போன தடவை ஆருத்ரா தரிசனம் வந்த போது அப்பா இருந்தார். ஜனவரி 1ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் வந்தது. கோயிலுக்குப் போய் அர்ச்சனை செய்து பின் களி சாப்பிட்டு விட்டு புத்தக கண்காட்சி போனேன்.
ஒரு நாள் தள்ளியோ முன்போ பிறந்திருந்தால் ஸ்ரீராம் என பெயரிடப்பட்டிருக்க வேண்டியவன். சந்திரசேகரன் ஆனதற்கு இந்த ஆருத்ரா தரிசனமே காரணம். என் பெயரை சேகரன் என்று எழுதுவது கூட தப்பு. ஷேகரன் என்று தான் எழுத வேண்டும். சந்திரஷேகரன் என்றால் சந்திரனை சூடியவன் என்று பொருள். ஷேகர: என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு சிகரம், உச்சி, கொண்டை போன்ற பொருள்கள் உண்டு. சிறு வயது பழக்கம் காரணமாக நானே என்னை சந்திரசேகரன் என்று தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். (பிறைசூடன் என்று ஒரு பாடலாசிரியர் இருக்கிறார் - அவர் இயற்பெயர் சந்திரசேகரனா என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நான் நினைத்ததுண்டு)
பொற்பாதம் எடுத்து ஆடும் நடராஜர் உத்சவராக வலம் வருவதைப் பார்க்காமல் பள்ளி கல்லூரி நாட்களில் ஆருத்ரா தரிசனம் கழிந்ததில்லை. பின்னர், ஆஃபீஸ் செல்ல ஆரம்பித்தவுடன் ஆருத்ரா தரிசனம் வந்தால் நான் எழும் முன்பே என் பெயருக்கு அர்ச்சனை (கோயிலில்) நடந்து விடும். எழுந்து ஆஃபீஸ் கிளம்பும் முன் தயாராக இருக்கும் பிரசாதம் மட்டும் இட்டுக்கொண்டு கிளம்பிவிடுவேன்.
ஏழு தான் குழம்பும் நெய் சொட்டும் களியாயுமாக ஊரே என்னைக் கொண்டாடுவதாகக் கொண்ட சிறு வயது மயக்கங்கள் என் நினைவிலிருக்கின்றன. ஆயிரம் சந்திரசேகரன்கள் இருந்தாலும் அந்த பெயர் வைத்துக் கொள்ள எனக்கு மட்டுமே தகுதி உண்டு என்று நினைத்த குழந்தைத் தனங்கள் நிறைந்த பொழுதுகள் அவை. ஊரில் இருக்கும் போது காலையில் கொங்கனேஸ்வரனுக்கும் மாலை பிரஹதீஸ்வரனுக்கு அர்ச்சனை நிச்சயம்.
ஒரு முறை கிரிக்கெட் விளையாட மதுரை செல்ல வேண்டியிருந்த போது, ஆருத்ரா தரிசனம் வந்தது. அப்போது மதுரையில் இருக்கும் ஒரு சிவன் கோயிலுக்கு என்னை ஆருத்ரா தரிசனத்திற்கு கூட்டிச் செல்வதாக இருந்தால் மட்டுமே மகனை விளையாட அனுப்புவேன் என அம்மா ஏறக்குறைய சத்யாகிரகமே செய்தாள். எந்த கோயிலுக்குப் போனோம் (போனோமா) என்று எனக்கு சரியாக நினைவிலில்லை.
சில சமயம் ஒரே வருடத்தில் இரண்டு ஆருத்ரா தரிசனம் வரும் (இந்த வருஷத்தைப் போல). இங்க்லீஷ் பிறந்த நாளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாத குடும்பத்தில் பிறந்ததால் சிறு வயதில் ஒரே வருஷத்தில் ஒருவன் எப்படி இரண்டு முறை பிறப்பான் என்ற குழப்பமெல்லாம் எனக்கு ஏற்பட்டதுண்டு.
கொஞ்சம் விபரம் தெரிந்த பின் என் சார்ந்த விஷயங்கள் மறைந்து சைவ பண்டிகையாக மட்டுமே தோன்றத் துவங்கிவிட்டது. பிறந்தது முதல் என் பெயரில் அர்ச்சனை செய்யப்படாமல் கழிந்த முதல் ஆருத்ரா தரிசனம் இன்று.
கடந்த சனிக்கிழமை சந்திப்பு
கடந்த சனிக்கிழமை Unturnedpagesஇன் இரண்டாம் சந்திப்பு நிகழ்ந்தது. இதில் சாரு நிவேதிதாவின் படைப்புகள் பற்றி அவரது வாசகர் பாஸ்கர் சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார். அந்த பதிவின் ஒலிப்பதிவு இங்கே.
பகுதி 1
பகுதி 1
பதிவு வகை::
Unturned Pages,
ஒலிப்பதிவு,
சந்திப்பு
தாமதமான இரண்டாம் சந்திப்பு
பல்வேறு காரணங்களால் Unturned Pagesஇன் இரண்டாம் சந்திப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. அது நாளை நடக்கவிருக்கிறது.
இந்த முறை முதல் இனி வரும் அனைத்து கூட்டங்களிலும் ஏதேனும் ஒரு புத்தகம் குறித்தோ, எழுத்தாளர் குறித்தோ வாசகர் ஒருவரின் பார்வையை/ கருத்தை பதிவு செய்ய விரும்புகிறோம். இந்த பார்வை முற்றிலும் நடுநிலையானதாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஆனால் அது தீவிர வாசகர் ஒருவரின் குரலாக இருக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். எழுத்தாளரின் ஆளுமையை தாக்கும் தனி நபர் விமர்சனமாக இது இருக்காது. படைப்புகள் குறித்தே கருத்துகள் முன் வைக்கப்படும்.
நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் ஞான பாஸ்கர் சாரு நிவேதிதாவின் படைப்புகள் குறித்த அறிமுகத்தை அளிக்கவிருக்கிறார். இவர் சாருவின் தீவிர வாசகர். சாருவின் ஒரு புத்தகத்தின் அட்டையைக்கூட பார்த்திராத (சரிவராது என்பது என் திண்ணமான முன்முடிவு) எனக்கு சாரு என்ற எழுத்தாளரை அவர் எப்படி அறிமுகம் செய்து வைக்கப்போகிறார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. இதே போல் பங்கேற்கும் பார்வையாளன் (எ) பிச்சைக்காரன், சாருவை கொஞ்சமே படித்திருப்பதாக சொன்னார்.
இது போன்ற ஒரு வாசகர் குழுவுக்கு ஒரு அறிமுகத்தைத் தான் இந்த உரைகள் மூலம் நாங்கள் சாத்தியப்படுத்த விரும்புகிறோம். உரை முடிந்தவுடன் காரசாரமான கருத்து பரிமாற்றமிருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
கலந்து கொள்ள விருப்பமும் நேரமும் இருப்பவர்கள் பெசண்ட் நகர் கடற்கரைக்கு 4 மணி அளவில் வரவும். மேற்சொன்ன இருவரும் புத்தகம் வாடகைக்குக் கொடுப்பவர்கள் என்பதால் உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களையும் நீங்கள் பெறலாம்.

இடியட் பாக்ஸின் அடிமைகள் (1/2)
ஸ்பெக்ட்ரம், பள்ளி கல்வி, மைக்ரோஃபினான்ஸின் எதிர்காலம், போன்று பேசுவதற்கு பல விஷயங்கள் இருந்தாலும், எனக்கு கொஞ்சம் அவசரமாக பேச வேண்டும் என்று தோன்றியது, சில நாட்கள் முன்பு டீவியில் பரபரப்புக்கு ஆளான இரண்டு நிகழ்ச்சிகளைப் பற்றி. இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி என் நன்பர்கள் மத்தியில் விவாதித்தேன். குறிப்பாக இரண்டு விதமான கருத்துகளை அனைவரும் மாறி மாறி சொன்னார்கள்
1) இது போன்ற நிகழ்ச்சிகள் கலாசாரத்திற்கு கேடு விளைவிக்கும். பிள்ளை குட்டிகளுடன் பார்க்க வேண்டிய நிகழ்ச்சிகள் மட்டுமே டீ வியில் காட்ட வேண்டும்
2) ரிமோட் கண்ட்ரோல் ஃப்ரிடம் என்பது ஒரு ஹம்பக். அதனால் உருப்படியான எந்த விஷயமும் நடப்பதில்லை
பொதுவான மற்றொரு கண்ணோட்டம் - தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எந்த விதமான தரக்கட்டுபாடும் கிடையாது என்பது.
இவற்றைப் பற்றி பேசுவதற்கு முன் இரண்டு முக்கியமான கேள்விகள். இவற்றுக்கான பதிலைச் சுற்றியே நாம் இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு தனிநபர் கருத்தை தேற்றிக் கொண்டுவிடலாம் என்பது என் நம்பிக்கை.
1) அமெரிக்கா போன்ற முதலாளித்துத்துவ நாடுகளில் வளர்ந்துள்ளது போல் போர்னோகிராஃபி துறை இந்தியாவில் ஏன் வளரவில்லை
2) சீனா போல எதை நீங்கள் பார்க்க வேண்டும் எதைப் பார்க்க கூடாது என்று இணையத்தில் ஏன் கட்டுபாடுகள் இந்தியாவில் இல்லை
இந்த பதிலை நீங்கள் யோசித்துக் கொள்ளுங்கள் - வெளியே சொல்ல வேண்டாம் உங்களுக்குள்ளே சாதக பாதகங்களை அலசிக்கொள்ளுங்கள். நாம் இந்த பிரச்சனை சார்ந்த சில அடிப்படை விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வேறெப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது டீவி க்கான சென்சார் பற்றி நாம் அதிகம் கவலைப்படவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு வாரத்தில் ஏறக்குறைய 35 மணி நேரத்தை பதின்ம வயதிலிருக்கும் இந்திய குழந்தைகள் டீ வி பெட்டியின் முன் செலவழிக்கிறார்கள். 10 மணி நேரம் தூங்குகிறார்கள் என்று கணக்கில் கொண்டால் ஒரு நாளில் 5 மணி நேரம். அடப்பாவிகளா !
இப்படி அடுத்த தலைமுறை அடிமையாகிக் கொண்டிருக்க்கும் ஒரு ஊடகத்திற்கு கட்டுப்பாடு விதிப்பது தவறில்லை. இதைத் தான் இந்தியாவில் இரண்டு சட்டங்கள் செய்கின்றன - Cable Television Networks (Regulation) Act, 1995 (“Cable Act”) மற்றும் the Cable Television Networks Rules, 1994 (“Cable Rules”). தற்போதைய சூழலில் பொதுவான மக்களால் அநாகரிகம் என்று கருதப்படக்கூடிய செயல்களைக் கொண்ட நிகழ்ச்சிகளை (அநாகரிகமான வார்த்தைகளை உபயோகித்தல், ஆபாசமான செய்கை போன்றவை) டீ வியில் காட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு தர சான்றிதழ் ஒன்றும் கிடையாது. சினிமாவுக்கு மட்டுமே CBFC (Central Board of Film Certification) தர சான்றிதழ் கொடுக்க வேண்டும். வேற்று நாட்டு படமாக இருந்தாலும் அது இந்தியாவில் தொலைக்காட்சியில் காட்டப்பட CBFC தர சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் (1994க்கு முன் ஸ்டார் மூவிஸில் After Dark பார்த்தவர்கள் இந்த சட்டத்தை சபிப்பர்). ”இந்த படம் இந்திய பார்வையாளர்களுக்கு ஏற்ப மாற்றப்பட்டிருக்கிறது” என்று ஒரு கார்டு போடுவதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
இந்த சட்டங்களின் அடிப்படையிலேயே அந்த இரண்டு நிகழ்ச்சிகளின் மீது கட்டுபாடு விதித்திருக்கிறது. மேலும் டீ வி நிகழ்ச்சிகளுக்கு தர சான்றிதழும், அவற்றின் உள்ளடகத்தை approve செய்யக்கூடிய தர கட்டுபாட்டு வாரியம் ஒன்றையும் தோற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்த வண்ணம் தான் இருக்கின்றன. இது குறித்து போடப்பட்ட எந்த ஒரு வழக்கிலும் நீதிமன்ற உத்தரவு கட்டுபாட்டு வாரியத்தை தோன்றச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை முன் வைக்கவில்லை. இந்த விஷயத்தை ஒளிபரப்புத்துறைக்கே விட்டு விட கோர்ட் விரும்புகிறது.
நிகழ்ச்சிகளுக்கு இந்த நிலை என்றால், நிகழ்ச்சிகளின் அளவிற்கு டீ வியை ஆக்கிரமித்துக் கொள்ளும் விளம்பரங்களின் நிலை என்ன ? இதற்காக ASCI என்று ஒன்று இருக்கிறது Advertising Standards Council of India. இது அரசாங்கத்தால் நடத்தப்படும் அமைப்பன்று. லாப நோக்கில்லாத ஒரு அமைப்பு. நிறுவனங்கள், ஊடகங்கள், விளம்பரதார்கள் போன்ற பல் வேறு அமைப்பளர்களும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட ஒரு அமைப்பு. இந்த அமைப்பு விளம்பரங்களின் தரத்தை கட்டுப்படுத்துகின்றது. தவறான தகவல், குழப்பமான தகவல், பொய்யான வாக்குறுதிகள், சமுகத்திற்கு எதிரான மைய கருத்துக்களைக் கொண்ட விளம்பரங்கள் போன்றவற்ற தடை செய்கிறது, அல்லது திருத்தம் கொண்டு வரச் செய்கிறது இந்த அமைப்பு.
ஒரு ஆப்பிரிக்க காட்டில் வேரை பிழிந்து வரும் ஒரு சொட்டு நீருக்காக இரண்டு காட்டுவாசிகள் சண்டையிட்டுக் கொள்வதாக வரும் விளம்பரம்2 (LMN Juice) டீ வியில் இப்போதெல்லாம் வருவதில்லையே - கவனித்தீர்களா. இந்த அமைப்பின் கைங்கரியம் தான்.
ஏறக்குறைய நாம் கொஞ்சம் பாதுகாப்பான சூழலில் தான் இருக்கிறோம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதில்லையா. ஆனாலும் எத்தனை முறை நீங்கள் முகம் சுளிக்காமல் அவசரமாக சானலை மாற்றாமல் டீ வி பார்க்கிறீர்கள் ? இது குறித்து மேலும் இன்னொரு நாள் பார்க்கலாம்.

ஊடகம்,
தொலைக்காட்சி