Adsense

அப்பா (1939-2010)


நவீன கால கிரிக்கெட் - விளையாட்டல்ல


சமிபத்திய கிரிக்கெட் ஊழல் குறித்து சொல்வனம் இணைய இதழில் வெளியான எனது கட்டுரை இந்த சுட்டியில்

காமதேனு கூட்டுறவு மருந்தகம்


சென்னையில் இருப்பவர்கள் புதிய பள பள மருந்து கடைகள் உங்கள் பகுதியில் முளைத்திருப்பதை கவனித்திருக்கலாம்.

நான் சென்று வாங்கி பார்த்தேன் - பல முக்கிய உயிர் காக்கும் மருந்துகள் இங்கே கிடைக்கின்றன. ஹார்லிக்ஸ், Ensure, வகையறாக்களும். Toiletryகளும் இங்கே கிடைக்கின்றன. முக்கியமான் சில நல்ல விஷயங்கள்
- 15 % விலை குறைக்கிறார்கள். நான் வாங்கிய மருந்துகளுக்கு 12 % கழிவு தந்தார்கள். அரசு நடத்தும் மருந்தகமாதலால் வரி கிடையாது. அந்த வரியைத்தான் மக்களுக்கு கழிவாக தருகிறார்கள்.
- மற்ற பெரிய கடைகளைப் போல் ஒரு முழு strip மருந்து தான் வாங்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 3 tablet கேட்டால் கூட கொடுக்கிறார்கள்.
- கம்ப்யூட்டர் பில்லிங்
- கிரெடிட் கார்ட் வாங்கிக் கொள்கிறார்கள்
- குளிரூட்டப்பட்ட வசதியான கடை. ஒரே விஷயம் - சில சமயம் காத்திருக்க வேண்டி வரும்.
- அக்கம் பக்கத்தில் இருப்பர்களுக்கு இலவச டோர் டெலிவரி செய்கிறார்கள்.

வேறு என்ன வேண்டும்.

ஏற்கனவே இந்தத் துறையில் இருக்கும் தனியார்கள் ஒட்டு மொத்தமாக சேர்ந்து வருமான ஆதாயத்திற்காக லாபி செய்து எதையும் குழப்பாமல் இருக்க வேண்டும்.

இப்போதைக்கு நகரில் 6 இடங்களில் மட்டும் தான் கிளைகள் இருக்கின்றன. மொத்தம் 50இடங்களில் கிளைகள் துவங்க திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனால் தேர்தல் முடிவும் வரை மேலும் கிளைகள் துவங்க மாட்டார்கள் என்று கடைக்கு அருகில் இருந்த அரசு ஊழியர் போல தோற்றமளித்த சிலர் சொன்னார்கள். இதன் தர்க்கம் எனக்கு புரியவில்லை.

இந்த கடைகளின் எண்களை தருகிறேன். தேவைப்பட்டால் அழைத்து குறைந்த செலவில் மருந்துகள் வாங்கிக் கொள்ளுங்கள்.

தேனாம்பேட்டை: 23453448 (24 மணி நேர கடையிது)
அசோக் நகர்: 23453457 (காலை 9 முதல் மாலை 9 வரை)
பெசண்ட் நகர்: 23453451 (காலை 9 முதல் மாலை 9 வரை)
கீழ்பாக்கம்: 23453439 (காலை 9 முதல் மாலை 9 வரை)
ராயப்பேட்டை: 23453449 (காலை 9 முதல் மாலை 9 வரை)
ராஜா அண்ணாமலைபுரம்: 23453440 (காலை 9 முதல் மாலை 9 வரை)
 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman