Adsense

IPL 2009 - Day 2 (DD Vs KXI)


(Photo Source: www.cricinfo.com)

அதிரடி பேட்டிங்கிற்கு சொந்தமான இரு அணிகள் மோதினால் எப்படி இருக்கும் என்பதற்கு இன்றைய டெல்லி டேட் டெவில்ஸ்க்கும் கிங்க்ஸ் XI க்கும் நடந்த ஆட்டம் ஒரு உதாரணம்.

இருப்பினும் வருணதேவன் கருணை இல்லாததால் முழு ஆட்டத்தையும் பார்க்க முடியவில்லை. 12 ஓவராக குறைந்த இந்த அட்டம் டெல்லி டேர் டெவில்ஸ் விளையாடிய போது மீண்டும் வந்த மழையால் 6 ஓவராக குறைக்கப்பட்டது.

சேவாக் ஆடும் போது எந்த ஒரு கஷ்டமான இலக்கும் எளிதாகவே தோன்றும். இன்றைக்கும் அவர்கள் எடுத்தது ஒன்றும் எளிதான் இலக்கல்ல - 6 ஓவர்களில் 54 ரன்கள். இதை விக்கெட் இழப்பின்றி ஒரு ஓவர் மீதமிருக்கும் நிலையில் டெல்லி டேர் டெவில்ஸ் அடித்தது தான் இந்த டோர்ணமெண்டில் இவர்கள் மிகவும் வலுவான அணி என்பதற்கு சாட்சி. இவர்கள் பந்து வீச்சு சற்று சுமார் தான். இதை நாம் போன சீசனிலேயே பார்த்தோம். மெக்ராத்தும் வெட்டோரியும் தான் இவர்களுக்கு உலகத்தரத்தில் இருக்கும் பந்துவீச்சாளர்கள். சேவாக் 5 ஃபுல் டைம் பவுலர்கள் வைத்துக் கொண்டு களம் இறங்குவது தான் நல்லது. ஏனென்றால் இவர்கள் squad-இலேயே மிகப்பெரிய ஆல்ரவுண்டர்கள் கிடையாது. இதனால் ஒரு பவுலர் சரியாக பந்து வீசாத நிலையில் பார்ட் டைம் பவுலர்கள் மீது அதிக சுமை ஏற்படும். இதையும் சென்ற டோர்ணமெண்டிலேயே சேவாக் கற்றிருப்பார் என்று நம்பலாம்.

இந்த டோர்ணமெண்டில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான ஆட்டக்காரராக இருக்கப் போகிறவர் கரண் கோயல். இன்று இவர் அடித்ததால் மட்டுமல்ல. இவர் மிகவும் தன்னம்பிக்கையான அட்டத்தை இன்று வெளிப்படுத்தினார். முதல் பந்திலிருந்தே அடித்து ஆடக்கூடிய இயல்பு உடையவர் என்று வெளிப்படுத்தினார். கிங்க்ஸ் XI இன்று ஆடியதைப் பார்த்தால் இவர்களின் பலமும் பேட்டிங் தான் என்று தோன்றுகிறது. இவர்கள் இரண்டாம் பேட்டிங் செய்வது தான் மிகவும் உகந்ததாகத் தோன்றுகிறது. இர்பான் பதானைத் தவிர வேறு எவரும் நிறுபிக்கப்பட்ட பந்து வீச்சாளர்கள் கிடையாது (ஸ்ரீசாந்த் காயம் காரணமாக முதல் சில போட்டிகளில் ஆடப்போவதில்லை - ஜேம்ஸ் ஹோப்ஸும் முதல் சில ஆட்டங்களில் இருக்க்ப்போவதில்லை என்று தெரிகிறது. இன்றைக்கு மழைக்குப்பின் திரும்ப வந்த பஞ்சாப் பவுலர்கள் ஏதோ முடிந்து போன ஆட்டத்திற்கு கடைசி formality முடிக்க வந்தது போல வந்தார்கள். இத்தனைக்கு அவர்கள் திரும்ப வந்த போது 7 ஓட்டங்கள் ஒரு ஓவருக்கு எடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. அவர்கள் பவுலிங் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையைக் காட்டிலும் சேவாக் மற்றும் கம்பீர் மீது அவர்களுக்கு இருந்த நம்பிக்கையை தான் இது வெளிக்காட்டியது :-). தாம் தோற்கப் போகிறோம் என்று எதிராளியை நம்ப வைப்பதிலேயே பாதி வெற்றி உறுதியாகிறது - இந்த விஷயத்தில் சேவாகும் கம்பீரும் மனதளவில் பஞ்சாப் வீரர்களை தோற்கடித்து விட்டனர். அவர்கள் பேட்டிங் செய்ததெல்லாம் சும்மா formality.

மிகவும் முக்கியமான கேள்வியை இன்றைய ஆட்டங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன.

20 - 20 ஆட்டத்திற்கு டக்வொர்த் லூயிஸ் ரூல் இருக்க வேண்டுமா என்பது தான் அது. இந்த ஐ பி எல் ஆட்டத்தின் விதியின் படி குறைந்தது 5 ஓவர்களாவது வீசப்பட வேண்டும், ஒரு ஆட்டத்தை முழுமையானதாக அறிவிக்க. 5 ஓவர்கள் கூட போடுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிந்ததாக அறிவிக்கப்பட்டு பாயிண்டுகள் பிரித்துக் கொடுக்கப்படும்.

இதில் பிரச்சனை என்னவென்றால் ஒரு நாள் போட்டிகளில் பின்பற்றப்படும் இந்த டக்வொர்த் லூயிஸ் ரூல் 20 - 20இலும் பின் பற்றப்படுவது பொறுத்தமானது அல்ல. எப்படி டெஸ்ட் போட்டிக்கென ஒரு தனி வடிவம் இருக்கிறதோ அதே போல 20 - 20 ஆட்டமும் தனி வடிவம் கொண்ட ஆட்டம். இதை ஒரு நாள் போட்டியின் சுருங்கிய வடிவம் என்பது பார்ப்பது தவறு. இதற்கு இயற்கையின் இடையூறுகளுக்கு ஏற்ப முடிவை நிர்ணயிக்க வேறொரு விதியையோ - அல்லது ஒரு நாள் போட்டியில் பயன்படுத்தப்படும் டக்வொர்த் லூயிஸ் விதியை 20 20 ஏற்ப மாற்றியோ தான் பயன்படுத்த வேண்டும்.

ஓவர்களை குறைத்து இடையூறு ஏற்பட்ட போது ஆட்டம் இருந்த நிலையை கணக்கில் கொண்டு வெற்றி இலக்கை நிர்ணயிப்பது என்பது பொருத்தமாக இருக்காது. சில காரணங்கள் இருக்கின்றன

1) 20 20 என்பது ஏற்கனவே குறைந்த ஓவர்களைக் கொண்டு ஆடப்படும் வடிவம் - தவறுகளுக்கு வாய்ப்பு என்பது இல்லை. இதில் ஓவர்கள் மேலும் குறைக்கப்படுவதால் come back opportunity மிகவும் குறைகிறது - இதனால் ஆட்டத்தின் சுவாரஸ்யம் கெடுவதோடு கிரிக்கெட்டின் competitive spirit கெட்டு விடுகிறது. The game is not over until the last ball is bowled என்பார்கள். ஓவர்கள் குறைக்கப்படுவதால் இந்த விதி இனிமேல் 20 20 ஆட்டத்திற்கு பொருந்தாது. மழை ஆட்டத்தை நிர்ணயிக்கும் ஒரு விதியாக இருக்க அனுமதிக்கக் கூடாது.

2) இன்னுமொரு முக்கியமான காரணம் - திடிரென வரும் மழையை கணக்கில் வைத்துக் கொண்டு முழு ஆட்டத்தின் strategy வடிவமைக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அளவு வரை தட்ப வெட்ப காரணிகளை கணக்கில் கொண்டு strategy define செய்ய முடியும். அதற்கு மேல் இப்போதைய தொழில்நுட்பத்தின் உதவியில் சாத்தியமில்லை. எதிர்காலத்தில் தொழில்நுட்பம் கிரிக்கெட்டில் வகிக்கக்கூடிய முக்கிய பங்குகளில் அதிமுக்கியமானதாக இருக்கப்போவது strategy சம்பந்தப்பட்டதாக இருக்கும். மழையின் குறுக்கீட்டினால் ஆட்டத்தின் போக்கு மீள முடியாத படி நிர்ணயிக்கப்ப்பட்டு விடும் அபாயம் இருக்கிறது - இதை சம்பந்தப்பட்டவர்கள் கவனிப்பர்களாக.


No response to “IPL 2009 - Day 2 (DD Vs KXI)”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman