Adsense

IPL - Dossier


சென்ற முறை நீங்கள் இந்த வலைதளத்திற்கு வந்ததற்கும் இப்போது வந்ததற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த வலைதளத்தின் தோற்றத்தை நான் மாற்றியிருப்பதை நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. படிப்பதற்கு இன்னும் சுவாரஸ்யமான அதே சமயம் கண்ணை உறுத்தாத லே அவுட் தேடி கடைசியில் இந்த லே அவுட் எனக்கு சரியாகப் பட்டது. படிக்க எவ்வளவு ஏதுவாக இருக்கிறது என்பதை நீங்கள் தான் சொல்லவேண்டும்.

IPL-இல் நடப்பதும் மிகவும் சுவரஸ்யமாக இருக்கிறது. சென்ற ஆண்டில் முதல் பாதியில் ஏறக்குறைய எந்த அணிகள் கடைசி நான்கு இடத்திற்கு செல்லும் என்பது கணிக்கக் கூடியதாக இருந்தது. இந்த முறை அவ்வளவு எளிதாக இருக்குமென்று தோன்றவில்லை. ஏறக்குறைய பாதி டோர்ணமெண்ட் நடந்து முடிந் நிலையில் எந்த ஒரு ஆட்டமும் table rankings- மாற்றி விடக்கூடியதாகவே இருக்கிறது.

தோணியின் அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவை நாம் கடந்த இரண்டு ஆட்டங்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்த மாற்றங்கள் எல்லாம் நாம் ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிவுகளில் பார்த்தவை. நான் மட்டுமல்ல கிரிக்கெட்டின்/ 20-20இன் போக்கு பிடிபட்டவர்கள் எல்லோருமே சிபாரிசு செய்தது தான். இருந்தாலும் கடைசி நான்கு இடங்களுக்கான போட்டியில் நாம் சற்று பின் தங்கி தான் இருக்கிறோம். முந்தைய போட்டிகளில் நாம் தோற்றதன் விளைவை நாம் சந்தித்தே ஆக வேண்டும். இதனால் இரண்டாம் பகுதி மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ஏறக்குறைய குடுமிப் பிடி சண்டை தான்.


இந்த IPL-இல் யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயம் சூப்பர் ஹிட் ஆகியிருக்கிறது. அது ஒரு பிளாக். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருப்பவர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒரு நபர் தென் ஆப்பரிக்காவில் இந்த டோர்ணமெண்ட்டின் போது நடக்கும் கூத்துகளை எல்லாம் பிளாகாக எழுதித் தள்ளுகிறார். கொஞ்சம் கற்பனை கலந்திருந்தாலும் சில நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் உண்மையானதாகவே தோன்றுகிறது. இவர் யார் - உண்மையிலேயே தென் ஆப்பரிக்காவில்/ அணியில் இருப்பவர் தானா இல்லை கிடைக்கும் செய்திகளை வைத்துக் கொண்டு சும்மா ஜல்லி அடிக்கிறாரா என்றெல்லாம் பலரும் விவாதித்துக் கொண்டிருக்கின்றனர். எது எப்படி இருந்தாலும், இவரது எழுத்து typical page 3 content. கிரிக்கெட் பற்றிய பதிவுகள் அல்ல. கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் பற்றிய பதிவு - பெரும்பாலும் கொல்கத்தா அணியை வாரும் பதிவுகள். அதுவும் ஆட்டக்காரர்களுக்கு இவர் வைக்கும் பட்டப்பெயர்கள் - அநியாத்துக்கு காமெடி. பொதுவாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மீது பலருக்கும் காழ்ப்புணர்வு உண்டு (ஷாருக், புக்கனன் - என்ன ஒரு காம்பினேஷன்) அந்த காழ்ப்புணர்வுக்கு தீனி போடுவதாக அமைந்திருக்கிறது இந்த பிளாக்.

சென்னை அணிக்கு கடைசி நான்கு இடங்களைப் பிடிக்க என்ன தேவை ? எளிதான பதில் தான் ஜெயிக்க வேண்டும். ஆனால் யாரோடு என்பது தாம் அதி முக்கியம். டெக்கான், கிங்க்ஸ் XI, மும்பை மற்றும் ராஜஸ்தான் - இவைதான் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஆட்டங்கள். கொல்கத்தா மற்றும் பெங்களூர் ஆட்டங்களில் தோற்க வேண்டும் என்றல்ல. இவர்களுக்கு எதிராக நாம் பெறும் வெற்றியைக் காட்டிலும் மேலே சொன்ன அணிகளுக்கு எதிராக பெறும் வெற்றிகள் நம்மை மேலே தூக்கிச் செல்லும் என்பதைக்காட்டிலும் அவர்களை கீழே இறக்கும் என்பது தான் முக்கியம்.

இன்னொரு விஷயம் டேபிளில் அடியில் இருக்கும் அணிகள் சென்னை அல்லாத பிற அணிகளுடன் வெற்றி பெறுவது சென்னைக்கு பெரிதும் சாதகமாக அமையும். அதாவது non conclusive results அமையவேண்டியது சென்னைக்கு முக்கியம். உதாரணத்திற்கு கொல்கத்தா டெக்கானை வெல்வது டெக்கானை பெரிதும் பாதிக்கும் (ஏனென்றால் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்க வேண்டிய 2 பாயிண்டுகள் கிடைக்காமல் போய்விடும்) - கொல்கத்தாவுக்கு அது பெரிய சாதகமாக இருக்காது. ஏற்கனவே டேபிளின் கீழே இருக்கும் இவர்களுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமையும் (அதே சமயம் அவர்கள் இப்படியே எல்லா அணியையும் வெல்லத் துவங்கினால் போட்டியே தலை கீழாக மாறி விடும் - அப்படி நடக்கும் என்று எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை)

சரி, இப்போது இருக்கு அணியை எடுத்துக் கொள்வோம். இது வெல்லக்கூடிய அணியா ? நிச்சயமாக இந்த டோர்ணமெண்டில் இருக்கும் மிகவும் பலம் வாய்ந்த அணி இது தான் என்று நான் சந்தேகமில்லாமல் சொல்லலாம். ஆனால் பெரும்பாலும் சறுக்குவது பந்து வீச்சில் தான். சென்ற இரண்டு ஆட்டங்களைப் பார்த்தபோது ஏறக்குறைய சரியான காம்பினேஷன் அமைந்து விட்டதாகத் தான் தோன்றுகிறது. இன்னும் தோணி இந்த டோர்ணமெண்டில் சோபிக்கவில்லை என்பது கொசுறு. அவர் ஃபார்முக்குத் திரும்புவது middle order-ஐ வலுவாக்கும். இப்போது நாம் சங்கடத்தில் இருக்கும் ஏரியா இது.

அருமையான துவக்கம் கிடைத்தும் நம்மால் அதை பயன் படுத்திக் கொண்டு இமாலய டார்கெட் செட் செய்ய முடிவதில்லை. காரணம் கடைசி 5 ஓவர்களில் நாம் சராசியாக 7-8 ரன்கள் தான் எடுக்கிறோம். இந்த நிலை மாறினால் இந்த டோர்ணமெண்டில் 200 ஓட்டங்கள் ஒரே இன்னிங்க்ஸில் எடுக்கக்கூடிய அணி இதுவாகத் தான் இருக்கும்.

இன்றைய தேதியில் the tournament is wide open.

No response to “IPL - Dossier”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman