எலக்ட்ரிக் ரேசர், மேக் 3 என பல பல நவின உபகரணங்கள் வந்தாலும் எனக்கென்னமோ 7 O clockஇல் கிடைக்கும் துரிதம் வேறெதிலும் கிடைக்காதது போல் தோன்றும். கடகடவென இரண்டு இழுப்பு இழுத்தோமா, கிளம்பினோமா என்றிருக்க வேண்டும் - அப்படி இருந்தால் தான் எனக்குத் திருப்தி.
ஆனால் குறைந்த விலைக்கு வாங்கும் 7 O clock இலேயே இன்னும் optimize செய்ய வாய்ப்பு இருப்பதாக எனக்கு அடிக்கடி தோன்றும். பிளேடை மட்டும் மாற்றும் படி தந்தால் இன்னும் கச்சிதமாக இருக்குமே - அதுவும் 5 ரூபாய்க்கு ஒரு பிளேட் செட் என்றால் சுகம் (3-4 ஷேவ் வந்தால் கூட போதும்). நாம் குதிரை ஓட்டிக்கொண்டோ, ரயிலில் போய்க் கொண்டோ ஷேவ் செய்து கொள்ள போவதில்லை. அதிகம் போனால் ஷேவ் செய்து கொண்டே பேசுவேன் - அதற்கெல்லாம் கன்னத்தில் கோடு விழாது. இதற்காக நவின க்ரிப், எக்ஸ்ட்ரா கேர் ஹேண்டில் எல்லாம் என்ன இழவுக்கு ? (இந்த தலைப்பு பற்றி கொஞ்சம் சீரியஸாக பேச வேண்டும் - பிறகு)
ஏதாவது பொருளை வாங்கும் போது எனக்குள் இருக்கும் Indian consumer தலை தூக்கி விடுவான்.
சமிபத்தில் தான் Gillette Guard பார்த்தேன். கண்டவுடன் காதல் வந்துவிட்டது. சில ஷேவ்களுக்குப்பின் தலையை திருகி கடாசிவிடலாம். வேறு தலை. அறிமுக சலுகை 15 ருபாயாம். போதுமே. இதுக்கு மேல் என்ன வேண்டும். வாங்கிப் பார்த்துவிடுவதென்று முடிவு செய்து விட்டேன். இதைத் தவிர, பாதுகாப்பான க்ரிப், comb guard, swivel head என்று கொஞ்சம் அம்சங்கள் வேறு இருக்கின்றன.
பயன்படுத்திப் பார்த்துவிட்டு சொல்கிறேன்.
பிகு: P&G இதை எப்படி உருவாக்கினாக்கினார்கள் என்பது ஜனவரி இதழில் தெரியுமாம் - அதற்கு முன்னோட்டமாக ஒரு சிறிய டீஸர் பிளாக் போஸ்ட்.
http://blogs.hbr.org/anthony/2010/11/three_lessons_from_the_gillett.html
Unturned Pages-இன் இரண்டாம் மாநாடு - வாரீர், வாரீர் !
Unturned Pagesஇன் முதல் மாநாடு வெற்றிகரமாக முடிந்தது நீங்கள் அறிந்ததே. அறியவில்லையென்றால் இங்கே பாருங்கள். பார்த்தாகிவிட்டதா - சரி கேளுங்கள்.
அதே போன்ற ஒரு சாதனை மாநாடு இந்த சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அதே இடத்தில் (பெசண்ட் நகர் பீச்) நடத்துவதாக உத்தேசம். கட்டாயம் வரும் கூட்டம்(!) வருவதாக சொல்லிவிட்டதால் இந்த ஏற்பாடு.
புதிய நன்பர்களையும் சந்திக்க ஆசை.மேலதிக தகவலுக்கு எனக்கு மின்னஞ்சல் இடவும். நான் ட்விட்டருக்கு செல்வதில்லை என இந்த மாதம் விரதம் இருப்பதால் அங்கே எனக்கு எந்த தகவலும் தர வேண்டாம்.

பதிவு வகை::
Unturned Pages,
கூட்டம்
The School - KFI மூடும் அபாயம்
ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி பற்றி அனேகம் பேருக்குத் தெரிந்திருக்கும். அப்படித் தெரிந்தவர்களுக்கு THE SCHOOL பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியா முழுதும் பல்வேறு இடங்களில் இயங்கி வரும் அவர்களின் பள்ளி, சென்னையிலும் அடையாறில் இருக்கிறது. இந்த பள்ளி இப்போது மூடும் அபாயத்தில் இருக்கிறது.
இந்த பள்ளி தற்போது இயங்கி வரும் இடம் தியசாஃபிகல் சொசைட்டிக்கு சொந்தமானது. கிட்டதிட்ட 17 ஏக்கர். இதை 1979ஆம் வருடம் தியாசாஃபிகல் சொசைட்டி THE SCHOOLக்கு லீஸுக்குத் தந்தது. இப்போது அந்த இடத்தை காலி செய்யும் படி பணித்திருக்கிறது, தியசாஃபிகல் சொசைட்டி. பல கட்ட பேச்சு வார்த்தைக்குப் பின் பயனின்றி - இப்போது வேறு இடத்திற்கு நகர்வது அல்லது மூடுவது என்ற நிலையில் உள்ளது. 2016 வரை இதே இடத்தில் இயங்க முடியும். அதற்குள் வேறு இடம் பார்த்துவிடுவது சாத்தியமே. சென்னைக்கு 80 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ”பாடஷாலா” என்ற அவர்களது உறைவிட பள்ளிக்கு இந்த மாணவர்கள் செல்வது ஒரு option.
இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஏற்கனவே பெற்றோர்கள் சிலர் சேர்ந்து Facebook பக்கம் ஒன்றைத் தோற்றுவித்திருக்கின்றனர்.
ஆனால், என் முக்கிய கவலை நான் சமிபத்தில் அறிந்த ஒரு தகவல் - சென்னையின் முதல் குடும்பம் இந்த பள்ளியை தன் வசப்படுத்திக் கொள்ள முணைந்திருப்பதாக அறிகிறேன். எந்த அடிப்படையில் இப்பள்ளியை தனி நபர் வசப்படுத்திக்கொள்ள முடியும்? அதற்கு Foundation-இன் பதில் என்னவாக இருக்கும்? என்பது குறித்த கேள்விகளுக்கு ஊகங்களல்லாத தீர்மாணமான உண்மையின் அடிப்படையிலான பதில் இல்லை. இது செவி வழிச் செய்தியே. இந்த செய்தி ஒரு வேளை உண்மையாகயிருப்பின், மிகவும் துரதிருஷ்டவசமானது. இந்த பள்ளி (முதல் குடும்பமென்றில்லை) எந்த ஒரு தனி நபரின் கைக்கும் சென்று விடாமல் இருக்க வேண்டும். அப்படி ஆனால், இன்றைய தேதியில் சென்னையிலிருக்கும் பல தரமற்ற, வெறும் கூலிக்கு மாறடிக்கும் கூட்டத்தை உருவாக்கும், பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் பள்ளி நிறுவனங்களுள் இதுவும் ஒன்றாக மாறி விடும் அபாயம் இருக்கிறது.