Adsense

குறுக்கெழுத்து - 3


விடைகளை 18/11/2009 அன்று வெளியிடுவேன் - அதற்கு முன் உங்கள் விடைகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

இடமிருந்து வலம்

1 உணவு - வேறு சொல் (சமஸ்கிருத மூலம்)
6 உதவி - வேறு சொல்
8 இறந்தவர்களுக்கு செலுத்தும் மரியாதை
13 Magical realism-ஐ தமிழில் ___யதார்த்தம் என்று சொல்வார்கள்
15 பாம்பைக் கண்டால் _________யும் நடுங்கும்
16 ஒரு வித முரட்டு துணி - ஓவியத்தின் கேன்வாஸாக பயன்படும்
18 ஆங்கில அதிர்ஷ்டம்
19 இந்தி நடிகை
21 அம்பேத்கார் இந்த இன மக்களின் உரிமைக்காக போராடினார்
22 படி - நிலத்திலும் கிடைக்கும்
23 அணைத்து காய்கறிகளையும் போட்டு செய்யும் ஒரு உணவு வகை
24 பொன்னியின் செல்வனில் வரும் மந்திரவாதியின் பெயர்
வலமிருந்து இடம்
3 அறிவு சார்ந்த படிப்பியல்
5 அமெரிக்காவில் இருக்கும் ஒரு மாநிலத்தின் பெயர்
10 எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய நாவலின் பெயர்
11 பதிமூன்று முதல் பத்தம்போது வயது வரையிலான பருவத்தை ____ வயது என்போம்
12 மகாபாரத்தில் திருதிராஷ்டிரனுக்கு விதுரர் சொன்ன அறிவுரைகளின் தொகுப்பை ____ நீதி என்று சொல்வார்கள்
மேலிருந்து கீழ்
1 சிவன் உண்ட விஷத்தின் பெயர்
2 கதாகாலட்சேபம் செய்பவர் பெயர் - க்ருஷ்ணப்ரேமியின் மருமகள் - _________ ஹரி
3 புறமல்ல
5 _____ பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
6 அனர்கலியின் காதலன்
7 தன் மகனிடமிருந்து இளமையை தானமாக பெற்ற நகுஷ மன்ன்னின் மகன்
9 செடி வளர்ந்து ____ ஆகின்றது - கடைசி எழுத்து இல்லை
10 ________ நின்றாய் காளி
11 ____ ஓரிடம் பாவம் ஓரிடம்
12 ஆச்சரியப்படுதல் - வேறு சொல்
14 டாட்டா குழுமத்தின் தலைவரின் பெயரின் முதல் பாதி - கலைந்துள்ளது
17 இந்து சமய மத நம்பிக்கைப்படி திருமணத்தின் அடையாளமாக பெண்ணுக்கு அணிவிக்கப்படுவது
20 பூமி - வேறு சொல்
22 திரைப்பட்த்தின் நாயகனை ___நாயகன் என்று சொல்வார்கள்
கீழிருந்து மேல்
4 எலும்பில்லாத ராணிக்கு 32 காவலர்கள்- ஒருமை
8 ஒரு இனிப்பு பதார்த்தம்
15 விளைவு
23 வட இந்திய பாடகரின் முதல் பாதி - இவர் பெயரின் இரண்டாம் பாதிக்கு கடவுள் என்று அர்த்தம்
25 சலிக்க உதவுவது

One response to “குறுக்கெழுத்து - 3”

இடமிருந்து வலம்

1 ஆகாரம்
6 சகாயம்
8 அஞ்சலி
13 மாய
15 படை
16 கித்தான்
18 லக்
19 தபு (இவங்கள இந்தி நடிகைன்னு மட்டும் சொல்றத ஒத்துக்கமுடியாது :-))
21 தலித்
22 கல்
23 அவியல்
24 ரவிதாசன்

வலமிருந்து இடம்

3 அறிவியல்
5 நெப்ராஸ்கா
10 யாமம்
11 பதின்ம
12 விதுர

மேலிருந்து கீழ்

1 ஆலகாலம்
2 விசாகா
3 அகம்
5 நெஞ்சு
6 சலிம்
7 யயாதி
9 மர
10 யாதுமாகி
11 பழி
12 வியத்தல்
14 தன்த்ர
17 தாலி
20 புவி
22 கதா

கீழிருந்து மேல்

4 பல்
8 அப்பம்
15 பலன்
23 அதனன்
25 சல்லடை

ஒரு வேண்டுகோள்: இங்கே இருக்கும் கட்டத்திலேயே பதில்களை நிரப்பும்படி செய்யலாமே? அது எங்களுக்கு கொஞ்சம் வசதியா இருக்கும்.

சான்று: இலவசக்கொத்தனார் பக்கம் http://elavasam.blogspot.com/2009/11/2009.html

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman