இன்னும் ஏறக்குறைய 300 அதிக புத்தகங்கள் உங்களுக்காக Unturned Pages வழியாக இப்போது கிடைக்கின்றன. இவை அணைத்தும் தமிழில் முக்கியமான படைப்புகளாக கருதப்படுபவை. அபுணையு, நாவல்கள்/ குறுநாவல்கள், கட்டுரைகள், கவிதைகள் போன்ற தலைப்புகளில் நூல்கள் இருக்கின்றன. முழு பட்டியலுக்கு இங்கே செல்லவும்.
இவை பாஸ்கரின் நூலகத்தை சார்ந்தவை. இப்புத்தகங்கள் அனைத்துக்கும் நாள் ஒன்றுக்கு ரூ 1. வாடகை - அவ்வளவு தான். தேவைப்படும் புத்தகத்தின் தலைப்பை நீங்கள் பாஸ்கருக்கு மிஞ்சலிட்டால் போதும். எங்கு எப்போது எப்படி தொடர்பு கொண்டு புத்தகத்தை பறிமாறிக்கொள்ளுதல் என்பது குறித்த தகவல்களை நீங்கள் அவரிடமே தெரிந்து கொள்ளலாம்.
பாஸ்கரின் நூலகத்தில் சுஜாதா, ஜெயகாந்தன், பா. ராகவன், இரா. முருகன், கோபி கிருஷ்ணன், நா. பா, பாலகுமாரன், அசோகமித்ரன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் என நீங்கள் படிக்க விரும்பும் அனேக எழுத்தாளர்களும் இருக்கின்றனர். இவர்களையும் இவர்களை தாண்டியும் மொத்தம் கிட்டதிட்ட 300 புத்தகங்கள். இவை அணைத்தயும் பகிர்ந்து கொள்ள முன் வந்த பாஸ்கருக்கு நன்றி. அவரை நீங்கள் gnanabaskarr@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ள முடியும். இவரது வலைபதிவு முகவரி http://baskibaski.blogspot.com
இந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இது போன்ற இன்னும் பரந்த ஒரு வலையைத்தான் நான் உருவாக்க விரும்புகிறேன். உண்மையிலேயே படிக்கும் ஆர்வம் கொண்ட மக்களால் ஆன ஒரு வலையில் உலகத்தின் மிக முக்கியமான தலைப்புகளை அதிக செலவில்லாமல் எளிதில் கிடைக்கும் படி செய்து விடலாம் என்பது என் நம்பிக்கை.
உங்கள் நூலகத்தையும் இதனுடன் இணைக்க விரும்பினால் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் நூலகத்தில் எவ்வளவு குறைவான புத்தகங்கள் இருந்தாலும் பரவாயில்லை - எந்த தலைப்பிலிருந்தாலும். Unturned Pages ஒரு இணைக்கும் பாலமாக செயல்படும். ஒருவேளை பலர் தங்கள் நூலகங்களை பகிர்ந்து கொள்ள விரும்பினால் இப்போது இருக்கும் கூகிள் டாக்ஸ் பத்தாது - தொழில்நுட்ப உதவியுடன் புதிய தளத்தை உருவாக்கவும் திட்டமிடுவேன்.




2 Responses to “Unturned Pages வழியாக மேலும் 300 புத்தகங்கள் !!!”
தகவலுக்கு நன்றி கிருஷ்ணா!
-ப்ரியமுடன்
சேரல்
my best wishes....
Post a Comment
Trackbacks
Leave a trackback