எலக்ட்ரிக் ரேசர், மேக் 3 என பல பல நவின உபகரணங்கள் வந்தாலும் எனக்கென்னமோ 7 O clockஇல் கிடைக்கும் துரிதம் வேறெதிலும் கிடைக்காதது போல் தோன்றும். கடகடவென இரண்டு இழுப்பு இழுத்தோமா, கிளம்பினோமா என்றிருக்க வேண்டும் - அப்படி இருந்தால் தான் எனக்குத் திருப்தி.
ஆனால் குறைந்த விலைக்கு வாங்கும் 7 O clock இலேயே இன்னும் optimize செய்ய வாய்ப்பு இருப்பதாக எனக்கு அடிக்கடி தோன்றும். பிளேடை மட்டும் மாற்றும் படி தந்தால் இன்னும் கச்சிதமாக இருக்குமே - அதுவும் 5 ரூபாய்க்கு ஒரு பிளேட் செட் என்றால் சுகம் (3-4 ஷேவ் வந்தால் கூட போதும்). நாம் குதிரை ஓட்டிக்கொண்டோ, ரயிலில் போய்க் கொண்டோ ஷேவ் செய்து கொள்ள போவதில்லை. அதிகம் போனால் ஷேவ் செய்து கொண்டே பேசுவேன் - அதற்கெல்லாம் கன்னத்தில் கோடு விழாது. இதற்காக நவின க்ரிப், எக்ஸ்ட்ரா கேர் ஹேண்டில் எல்லாம் என்ன இழவுக்கு ? (இந்த தலைப்பு பற்றி கொஞ்சம் சீரியஸாக பேச வேண்டும் - பிறகு)
ஏதாவது பொருளை வாங்கும் போது எனக்குள் இருக்கும் Indian consumer தலை தூக்கி விடுவான்.
சமிபத்தில் தான் Gillette Guard பார்த்தேன். கண்டவுடன் காதல் வந்துவிட்டது. சில ஷேவ்களுக்குப்பின் தலையை திருகி கடாசிவிடலாம். வேறு தலை. அறிமுக சலுகை 15 ருபாயாம். போதுமே. இதுக்கு மேல் என்ன வேண்டும். வாங்கிப் பார்த்துவிடுவதென்று முடிவு செய்து விட்டேன். இதைத் தவிர, பாதுகாப்பான க்ரிப், comb guard, swivel head என்று கொஞ்சம் அம்சங்கள் வேறு இருக்கின்றன.
பயன்படுத்திப் பார்த்துவிட்டு சொல்கிறேன்.
பிகு: P&G இதை எப்படி உருவாக்கினாக்கினார்கள் என்பது ஜனவரி இதழில் தெரியுமாம் - அதற்கு முன்னோட்டமாக ஒரு சிறிய டீஸர் பிளாக் போஸ்ட்.
http://blogs.hbr.org/anthony/2010/11/three_lessons_from_the_gillett.html




2 Responses to “Gillette Guard”
கில்லட் 3 பிளேட் வாங்கிப் பாருங்கள். அதன் ஒரு செட் 700 ரூபாய் இருக்கலாம். கூடவே 5 பிளேடுகள் இலவசமாகத் தருவார்கள் என நினைக்கிறேன். ஒரு பிளேட் 6 மாததுக்கு வரும் - தினமும் ஷேவ் செய்துகொள்பவர்களுக்கு. எப்படி இருந்தாலும் 4 மாதங்கள் வரும். எவர் பெஸ்ட் இதுதான். ஒரு பிளேடு தனியாக வாங்கினால் 80 ரூபாய் ஆகலாம் என நினைக்கிறேன். நான் இதையே பயன்படுத்துகிறேன். இதைப் பயன்படுத்தியபின்பு 7 0 கிளாக் பிளேடு கூட எரிச்சல் தருகிறதோ என்றுதான் தோன்றும். கில்லட்டில் நிஜமாகவே நீங்கள் ஓடிக்கொண்டே ஷேவ் செய்யலாம், ஒன்றும் ஆகாது. :-)
பிளேடு விபரங்களை பிளேடு போடாமல் சுவையாக சொன்னதற்கு நன்றி
Post a Comment
Trackbacks
Leave a trackback