உதாரணத்திற்கு ஒரு 6713 X 2798 என்ற பெருக்கலை எடுத்துக் கொள்ளலாம்
படி 1:
வழக்கம் போல ஒன்றன் கீழ் ஒன்றாக எழுதிக் கொள்ளவும்
6 7 1 3
2 7 9 8
படி 2:
இடது ஓரத்தில் இருக்கும் இலக்கத்தை பெருக்கவும்
படி 3:
மிக முக்கியமான படி. குறுக்கே பெருக்க வேண்டும். கீழே உள்ள பெருக்கல் வழி முறையை பார்க்கவும்
படி 4:
வலது ஓரத்தில் இருக்கும் இலக்கங்களை செங்குத்தாக பெருக்கவும்
இப்போது அதிக சிக்கல்கள் கொண்ட ஐந்து இலக்க பெருக்கலைப் பார்ப்போம். இந்த சூத்திரத்தை போதிய அளவு பார்த்துவிட்டதால் நாம் ஐந்து இலக்க பெருக்கலுக்கு மேல் செல்லப்போவதில்லை. வழக்கம் போல் ஒரு உதாரணத்துடன் இந்த பெருக்கல் விதியை நாம் அனுகலாம்.
உதாரணம்: 73952 X 83761
படி 1 மற்றும் படி 2 மிகவும் பழகிப்போன ஒரு படியாக இருப்பதால் நாம் மிகவும் முக்கியமான படியான மூன்றாம் படிக்கு தாவி குதிக்கலாம்
மேலே நீங்கள் கவனித்ததைப் போல நாம் மேல் வரிசையிலிருக்கும் அனைத்து இலக்கங்களையும் கீழ் வரிசையிலிருக்கும் அனைத்து இலக்கங்கங்களுடன் பெருக்கிவிட்டோம். இப்பொது மிக எளிதான அந்த கடைசி படி
இவ்வளவு பெரிய இலக்க கூட்டு அமைந்த பெருக்கலுக்கான விடையை எவ்வளவு சுலபமாக கண்டடைந்து விட்டோம் பார்த்தீர்களா ?
இந்த முறையிலான பெருக்கல் அல்ஜீப்ரிக் முறையிலான பெருக்கல் முறையுடன் முற்றிலும் பொருந்திப் போகின்றது.

மேலே உள்ள படிகளில் நீங்கள் இந்த அல்ஜீப்ரிக் பெருக்கலை தான் மனக் கணக்காக செய்திருக்கிறீர்கள். இந்த முறையில் நீங்கள் செய்வதெல்லாம் தொடர்ச்சியான பெருக்கலும் கூட்டலும் - மனக்கணக்காக நீங்கள் இதைப் பழகும் போது காய்கறிக்காரனிடம் அவன் விலையை சொல்ல சொல்ல மனதில் கூட்டுத் தொகை உங்களையும் அறியாமல் வந்து விடும்.
பெருக்கல் என்பது இதோடு நின்று விட்டதா - இல்லையே ! இன்னும் சில விசேஷமான சூத்திரங்கள் இருக்கின்றன - வர்க்கம் கண்டுபிடிக்க, சில pattern-இல் இருக்கும் பெருக்கல்களை இன்னும் சுலபமாக செய்ய சூத்திரங்கள் நம்மிடையே இருக்கின்றன அவற்றை நாம் தொடர்ந்து பார்ப்போம்.










No response to “उर्ध्वतिर्यग्भ्याम (ஊர்த்வ த்ரியக்ப்யாம்) - பகுதி 2”
Post a Comment
Trackbacks
Leave a trackback