Adsense

IPL 2009 - Day 1 (CSK Vs MI)


(Photo Source: http://www.chennaisuperkings.com)

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே துவங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் Vs மும்பை இந்தியன்ஸ் ஆட்டத்தின் முடிவு எதிர்பார்த்ததாக இல்லை என்பது தான் உண்மை. டாஸ் அதிர்ஷடம் இருந்த தோனி சரியான முடிவையே எடுத்தார். தட்ப வெட்ப நிலையை சரியாக பயன்படுத்திக் கொண்ட CSK பந்து வீச்சாளர்கள் திறமையாக ஆரம்ப ஓவர்களில் ஜெயசூர்யாவையும் டெண்டுல்கரையும் கட்டுப்படுத்தினர். முதல் ஐந்து ஓவர்களில் எந்தவிதமான கன்வின்சிங் shot-உம் அடிக்கப்படவில்லை - துஷாராவை ஜெயசூர்யா down the track வந்து அடித்த அந்த பவுண்டரியைத் தவிர. இருப்பினும் இருவரும் விக்கெட் இழக்காமல் இருந்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தது innings-இன் பிற்பகுதியில் கொஞ்சம் அதிரடியாக ஆட வழி வகுத்தது. ஷிகார் திவானுக்கு தென்னாப்பிரிக்க விக்கெட் சோதனையளித்ததை கண்கூடாக பார்க்க முடிந்தது.

ஆரம்பம் முதல் முழுக்க சென்னையின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டம் (15வது ஓவரில் 102 ரன்கள் என்பது 20-20 standardsக்கு சரியே) மாறத்துவங்கியது அபொஷேகின் அதிரடி ஆட்டத்தில் தான் என்றால் மிகையில்லை. பொதுவாகவே கிரிக்கெட்டில் ஒரு விதி உண்டு முதலில் பேட்டிங் செய்த அணி துவக்கத்தில் எவ்வளவு மோசமாக ஆடினாலும் அவர்களது இன்னிங்க்ஸ் எப்படி முடிகிறது என்பதைக் கொண்டு அவர்கள் பந்து வீச வரும் போது அவர்களுக்கு ஒரு momentum கிடைக்கும். கடைசி ஆட்டக்காரர்கள் அதிரடியாக கடைசி 5 ஓவர்களில் 50 ரன்கள் சேர்த்தால் அந்த கடைசி 5 ஓவர்களே அவர்கள் பந்து வீசுவதற்குத் தேவையான momentum கொடுக்கும். மும்பைக்குத் துவக்கம் விக்கெட் வகையில் நல்ல அடித்தளம் கிடைத்தாலும் 15 ஓவர் வரை 7 RPO இருந்த அவர்கள் innings விறுவிறுப்பை அடைந்தது கடைசி 5 ஓவர்களில் தான். அவர்கள் பேட்டிங்கின் கடைசி ஓவர்களில் இருந்து மும்பையின் பக்கம் காற்று வீசத் துவங்கிவிட்டது.

சென்னை பந்து வீச்சில் பெரிய சொதப்பல்கள் எதுவும் இல்லை தான் சொல்லவேண்டும். ஃபிளிண்டாஃபின் அந்த ஒரு ஓவரும் 20-20 போட்டிகளில் சகஜமாக நடக்கக்கூடிய ஒன்று. ஆனால் தோனி அஷ்வின்னை டீமில் எடுத்து விட்டு ஒரு பந்து கூட ஏன் போட விடவில்லை என்று எனக்குப் புரியவில்லை. பொதுவாக 5 பவுலர்களை வைத்தே ஆடும் வழக்கம் உள்ள தோனி - one change-ஆக அஷ்வினை அறிமுகப்படுத்தியிருக்கலாம். இன்னுமொரு ஆச்சரியம் முரளி ஆட்டத்தில் இல்லாதது. ஜோகிந்தர் சர்மாவுக்கு பதிலாக முரளி எந்த நாளும் சிறந்த பவுலர். கடைசி ஓவர் செண்டிமெண்ட் இன்னும் தோனியை விடவில்லையா என்று தெரியவில்லை ?

பெரியதாக கோட்டை விட்டது பேட்டிங்கில் தான். துவக்கத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து கொண்டே இருந்தது சென்னையின் மிகப்பெரிய பலவீனம். மும்பையில் டெண்டுல்கர் ஆடியது போல ஒரு முனையில் நிலையாக யாரும் ஆடவில்லை. இது தான் சென்னைக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது. மேலும் ஃபிளிண்டாஃபை இவ்வளவு முன்பு இறக்கியதும் பத்ரியை இவ்வளவு கடைசியில் இறக்கியது ஏனென்று புரியவில்லை. என்னைப் பொறுத்தவரை இவர்கள் இருவரின் order-உம் மாறி இருக்க வேண்டும். சட சட என்று இரண்டு விக்கெட்கள் வீழ்ந்த பின்னர் கொஞ்சம் rotate செய்யும் ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர் பத்ரி.

இன்னுமொரு சொதப்பல் ஃபீல்டிங். ஹைடனெல்லாம் sitter-ஐ தவற விடுவார் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

இந்த ஒரு ஆட்டத்தை வைத்து சென்னையை குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது. ஆனால் இதன் மூலம் பெற்ற பாடங்களை சென்னை தன் அடுத்த ஆட்டங்களில் செயல்படுத்தும் என்று நம்புவோம்.

2 Responses to “IPL 2009 - Day 1 (CSK Vs MI)”

Arun said...

நல்ல பதிவு..
ஆனால் விளையாட்டில் இது சகஜம்தான்..
டெண்டுல்கர் தூணாக நின்றது போல சென்னை அணியிலும் இருந்திருந்தால் போட்டி முடிவு சற்று மாறியிருக்கலாம்..
மலிங்க மற்றும் ஹர்பஜன் திறமையாக பந்து வீசினர்..

m bala said...

டெண்டுல்கர் தூணாக நின்றது போல சென்னை அணியிலும் இருந்திருந்தாlum டெண்டுல்கர்க்கு தான் வெற்றி

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman