பல்வேறு காரணங்களால் Unturned Pagesஇன் இரண்டாம் சந்திப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் நடக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. அது நாளை நடக்கவிருக்கிறது.
இந்த முறை முதல் இனி வரும் அனைத்து கூட்டங்களிலும் ஏதேனும் ஒரு புத்தகம் குறித்தோ, எழுத்தாளர் குறித்தோ வாசகர் ஒருவரின் பார்வையை/ கருத்தை பதிவு செய்ய விரும்புகிறோம். இந்த பார்வை முற்றிலும் நடுநிலையானதாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஆனால் அது தீவிர வாசகர் ஒருவரின் குரலாக இருக்க வேண்டும் என்பது எங்கள் திட்டம். எழுத்தாளரின் ஆளுமையை தாக்கும் தனி நபர் விமர்சனமாக இது இருக்காது. படைப்புகள் குறித்தே கருத்துகள் முன் வைக்கப்படும்.
நாளை நடக்கவிருக்கும் கூட்டத்தில் ஞான பாஸ்கர் சாரு நிவேதிதாவின் படைப்புகள் குறித்த அறிமுகத்தை அளிக்கவிருக்கிறார். இவர் சாருவின் தீவிர வாசகர். சாருவின் ஒரு புத்தகத்தின் அட்டையைக்கூட பார்த்திராத (சரிவராது என்பது என் திண்ணமான முன்முடிவு) எனக்கு சாரு என்ற எழுத்தாளரை அவர் எப்படி அறிமுகம் செய்து வைக்கப்போகிறார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறது. இதே போல் பங்கேற்கும் பார்வையாளன் (எ) பிச்சைக்காரன், சாருவை கொஞ்சமே படித்திருப்பதாக சொன்னார்.
இது போன்ற ஒரு வாசகர் குழுவுக்கு ஒரு அறிமுகத்தைத் தான் இந்த உரைகள் மூலம் நாங்கள் சாத்தியப்படுத்த விரும்புகிறோம். உரை முடிந்தவுடன் காரசாரமான கருத்து பரிமாற்றமிருக்கும் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.
கலந்து கொள்ள விருப்பமும் நேரமும் இருப்பவர்கள் பெசண்ட் நகர் கடற்கரைக்கு 4 மணி அளவில் வரவும். மேற்சொன்ன இருவரும் புத்தகம் வாடகைக்குக் கொடுப்பவர்கள் என்பதால் உங்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களையும் நீங்கள் பெறலாம்.




No response to “தாமதமான இரண்டாம் சந்திப்பு”
Post a Comment
Trackbacks
Leave a trackback