சாதனை மாநாட்டின் குறிப்புகள்
பங்கேற்பாளர்கள் ஒருவர் கூட காலதாமதாகாமல் வராத கூட்டம் என்ற அளவில் இந்த மாநாடு ஒரு சாதனை மாநாடாக மாறியிருக்கிறது.
இரண்டாவது முக்கியமான சாதனை தமிழ் இலக்கிய சூழல் குறித்தும் இணைய சர்ச்சைகள் குறித்தும் 2 நிமிடத்திற்கு மேல் யாரும் பேசவில்லை என்பது.
இந்த கூட்டத்தில் புத்தகம் இரவல் கொடுப்பவர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் 33 % புத்தகத்தை இரவல் வாங்குபவர்களும் மீதி 67 % புத்தகத்தை கொடுப்பவர்களுமாக இருந்தனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 33 விழுக்காடினர், இந்த கூட்டத்தை இன்னும் கொஞ்சம் சீக்கிரமாகவே ஆரம்பிக்குமாறு கேட்டுக் கொண்டனர். அதை மீது 33 விழுக்காடினரும் வழி மொழிந்ததால் இந்த கருத்து பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இனிமேல் இந்த கூட்டம் மாலை 5 மணிக்கே துவங்கும். மழைக்காலங்களில் 4 30க்கு துவங்கும்.
இந்த கூட்டத்தில் ஏறக்குறைய 7 புத்தகங்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டன.
சாரு நிவேதிதா புத்தகங்கள் அதிக அளவில் வழங்கப்பட்டன.
ஒரே ஒரு ஜெயமோகன் புத்தகமும், ஒரு வைரமுத்து புத்தகமும் (ஜூலை 13 ஸ்பெஷல்) இரவல் வழங்கப்பட்டது.
கலந்து கொண்டவர்கள் அனைவரும் சினிமாவிலும் ஆர்வமுள்ளவர்கள் என்பதால் விவாதமும் கருத்துகளும் சினிமா குறித்தும் இருந்ததில் ஆச்சரியமில்லை.
விழுக்காடுகளில் எழுதி முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறேன் என்று கூட்டத்தில் என்னைத் தவிர கலந்து கொண்ட மற்ற இரண்டு பேரும் நினைக்கக்கூடும் என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.
அடுத்த கூட்டம் குறித்த அறிவிப்புடன் மீண்டும் சந்திக்கிறேன்.




4 Responses to “கடந்த சனிக்கிழமை...”
ROTFL..
I have udayaar books with me. Do you remember we were talking about buying the book during book fair 2009. I bought it at 2010 bookfair. I will give it to you when we meet next time.
சாதனை மாநாடு என்பது உண்மை.. அனால் நீங்கள் சொன்ன காரணங்கள் தவறு...
கோடிகணக்கில் செலவு செய்து , அழைத்து வரப்பட்ட , அரசு மாநாட்டில் , கம்யூட்டர் திருட்டு, சாப்பாடு திருட்டு, இலவச நோய் மனநிலை என்றெல்லாம் குரல்கள் எழுந்தன.. அத்தனை பாதுகாப்புகள் இருந்தும் இந்த நிலை...
உங்கள் இயக்கத்தில், நம்பிக்கையின் அடிப்படையில், எந்த காப்பிட்டு தொகையோ, வேறு எந்த நிரூபனங்களோ இல்லாமல், புத்தக பரிமாற்றம் நடத்துகிறீர்கள்...
சாதனை என்றால் , உண்மையில் இதுதான்..
Yoge: Yes. I am looking for that book actually. Even we discussed about that book on our saturday meet. I will call you and catch up with you to collect this book.
Thanks for the offer :-)
Post a Comment
Trackbacks
Leave a trackback