று எனக்கு நினைவில்லை. சாதுவான பையன். சின்ன வயதில் ஸ்கூல் விட்டு, மாடிப்படியிலிருந்து இறங்கி வரும் போது கூட நடக்கும் மாணவன் கழுத்தைச் சுற்றி கையைப் போட்டு தடதடவென படியில் ஓடி வருவேன். இதை எதிர்பாராமல் உடம்பை லூசாக வைத்திருக்கும் மற்ற மாணவர்களும் என் வேகத்துக்கு ஓடி வரவேண்டும். இல்லாவிட்டால் படியில் விழுந்து விடுவார்கள். கடைசிப் படிக்கு வந்தவுடன் கெட்ட வார்த்தையால் திட்டுவார்கள். நான் சிரித்தபடியே ஓடிவிடுவேன். முரட்டு விளையாட்டு – இதில் பலர் முதல் அல்லது இரண்டாம் முறைக்குப் பின் சுதாரித்துக் கொண்டாலும், பாலா பல முறை மாட்டினான். சிலர் கரெக்டாக நான் கழுத்தைச் சுற்றி கைபோடும் போது குனிந்து என்னை தள்ளி விட்டு விடுவார்கள். சிலர் நான் படியிறங்கும் போதே படியை ஒட்டிய கைப்பிடியை கெட்டியாக பிடித்துக் கொள்வார்கள். பாலா இந்த சமயம் ஏதோ ஒரு கம்பெனியில் பெரிய பதவியில் இருக்கலாம். இதைப் படித்து மான நஷ்ட வழக்கு போட வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். 

இப்போது இது நினைவு வரக் காரணம் - http://ban.jo/. நீங்கள் ஏதேனும் ஒரு புதிய நகரத்திலிருந்தால், அந்த நகரத்தில், நீங்கள் இருக்குமிடத்திற்கு அருகில் என்ன என்ன நடக்கின்றன அல்லது இணையத்தில் ஆன்லைனில் இருக்கும் நன்பர்கள் அருகில் எங்கு இருக்கிறார்கள் என்பதை இந்த செயலியின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். உங்களிடம் ஐஃபோன் அல்லது ஆண்ட்ராய்டில் இயங்கும் ஃபோன் இருந்தால், இந்த செயலி பயனுள்ளதாக இருக்கும். இதைப் பற்றிய மேலதிக தகவல்களை இதன் வலைதளத்தில் நீங்கள் பெறலாம்.

_oO0Oo_

http://creativecriminals.com/ என்று ஒரு வலைதளம் இருக்கிறது. உங்களில் பலர் அதைப் பார்த்தும் இருக்கலாம். பிரபலமானது. அறியாதவர்களுக்கு, அற்புதமான பல விளம்பரங்களைத் தொகுத்துக் கொண்டிருக்கிறார்கள். தினமும் பல புதிய சிந்தனைகள், விளம்பர யுக்திகளை அறிமுகப்படுத்துகிறார்கள். இந்த படத்தைப் பாருங்கள். Samsoniteஇன் விளம்பரம். Picture is worth Thousand words என்பதற்கு இந்த படம் உதாரணம்.

பொதுவாகவே விளம்பரங்கள் செய்வதற்கு கொஞ்சம் புத்திசாலித்தனம் தேவை. மிகக் குறைந்த நேரம், விற்பனை செய்யப்படும் பண்டம் அல்லது சேவையை வாசகர்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டும், அவர்கள் நினைவில் தங்கும் வகையில். எந்த ஒரு பண்டம் அல்லது சேவைக்கும் இரண்டு விஷயங்கள் அவசியம் Value proposition மற்றும் Differentiator. 

ஜார்கனாக பேசாமல் எளிதாக சொல்லவேண்டுமானால், எந்த காரணத்திற்காக அந்த பண்டத்தையோ சேவையையோ வாடிக்கையாளர் உங்களிடமிருந்து வாங்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அது தான் Value prop. அதே valueவை சந்தையிலிருக்கும் வேறு ஒருவராலும் கொடுக்க முடியும் தானே, ஏன் உங்களிடம் இருந்து மட்டும் வாங்க வேண்டும் ? அதைச் சொல்வது தான் differentiator. இந்த இரண்டும் எந்த ஒரு pitchக்கும் மிகவும் முக்கியம். பல சமய்ங்களில் price என்பது மட்டும் differentiator ஆக மாறி விடுகிறது.

Value propக்கு ஒரு நல்ல உதாரணம் கீழே இருக்கும் விளம்பரம். பல வருடங்களுக்கு முன்பு வந்த இந்த விளம்பரம் உங்களுக்கு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன். மிகவும் புத்திசாலித்தனமான விளம்பரம் – அழுத்தமாக எழுதும் கேம்லின் மார்க்கர்-க்கான விளம்பரம். விருது பெற்றது.

இன்னுமொன்று differentiatorக்கான உதாரணம் – கொஞ்சம் கசமுச விளம்பரம். காண்டம் விளம்பரம். இது தடை செய்யப்பட்ட விளம்பரம் – இதில் கெட்ட வார்த்தைகள், வன்முறை, நெருக்கமான பாலியல் காட்சி, எதுவும் இருக்காது – இந்தியாவில் இருக்கும் காண்டம் விளம்பரத்தில் இருக்கும் அளவு கூட நெளியவிடாது. இருப்பினும் அலுவலகத்தில்/ பொது இடத்தில் பார்ப்பதற்கு உகந்ததில்லை. பார்த்து விட்டு என்னைத் திட்ட வேண்டாம்.

காண்டம் - மிகவும் சவாலான ஏரியா. பல விஷயங்களைச் சொல்லவும் முடியாது சொல்லாமல் இருக்கவும் முடியாது, மிகவும் பூடகமாகச் சொல்லவேண்டும். தேவையில்லாத கர்பத்தை தவிர்க்க, பாலியல் நோய்களிடமிருந்து காக்க என்று அதன் value propஐ எடுத்துச் சொன்னாலும், differentiator ? அதைத் தான் இந்த விளம்பரம் சொல்கிறது. 

ஒரு விஷயத்தை கவனித்தீர்களா, மேலே சொன்ன இரண்டிலும் பேச்சே கிடையாது. What an Idea Sirji போன்ற அபத்த வசங்கள் கிடையாது. இப்போது டீவியிலிருக்கும் விளம்பரங்களைப் பார்த்து அந்த பண்டம் அல்லது சேவையின் Value prop மற்றும் differentiator பிடிபடுகிறதா என்று பாருங்கள். 

_oO0Oo_

சமிபத்தில் பாரதிய வித்யா பவன் பப்ளிஷிங்களையும், இண்டோலாஜிஸ்ட் மற்றும் ப்ரும்ஹஸ்ரீக்களின் புத்தகங்களையும் கொஞ்சம் படித்து வருகிறேன். செம ஸ்வாரஸ்யமாக இருக்கின்றன. நம்புதல் அல்லது மறுத்தல் என்ற இரண்டு எல்லைகளில் நிற்காமல் நடுவிலிருந்துப் பார்த்தால் எவ்வளவு மெதாடிகலாக இந்து மத முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் என்று ஆச்சர்யப் பட வைக்கின்றது. பல விஷயங்கள் சரியாக விளக்கப்படாததும், புரிந்து கொள்ளப்படாததும் இன்றைய குழப்பங்களுக்குக் காரணம் என்று தெளிவாகப் புரிகிறது.
இனி வரும் பகுதிகளில் அவ்வப்போது அவை பற்றி எழுதிகிறேன்.

_oO0Oo_

நான் மேலே சொன்னதை கொஞ்சம் நிறுத்தி – எதற்காக அவற்றை எழுத வேண்டும் என்பதற்கான காரணத்தை (நான் என்றில்லை, இணையத்தில் வேறு எவருமே) ஆராய்ந்தால், அந்த நோக்கம், ஒரு வரையரைக்கு உட்பட்டது என்கிறார் Ernest Dichter. இவரை Father of motivation research என்று அழைக்கிறோம்(றார்கள்). மனிதர்களை எது ஒரு விஷயத்தைப் பற்றி பேசவோ எழுதவோ செய்கிறது என்பதைப் பற்றி இவர் ஆராய்ந்து இருக்கிறார் - சுமார் 50 வருடங்களுக்கு முன்பே.

கீழ் காணும் நான்கு காரணத்திற்குள் ஏதேனும் ஒன்று தான் ஒரு விஷயத்தைப் பற்றி பேச/ எழுத motivate செய்கிறது என்கிறார்.
1)   முதலாவது, விஷயத்தின் சிறப்பு. அந்த விஷயம் தரும் அனுபவம் அவ்வளவு புதுமையாக இருப்பதால், அதைப்பற்றிப் பேசுவது தவிர்க்க முடியாததாகிறது (33 % பேர் இப்படித்தானாம்)
2)  எனக்கு எவ்வளவு தெரிந்திருக்கிறது பார்த்தாயா வகையறா – கொஞ்சம் சர்க்கரை தடவி சொல்ல வேண்டுமானால், அந்த விஷயத்தைப் பற்றி ஒரு முன்னோடியாக இருந்து எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை (24%)
3)   பிறருக்கு உதவும் நோக்கம், எல்லோருக்கும் அந்த விஷயம் சென்று சேர்ந்து பயனளிக்க வேண்டுமென்ற எண்ணம். (20%)
4)   அந்த விஷயத்தைப் பற்றி அவர் அறிந்துக் கொண்ட விதம். உதாரணத்திற்கு ஒரு விளம்பரம் படு காமெடியாக இருக்கிறதென்றால், அந்த விளம்பரத்தைப் பகிர்ந்து கொள்ளும் படியாகத் தூண்டுமாம். இதை மார்க்கெட்டிங் பரிபாஷையில் messaging என்று சொல்கிறார்கள் (30%)

இந்த தியரியைத் தான் இன்றைய தேதியில் பல சமுக ஊடகங்களும் பயன்படுத்திக் கொள்கின்றன. வாய் மொழியாக ஒரு பொருளுக்கு விளம்பரம் அதிகரிக்கும் இந்த காலத்தில், நிறுவனங்கள் தங்கள் மார்க்கெட்டிங் ஸ்ட்ராடஜிகளில் social mediaவுக்கான ஸ்ட்ராடஜியை வடிவமைக்க இந்த தியரியைப் பயன்படுத்துகிறார்கள். இதில் வெற்றி பெற்றவர்களின் பண்டங்கள், சேவைகள், இணையத்தில் twitter, facebook, மற்றும் பல செயலிகள் வழியாக பிரபலப்படுத்தப் படுகின்றன.

2 Responses to “சிதறல்கள் - 5”

தெரியாத தகவல்கள் . பகிர்வுக்கு நன்றி

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman