Adsense

IPL 2009 Day 1 - (RC Vs RR)


(Photo Source: www.cricinfo.com)

இப்படி இந்த ஆட்டம் போகும் என்று யாராவது எதிர்பார்த்திருப்பீர்களா ?

சேம்பியன்கள் தோற்றிருக்கிறார்கள். கிரிக்கெட் வரலாற்றிலேயே நடக்காத ஒன்றல்ல. உலகக்கோப்பை T20 போட்டியில் கூட ஆஸ்திரேலியாவை ஜிம்பாபுவே வென்றது நினைவிருக்கலாம். இருந்தாலும் நேற்று நாம் பார்த்தது உண்மையிலேயே அபாரமான ஆட்டம். டெஸ்ட் டீம் என்று வர்ணிக்கப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் சென்ற முறை சேம்பியன்னான ராஜஸ்தான் ராய்ல்ஸ் அணியை மண்ணைக் கவ்வ வைத்தது இந்த சீசனில் நாம் என்ன எதிர்பார்க்க வேண்டும் என்பதை தெளிவாக உணர்த்திவிட்டது.

துவக்கத்தில் சொதப்பலாக ஆரம்பித்த ராயல் சேலஞ்சர்ஸ் பின்னர் பீட்டர்ஸனும் டிராவிடும் சேர்ந்து கொஞ்சம் கரை தேற்றினார்கள். இவர்களைத் தவிர இந்த அணியில் வேறு எவருமே இரண்டு இலக்க ஓட்ட எண்ணிக்கையை எடுக்கவில்லை. இவர்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த score-உம் பெரிய இலக்கல்ல. ஏறக்குறைய 6.5 RPO அவ்வளவுதான். இந்த இலக்கை எடுக்கத் தவறியது மட்டுமல்ல IPL வரலாற்றிலேயே மிகக்குறைந்த ஓட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தான் ராஜஸ்தான் ராயலின் தோல்வியை பெரிது படுத்திக் காட்டுகிறது.

ராஜஸ்தான் தோற்றதற்கு என்ன காரணம் ? அதுவும் ஸ்மித், சென்ற முறை கலக்கிய அஸ்நோத்கர், யுவராஜை ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த மாஸ்கரனஸ், யூஸுப் பதான், ரவிந்தர ஜடேஜா போன்ற நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தும் ? ஹெண்டர்சன் வேறு நல்ல ஆல்ரவுண்டர். Frivolous batting and care free attitude தான் காரணம் என்று சொல்வேன். டார்கெட் குறைவாக இருப்பதனால் வேகமாக அடித்து முடிப்பது போல ஆட முயற்சித்து வேகமாக விக்கெட்களை இழந்து அணிக்கு இல்லாத பிரஷரை அவர்களே ஏற்படுத்திவிட்டனர். அவர்கள் ஷாட் செலக்ஷனும் மிகவும் மோசமாக இருந்தது. சரி அப்படி என்றால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்களா என்றால் அதுவும் இல்லை - அவர்கள் இன்னிங்க்ஸில் மொத்தமே 1 பவுண்டரியும் 2 சிக்ஸர்களும் தான்.

இந்த வெற்றியில் பெங்களூருவின் பந்து வீச்சாளர்களின் பங்கையும் நாம் பாராட்ட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவர்கள் எதிரணிக்கு control விடவில்லை. விக்கெட் விழ விழ அட்டாக்கிங்காகவே பந்து வீசிக் கொண்டிருந்தனர். ஸ்டெயினும் பிரவின் குமாரும் அற்புதமான லைனில் வீசி நல்ல துவக்கத்தைக் கொடுத்த பின்னர் மீதி இருப்பதை கும்ப்ளேவும் ரைடரும் பார்த்துக் கொண்டனர். என்னைப் பொறுத்தவரை ராஜஸ்தான் ராயல்ஸின் தோல்விக்கு 60 % காரணம் அவர்களின் அணுகுமுறையே காரணம்.

நாம் நேற்று நடந்த இரண்டு ஆட்டங்களிலிருந்தும் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் துவக்கத்தில் ஆடும் ஒரு ஆட்டக்காரர் innings இறுதி வரை ஆடுவது மிகவும் முக்கியம். இதைத் தான் நேற்று சச்சினும், டிராவிடும் செய்தார்கள். இதைத் தான் சென்னை சூப்பர்கிங்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் செய்யத்தவறினார்கள். குறைந்தது ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பாவது முக்கியம் (50 -60). டிராவிடுக்கு இந்த 50 மிக முக்கியமான விஷயம் - யாரும் அடிக்காத சமயத்தில் மேட்ச் ஜெயிக்கக்கூடிய இன்னிங்க்ஸ் ஆடியது அவருக்கு மட்டுமல்ல பெங்களூர் விசுவாசிகக்கும் நம்பிக்கை கொடுத்திருக்கும்.

இந்த ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்டிருக்கும் இரண்டு சாதனைகள்
1) IPL வரலாற்றில் எடுக்கப்பட்ட மிகக்குறைந்த ஓட்டம் - 58 allout
2) அணில் கும்ப்ளே வின் bowling figures 5 for 5 - IPL வரலாற்றில் இதுவரை சிறப்பானது

No response to “IPL 2009 Day 1 - (RC Vs RR)”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman