Unturned Pages இவர்களுடன் இணைந்து சில புத்தகங்களை இரவலுக்கு (இலவசமாக) தர முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக கீழ் காணும் 11 புத்தகங்கள் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இது தான். புத்தகத்தைப் படித்து அவற்றை குறித்த உங்கள் கருத்தை/ விமர்சனத்தை உங்களின் குழந்தையில் வலைபதிவிலோ அல்லது உங்கள் வலைப்பதிவிலோ எழுதவும். வலைப்பதிவு இல்லாதவர்கள் உங்கள் கருத்துகளை எனக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.பட்டியல் கீழே (அடைப்புக்குறிக்குள் இருப்பது உகந்த வாசகர் வயது)
1) தங்கி எங்கே (4+)
2) என்ன செய்யலாம் (படித்துக் காட்ட 3+, தனியாக படிக்க 6+)
3) எங்கே அந்த பூனை (3+)
4) வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் (படித்துக் காட்ட 6+, தனியாக படிக்க 8+)5) கடகட குடுகுடு (3+)
6) போண்டாப்பள்ளியில் போண்டாட்டம் (5+)
7) வியாசரின் மகாபாரதம் (6+)
8) என்றும் காந்தி (அனைத்து வயதினருக்கும்) - தனியாக படிக்க 8+ என்பது என் தணிப்பட்ட கருத்து
9) கசகச பறபற (3+)
10) வழி விடு வழி விடு (6+)
11) அ விலிருந்து ஃ வரை (3+)
இதில் தேவைப்படும் புத்தகத்தை நீங்கள் தேர்ந்தெடுத்து என்னை தொடர்பு கொள்ளவும் (ட்விட்டர் அல்லது தனி மடல்).
வாருங்கள், புத்தகத்தை பகிர்ந்து கொள்ளலாம்.
தொடர்புடைய முந்திய பதிவுகள்




