யாராவது விடை சொல்வார்கள். சரி தப்புன்னு comment மட்டும் போட்டுட்டு தப்பித்து விடலாமென்று பார்த்தேன். யாரும் விடை கொடுக்காத நிலையில் இவற்றின் விடையை தனிபோஸ்டாக போடுகிறேன்.
1) மஹாராஜா (அல்லது லிட்டில் மஹாராஜா). J Walter Thompson என்ற நிறுவனம் உருவாக்கிய மாஸ்காட் இது.
2) அப்பு. 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஏஷியாட் போட்டிகளின் மாஸ்காட். அதன் தனி சிறப்பு எதிர்வரும் கிரிக்கெட் உலககோப்பைக்கும் இதையே மாகாட்டாக தீர்மாணித்திருக்கிறார்கள் என்பது.
3) டெக்கான் ஏர்வேய்ஸ் நிறுவனம் காமன் மேனை தங்கள் மாஸ்காட்டாக ஏற்றுக் கொண்டனர். நடுத்தர வர்கதினருக்காக low cost airlines நடத்திய இந்த நிறுவனத்திற்கு ஏற்ற மாஸ்காட்
4) Gattu என்பது அந்த பொடியனின் பெயர். இதை உருவாக்கியவர் R K Laxman. ஏஷியன் பெயிண்ட் நிறுவனத்தின் மாஸ்காட்டாக ஒரு காலத்தில் இருந்தான்.
5) Shera என்பது அந்த புலியின் பெயர். இப்போது நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிகளுக்கான மாஸ்காட். பெங்களூரைச் சேர்ந்த Idiom என்ற நிறுவனம் உருவாக்கிய மாஸ்காட் இது.
6) இவைதான் 2012 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்ஸ் மற்றும் Paraolympics போட்டிகளுக்கான மாஸ்காட்கள்- Wenlock மற்றும் Mandeville. இவற்றின் ஆன்லைன் வசிப்பிடம் - http://www.london2012.com/mascots. ஏற்கனவே இவை பற்றி antichrist, illuminati influence அது இது என்று ஆரம்பித்து விட்டார்கள்
ஒரு பயணம் சில கோயில்கள்
என் க்ஷேத்ராடன அனுபவங்கள் குறித்து தமிழ் ஹிந்து தளத்தில் சமிபத்தில் எழுதிய கட்டுரை இந்த சுட்டியில் வாசிக்கலாம்.
பதிவு வகை::
க்ஷேத்ராடனம்,
தமிழ் ஹிந்து
மாஸ்காட் புதிர்
மாஸ்காட்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். பொதுவாக ஒரு பண்டத்தின் பிரதிநிதியாக மக்களுக்கு அடையாளப்படுத்துவதற்காக உருவாக்கப்படுபவை. இவற்றின் பயன்பாடு விளையாட்டுத்துறையில் மிகவும் அதிகம். ஒரு அணியின் ரசிகனாகவோ, விளையாட்டுப் போட்டியின் பிரதிநிதியாகவோ அடையாளப்படுத்த உருவாக்கப்படுபவை. இந்த புதிர் மாஸ்காட்டுகளைப் பற்றியது. மிகவும் எளிதான புதிர்.
1)
இது தான் இந்தியாவின் முதல் மாஸ்காட் என்று சொல்லலாம். இந்த மாஸ்காட்டிற்கு ஒரு பெயர் உண்டு. சொல்லுங்கள்.
2) சரி இந்த மாஸ்காட்டைப் பாருங்கள். இதன் பேரைச் சொல்லுங்கள் - மிகச் சுலபமான கேள்வி தான் இல்லையா. ஒரு துணை கேள்வி. வேறெந்த மாஸ்காட்டிற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்த மாஸ்காட்டிற்கு உண்டு. அது என்ன ?
3) இதுவும் சுலபம் தான். ஏறக்குறைய 50 வருடங்களுக்கு முன் R K laxman-ஆல் இந்தியாவின் சாதாரண் குடிமகன் (Common Man) உருவாக்கப்பட்டான். அன்று முதல் ஒவ்வொரு இந்தியனின் உணர்வையும் இந்த common man பிரதிபலிக்க தவறவில்லை. இந்த பிம்பந்தை ஒரு நிறுவனம் சரியாக பயன்படுத்திக் கொண்டு இவனை தங்கள் நிறுவனத்தின் மாஸ்காட்டாக அறிவித்தார்கள். எந்த நிறுவனம் இது. கூகிளில் சரியான keyword கொண்டு தேடினால் 2 வினாடிகளில் பதில் சொல்லிவிடுவீர்கள்.
4) தொலைகாட்சி பெட்டிகளின் வழியாக உங்கள் இல்லங்களுக்கு வந்து பெயிண்ட் அடித்துக் கொண்டிருந்த இந்த பொடியனின் பெயர் என்ன ?
5)இந்த புலியை எதற்கு மாஸ்காட் என்று யோசிக்காமல் சொல்ல வேண்டும். கூகிள் செய்தாலோ, பக்கத்தில் கேட்டாலோ உங்கள் தலையில் நீங்களே ஒரு முறை குட்டிக் கொள்ளவும்.
6) கீழே நீங்கள் படத்தில் பார்ப்பவையும் மாஸ்காட்கள் தான் - இவை எதன் மாஸ்காட்கள் ?

கடந்த சனிக்கிழமை...
சாதனை மாநாட்டின் குறிப்புகள்
பங்கேற்பாளர்கள் ஒருவர் கூட காலதாமதாகாமல் வராத கூட்டம் என்ற அளவில் இந்த மாநாடு ஒரு சாதனை மாநாடாக மாறியிருக்கிறது.
இரண்டாவது முக்கியமான சாதனை தமிழ் இலக்கிய சூழல் குறித்தும் இணைய சர்ச்சைகள் குறித்தும் 2 நிமிடத்திற்கு மேல் யாரும் பேசவில்லை என்பது.
இந்த கூட்டத்தில் புத்தகம் இரவல் கொடுப்பவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் 33 % புத்தகத்தை இரவல் வாங்குபவர்களும் மீதி 67 % புத்தகத்தை கொடுப்பவர்களுமாக இருந்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 33 விழுக்காடினர், இந்த கூட்டத்தை இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதை மீது 33 விழுக்காடினரும் வழி மொழிந்ததால் இந்த கருத்து பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இனிமேல் இந்த கூட்டம் மாலை 5 மணிக்கே துவங்கும். மழைக்காலங்களில் 4 30க்கு துவங்கும்.
இந்த கூட்டத்தில் ஏறக்குறைய 7 புத்தகங்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.
சாரு நிவேதிதா புத்தகங்கள் அதிக அளவில் வழங்கப்பட்டன.
ஒரே ஒரு ஜெயமோகன் புத்தகமும், ஒரு வைரமுத்து புத்தகமும் (ஜூலை 13 ஸ்பெஷல்) இரவல் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள் அனைவரும் சினிமாவிலும் ஆர்வமுள்ளவர்கள் என்பதால் விவாதமும் கருத்துகளும் சினிமா குறித்தும் இருந்ததில் ஆச்சரியமில்லை.
விழுக்காடுகளில் எழுதி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறேன் என்று கூட்டத்தில் என்னைத் தவிர கலந்து கொண்ட மற்ற இரண்டு பேரும் நினைக்கக்கூடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
அடுத்த கூட்டம் குறித்த அறிவிப்புடன் மீண்டும் சந்திக்கிறேன்.

Unturned Pages,
கூட்டம்
இந்த சனிக்கிழமை...
Unturned Pages-இன் முதல் சந்திப்பு இந்த சனிக்கிழமை நடத்துவதாக உத்தேசம்.
எங்கே: பெசண்ட் நகர் கடற்கரை போலிஸ் பீட் பின்புறம் இருக்கும் மணலில்
எப்போது: மாலை 5 30 மணி அளவில்
இந்த சந்திப்பில் இந்தியாவில் கட்டுபாடின்றி உயர்ந்து கொண்டே இருக்கும் பணவீக்கத்தை கட்டுபடுத்துவது குறித்தோ, பிரமிளின் கவிதைகளில் காணப்படும் படிமங்கள் குறித்தோ, சட்டீஸ்கரில் மாவோவிஸ்ட் அமைப்புகள் மீதான இந்தியாவின் கொள்கை நிலைபாடு குறித்தோ மற்றும் இது போன்ற அதிகனமான விஷயங்கள் குறித்தோ சத்தியமாக பேசமாட்டோம் என்ற உறுதி மொழியை உங்களுக்கு அளிக்கிறேன்.
இந்த சந்திப்பில் புத்தகங்களை வாடகைக்கு தருபவர்களும் வாடகைக்கு வாங்குபவர்களும் பரஸ்பரம் சந்தித்துக் கொண்டு புத்தகங்களை பரிமாறிக்கொள்ளலாம். இது வரை UnturnedPages-இல் வாடகைக்கு கிடைக்கக்கூடிய புத்தக பட்டியல் http://letsturnanewleaf.blogspot.com என்ற வலைதள முகவரியில் இருக்கிறது.அதில் உங்களுக்குத் தேவையான புத்தகத்தை எனக்கு முன்கூட்டியே சொல்லி விட்டால் அதை எடுத்து வந்து உங்களுக்கு தர வசதியாக இருக்கும்.
இந்த சேவை குறித்து உங்களுக்கு கருத்துகள்/ ஆலோசனைகள் ஏதும் இருந்தால் தெரியப்படுத்தலாம். இன்னும் அதிகமாக தேவைப்படும் வசதிகள் குறித்தும் தெரியப்படுத்தலாம்.
இந்த சந்திப்பை மாதம் ஒருயாவது கட்டாயம் நடத்தும் திட்டம் இருக்கிறது. ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களையும் எடுத்துச் சென்று படித்து அடுத்த மாதம் கூட தரலாம்.
தேவையுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும், தேவையில்லாதவர்களும் இது பயன்படுமா என்று ஆராய்வதற்காவது வரும்படி அன்புடன் அழைக்கிறேன்.

சந்திப்பு