Adsense

New Horizon Media புத்தகங்கள் இலவசமாக !!!


Unturnedpages சேவையைப் பற்றி நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம்.  அறியாதவர்கள் இந்த பதிவை படிக்கவும் . இப்போது இந்த சேவையின் விரிவாக்கமாக New Horizon Media புத்தகங்களை UnturnedPages சேவை மூலம் வழங்குகிறோம் - அதுவும் இலவசமாக. முதல் கட்டமாக 40 புத்தகங்கள் இலவசம் என்பதால் ஏதோ முற்றிய கத்திரிக்காய்கள் சந்தைக்கு வந்திருக்கின்றன என்று நினைக்க வேண்டாம் - இந்த புத்தக கண்காட்சியில் சக்கை போடு போட்ட “ராஜீவ் கொலை வழக்கு” புத்தகம் போன்ற முன்னனி புத்தகங்கள், இந்திரா பார்த்தசாரதி, வண்ண நிலவன் மற்றும் சுஜாதாவின் நாவல்கள், தீம் புத்தகங்கள் (விடுதலை புலிகள் குறித்து 3 புத்தகங்கள்/ திருநங்கைகள் குறித்து 2 புத்தகங்கள்), சில சுயசரிதைகள் என கவனமாக தேர்ந்தெடுத்த புத்தகங்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படுகிறன.

இந்த சேவையை பயன் படுத்திக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது தான்.

1) புத்தகத்தை வாடகைக்கு எடுங்கள்

2) புத்தக விமர்சனத்தை 400 வார்த்தைகளுக்கு குறையாமல் உங்கள் வலைபதிவிலோ/ வலைதளத்திலோ எழுதுங்கள் - சுட்டியை எனக்குத் தெரியப்படுத்தவும். வலைபதிவோ தளமோ இல்லையென்றாலும் பரவாயில்லை - உங்கள் விமர்சனத்தை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்

3) படித்து முடித்தபின் புத்தகத்தை சேதமின்றி திருப்பி கொடுங்கள் - ஒரு சமயம் ஒரு புத்தகம் மட்டுமே வழங்கக்கூடிய நிலை இருப்பதால் சேதமின்றி திருப்பி கொடுத்தல் மற்றொரு புத்தகத்தை இலவசமாக பெற உங்களுக்கு உதவும்

4) இத்திட்டத்தின் கீழ் எடுக்கும் புத்தகத்திற்கு வாடகை தர வேண்டாம்

சரி, எந்த எந்த புத்தகம் இத்திட்டத்தின் கீழ் வரும் என்று கேட்கிறீர்களா ? புத்தகப்பட்டியல் UnturnedPages சேவையின் மூல தளமான இந்த சுட்டியில் இருக்கின்றது. புத்தகங்கள் தற்சமயம் இருக்கின்றதா இல்லையா என்ற விபரத்தையும் நீங்கள் இதில் பார்த்துக் கொள்ளலாம். 

புத்தகத்தை எப்படி பெறுவது என்ற modus operandi உங்களுக்குத் தெரியும் தானே ? இல்லையென்றால் UnturnedPages தொடர்பாக இதே வலைதளத்தில் நான் எழுதிய முந்தைய பதிவை படிக்கவும். 

இந்த சேவை இப்போதைக்கு சென்னையில் மட்டுமே !!!

இது தொடர்பாக எந்த சந்தேகம் இருப்பினும் பின்னூட்டத்தில் தெரியப்படுத்தவும்.

9 Responses to “New Horizon Media புத்தகங்கள் இலவசமாக !!!”

kggouthaman said...

ஐயா பெங்களூரில் இருக்கும் என் போன்றவர்கள் என்ன பாவம் செய்தோம்? எங்களுக்கு எதுவும் வாய்ப்பு கிடைக்கச் செய்யக்கூடாதா?

என்னால் இப்போதைக்கு பெங்களூருக்கும் எடுத்துச் சென்று கொடுக்கும் வசதி இல்லை. அது தான் சிக்கலே. இதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்கலாம் - கூடிய சீக்கிரமே.

பெங்களூருக்கு வழி கண்டுபிடித்து விட்டால், அப்படியே கொஞ்சூண்டு அதை நீட்டித்து லாஸ் ஏஞ்சல்சுக்கும் ரூட் போட்டு விடுங்கள். என்னைப் போன்ற புலம் பெயர்ந்த சிறார்களும் இதையெல்லாம் படித்தின்புன்று மதிப்புரை எழுத சீக்கிரம் வழி பிறக்கும்!

லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்

Senthilkumar said...

ebook ஆக தந்தால் அனைவரும் பயன் பெறுவோம். :)

தபால் செலவு, பாதுகாப்பாக திருப்பி தருவது அனைத்திலிருந்தும் விடுபடலாம்.

pichaikkaaran said...

நேற்று இரவு , ௮ மணி அளவில் ,இது விஷயமாக , உங்களுடன் தொலை பேசினேன். தொந்தரவு செய்கிறோமோ , என்று சற்று தயக்கமாக இருந்தது... ஆனால், நீங்கள் பொறுமையாக விளக்கம் அளித்தீர்கள் ..நன்றி...

@sentilkumar: ஒரு புத்தகத்தை ebook வடிவத்தில் விநியோகம் செய்ய அந்த புத்தகத்தை பதிப்பித்த பதிப்பாளருக்கே உரிமை உண்டு. சில சமயம் ஆசிரியருக்கும். எனக்கு அந்த உரிமை இல்லை.

THARISU said...

எனக்கும் இதை பயன்படுத்த விருப்பம் உள்ளது.உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது.ட்விட்டரில் நீங்கள் ப்ரோடேக்ட் செய்துள்ளீர்.

உங்களுக்குத் தேவையான புத்தகம் பற்றிய தகவல் மற்றும் உங்களை தொடர்பு கொள்ளும் முறை பற்றி எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினால் போதும் - krishchandru AT gmail DOT com.

VAAL PAIYYAN said...

SUPERB SIR
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman