Adsense

புத்தக வாடகை சேவைநான் ஒரு புதிய சேவையை துவக்கியுள்ளேன் அது பற்றிய அறிமுகப் பதிவு இது. முதல் மற்றும் முக்கியமான விஷயம் - இது லாப நோக்கில் நடத்தப்படும் வியாபாரமல்ல.

என்னுடைய சிறிய நூலகத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முயற்சியே. இது போல இன்னும் நிறைய பேர் தங்கள் நூலகங்களைப் பகிர்ந்து கொண்டால் இந்த உலகத்தில் சிறந்த நூல்களை தடையற்று கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. 

இதே போல இன்னும் பலரும் தங்கள் நூலகங்களை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் - அப்படி செய்தால் ஒரு மிகப்பெரிய புத்தக வலையை ஏற்படுத்தலாம். அந்த வலையில் மிகவும் தரமான புத்தகங்கள் எளிமையாக கிடைக்கும். 

அவரவர் ரசனைக்கேற்ப first hand review-உடன் நூல்கள் கிடைக்கும். ஒரு மிகப்பெரிய virtual book club உருவாகும். கொஞ்சம் அதிகப்படியான கற்பனை தான் :-)


இதை செய்ய வேண்டும் என்று ஆசையாக வெளிப்படுத்தாமல் முதல் கல்லை நானே நகர்த்த விரும்பினேன். அதன் விளைவு தான் இந்த சேவை.
என்ன மாதிரியான புத்தகங்கள்

இந்த சேவையில் வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் அனைத்தும் என்னுடைய சிறிய நூலகத்தில் இருப்பவை. என்னுடைய ஆன்மிக புத்தகங்களையும், நான் படித்து கிழித்த (Ayn Ran நாவல்கள் பக்கம் பக்கமாக இருக்கின்றன) நாவல்களையும், நான் தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களையும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ஒரு வேளை எதிர்காலத்தில் அதையும் செய்யலாம்.

இந்த புத்தகங்கள் என் ரசணை சார்ந்தவை - அதனால் உங்களுக்குத் தேவையான எல்லா புத்தகங்களும் இங்கே கிடைக்கும் என்ற உத்திரவாதத்தை நான் தர முடியாது. ஆனால் என் ரசணை விரிய விரிய அது உங்களுக்கும் கிடைக்கும்.


Modus Operandi என்ன
இதற்கும் பிற வாடகை நூல் நிலையங்களுக்கும் இருக்கும் முக்கியமான வித்தியாசம் - நீங்கள் முன்பணம் (Advance Deposit) எதுவும் தர தேவையில்லை. வாடகை மட்டும் தந்தால் போதும். அதுவும் மிகவும் குறைந்த வாடகை. இதற்கு கீழ் வேறெங்கும் கிடைக்காது என்ற நம்பிக்கை இருக்கிறது. 

யாராவது ஏமாற்றி விட்டு ஓடிவிட்டால் என்ன செய்வீர்கள் ? என் அனுபவத்தில் மூன்றில் இரண்டு பங்கு பேர் ஒழுங்காக புத்தகத்தை திருப்பி தந்து விடுகின்றனர்.  மிக நல்ல புத்தகங்களில் சிலவற்றை கடனாக கொடுத்து திரும்பி கிடைக்காமல் ஏமாந்த அனுபவமும் எனக்கு உண்டு. Holy blood holy grail அந்த வகையில் ஒன்று.

மீதி இருக்கும் ஒரு பங்கின் மீது கவனம் செலுத்தி இரண்டு பங்கு மக்களை அவமானப்படுத்துவானேன் ?

வாடகையும் குறைவாக இருக்க காரணம் - இது லாப நோக்கில் செய்யப்படுவது அல்ல. நிறைய பேருக்கு நிறைய புத்தகம் எளிதாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.  அதற்கான சாத்தியக்கூறுகளும் நிச்சயம் இருக்கவே செய்கின்றன என நான் நம்புவதால் இந்த சோதனை முயற்சி.


புத்தகம் இருக்கிறதா இல்லையா என்பது போன்ற தகவல்களை நீங்கள் இணையத்திலேயே பார்த்துக் கொள்ளலாம். என்னை மின்னஞ்சலிலோ, ட்விட்டரிலோ தொடர்பு கொள்ளலாம். நான் சென்னையில் இருப்பதால் இந்த சேவை தற்போது சென்னையில் மட்டுமே - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது :-)


புத்தகத்தை பரிமாறிக்கொள்ள நாம் நேரில் தான் சந்திக்க வேண்டும் (இல்லாவிட்டால் சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் ஆகிவிடும்). தவிர்க்க முடியாத காலத்தில் போஸ்டலிலோ கூரியரிலோ அனுப்பலாம். தப்பில்லை.

சென்னை அடையாறு, பெசண்ட் நகர் பகுதிகளில் இருப்பவர்களுக்கு வார இறுதியில் door delivery என்னால் செய்ய முடியும். பிற பகுதி மக்கள் என்னைத் தேடி தான் வர வேண்டும் - இல்லையேல் ஒரு பொது இடம் :-) வேறு வழியில்லை.

இந்த சேவையில் உங்களுக்கு புத்தகத்தை கொடுக்கவோ மறுக்கவோ எனக்கு முழு உரிமையும் உண்டு - புத்தகங்களை நல்ல முறையில் திருப்பித் தரும் கடமை உங்களுக்கு. அப்படி செய்யாவிட்டால் இரண்டாவது முறை என்னிடம் புத்தகத்தை எதிர்பார்த்து ஏமாற வேண்டாம் :-)

பார்ப்போம் - இதை எவ்வளவு தூரம் செய்ய முடிகிறதென்று. இது உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி.

8 Responses to “புத்தக வாடகை சேவை”

Anonymous said...

good idea...muyarchi vertri pera vaazhthukal...

sujatha.

கபீஷ் said...

நல்ல முயற்சி. முன் தொகை இல்லைன்றது ஆச்சரியமா இருக்கு, காரணம் சொன்ன போதிலும். நல்லா நடக்க வாழ்த்துகள்

Fantastic. You need to fine tune further. A great effort.

நல்ல தொடக்கம்...

kggouthaman said...

நல்ல முயற்சி. சில வாரங்கள் முன்பு, திரு முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் கூட அவரிடம் உள்ள நூல்களை படிக்கக் கொடுத்து திரும்ப வாங்குகிறார் என்று படித்தேன். பெரு நகரங்களில், ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வாலண்டியர் இருந்தால், வார / மாத அடிப்படையில், டிமாண்ட் அண்ட் சப்ளை அடிப்படையில் - இதை இன்னும் சிறப்பாகச் செய்ய முடியும் என்று தோன்றுகிறது.
kggouthaman@gmail.com

பா ரா, வின் பதிவின் மூலம் அறிந்துகொண்டேன்.
பாராட்டுக்கள். உங்களை எங்கே சந்திப்பது.விலாசம் ,போன் தர முடியுமா?
ரமணன்

ரமணன் - உங்கள் மின்னஞ்சலை தேடினேன் - தனிமடலிட; கிடைக்கவில்லை. என்னை நீங்கள் krishchandru@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம். உங்களுக்கு முழு விபரம் தருகிறேன்.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman