Adsense

சிதறல்கள் - 4


இணையம் சார்ந்த இரண்டு முக்கிய நிகழ்வு இந்த வாரம் நிகழ்ந்திருக்கின்றன.

முதலாவது,

கூகிள் தமிழ் கற்றுக் கொண்டு விட்டது. Google Translate சேவையில் ஐந்து இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் தமிழும் ஒன்று. நான் சில வாக்கியங்களைக் கொடுத்து சோதித்துப் பார்த்தேன். சில பல சேதாரத்தோடு கொஞ்சம் நெருங்கி வருகிறது. நாஞ்சில் நாடன், ஆனந்த விகடனைப் பற்றி சொல்ல ஆரம்பத்ததை கூகிள் மொழிமாற்றம் செய்திருப்பதைப் பாருங்கள். Gas flows backwardsக்காகவே ஆவி, மான நஷ்ட வழக்கு போடும்.

பரவாயில்லை போகப் போக தமிழ் நன்றாகக் கற்றுக் கொண்டு விடும். வெண்பா எழுதாத வரை சரி.


_oOo_

இரண்டாவது விஷயம். ICANN போர்ட், அதிக GTLDs தோன்றும் வகையில் வாக்களித்திருக்கிறது. GTLD என்றால் Generic top level domains. TLDகளில் (Top level domain) சில வகைகள் உள்ளன. தற்போது .com, .net, .org போன்ற GTLDs பழக்கத்திலிருக்கின்றன. .in, .uk போன்றவை country-code TLD. இவைத் தவிர sponsored TLDகள் சில இருக்கின்றன. TLDகளின் மொத்த பட்டியல் இந்த சுட்டியில் இருக்கின்றன.
இப்போது நிகழ்ந்திருக்கும் மாற்றம் என்னவென்றால், இந்த TLDகளை எந்த ஒரு நிறுவனமோ, தனிநபரோ TLD வாங்கிக் கொள்ள முடியும். $185,000 கட்டி TLD ரிஜிஸ்ட்ரியில் உங்களுக்குத் தேவையான TLDஐ சேர்த்துக் கொள்ள விண்ணப்பிக்கலாம். இதைத் தவிர வருடத்திற்கு $25,000 கட்ட வேண்டும். இந்த கட்டணம் நீங்கள் தனியாக ஒரு TLD வாங்கிக்கொள்ள விரும்பினால் மட்டுமே.


இவைத் தவிர தற்போது இருக்கும் GTLDக்கள் அப்படியே இருக்கும். இந்த ஏற்பாட்டினால் 2 முக்கிய நன்மைகள் இருக்கின்றன.
- நீங்கள் ஏதேனும் ஒரு புதிய பிராண்ட் துவக்க விரும்புகிறீர்கள் என்றால், அந்த பிராண்டிற்குத் தேவையான வெப்சைட்டை உருவாக்க விரும்பலாம். ஆனால் அந்த பிராண்டில் ஏற்கனவே அதிக டிராண்சாக்ஷன் இல்லாத வெப்சைட் ஒரு இயங்கிக் கொண்டிருக்கும் (இருக்கலாம்). வேறு வழி இல்லாமல் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். இல்லாவிட்டால், பிராண்ட் பெயர் வருவது போன்ற வேறு ஏதாவது பெயரை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இந்த நிலை இந்த ஏற்பாட்டின் மூலம் மாறலாம்.


 - இரண்டாவது மற்றும் முக்கியமான நன்மை, முக்கிய சேவைகள் அல்லது கிரடிட் கார்ட் மூலம் பணபட்டுவாடா நடக்கும் தளங்களில் நம்பிக்கை சாந்த வாடிக்கையாளர்களின் கவலை குறையும்.


உதாரணத்திற்கு http://www.satyamcinemas.com/ என்ற வலைதள முகவரி சத்யம் சினிமாவிற்கு சொந்தமானதல்ல. http://sathyamcinemas.com - வித்தியாசம் ஸ்பெல்லிங்கில் இருக்கிறது.
இதே போல licofindia.com என்று தட்டச்சினால் LIC வெப்சைட் திறக்காது. ஏற்கனவே யாரோ பார்க் செய்து வைத்திருக்கும் இந்த வெப்சைட் முகவரிகள் தவறான தேவைக்குப் பயன்படுத்தப்படாத வரை எல்லாமே சரி.

இந்த பிரச்சனைக்கு ஒரு வழி, அவர்கள் பிஸினஸுக்கு ஏற்றபடியான TLD உருவாக்கிக் கொள்வது. .LIC போன்ற ஒரு TLD, ஏற்படுத்திக் கொண்டால், போட்டிக்காக வைப்சைட் உருவாக்கிக் கொள்வதால் வரும் குழப்பம் குறைவதோடு, வங்கிகள் போன்ற முக்கிய சேவைகள் வழங்கும் நிறுவனங்களின் நம்பகத்தன்மையும் பாதுகாக்கப்படும். வாடிக்கையாளர்களும் சரியான முகவரியில் தான் இருக்கிறோம் என்று நிம்மதியாக செயல்படலாம்.


அடுத்த வருடத்தில் பெரிய நிறுவனங்களின் மாட்க்கெட்டிங் பட்ஜெட்டில் $200 K கூடலாம். அடிவாங்கப்போவது, கண்ட மேனிக்கு டொமைன் வாங்கிப் போட்டு குறுக்கு வழியில் காசு பார்க்க விரும்பும் ஒரு சிலர்.


_oOo_

சென்ற வாரம் ஹிண்டுவில் தனஞ்ஜெயன், மற்றும் சாந்தா தனஞ்ஜெயன் அவர்கள் சினிமா முயற்சிகளைப் பற்றி சொல்லியிருந்தார்கள். இந்த சுட்டியில் அது இருக்கிறது. அதை முழுமையாகப் படித்து விட்டு, கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.


கமலின் மீசையால், நாம் எவ்வளவு பெரிய விஷயத்திலிருந்து தப்பித்து இருக்கிறோம் என்று உங்களுக்குப் புரியும். இன்னுமொரு தோடி ராகம் உருவாகாமல் கமல் காப்பாற்றியிருக்கிறார். இன்னொரு விஷயம் மோகன்லால் இடத்தில் தனஞ்ஜெயன். இரண்டு Larger than life characterகளில் என்னால் சத்தியமாக தனஞ்ஜெயனை நினைத்து கூடப் பார்க்க முடியவில்லை.

One response to “சிதறல்கள் - 4”

Bindhu!! said...

ROFL @ the first one!
I'm loving this series :)

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman