Adsense

ஆரம்பிச்சாச்சு கொண்டாட்டம்


மு கு: இந்த பதிவுடன் தொடர்புடைய 20-20 உலகக் கோப்பை பற்றிய என்னுடைய post tournament analysis

இன்னும் ஒரு மாதத்திற்கு எல்லோரும் கிரிக்கெட்டைப் பற்றியே பேசலாம் தப்பில்லை. இந்தியாவில் நடக்காமல் போனாதால் வெளிநாட்டில் நடந்தாலும் இந்த ஆட்டத்தின் சூடு குறையப்போவதில்லை.

கிரிக்கெட்டின் பிற பார்மெட்டைக் காட்டிலும் இந்த பார்மெட்டில் இருக்கும் வேகம் தான் இதன் வெற்றிக்கு முதல் காரணம். படபடவென கண் மூடி கண் திறப்பதற்குள் நடந்து முடிந்து விடும். இந்த 2009 ஆம் வருடத்தில் நடக்கும் எல்லா ஆட்டங்களைப் பற்றியும் எழுத வேண்டும் என்ற எண்ணம் இந்த அர்த்த ராத்திரியில் தோன்றியதால் இந்த முதல் பதிவு. இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று தெரியவில்லை. கடவுள் மனது வைத்தால் நடக்கும்.

ஆரம்பமே அதிரடியாகத்தான் இருக்கிறது - KKR நமது கங்குலியின் கேப்டன் கனவுகளை தகர்த்திருக்கிறது. இதனால் கங்குலியின் ஆட்டத்தில் வேகமிருக்குமா என்று தெரியவில்லை. முதல் இரண்டு ஆட்டங்களில் மட்டும் ஆட விட்டு விட்டு மற்ற ஆட்டங்களில் ஆட விடாமல் செய்யவும் வாய்ப்பு உண்டு. இதே முடிவு இந்த போட்டிகள் இந்தியாவில் நடந்திருந்தால் KKR managementஆல் எடுத்திருக்க முடியுமா என்பது கேள்விக் குறி. இதே போன்ற ஒரு நிலை தான் டிராவிடுக்கும். கெவின் பீட்டர்சனுக்கு கேப்டன் பதவி வழங்கியதன் முக்கிய நோக்கம் இதுவே.

இந்த முறை ஆட்டங்கள் தென்னாப்பிரிக்காவில் நடக்கின்றன என்பதால், இரவு நேர ஆட்டங்களில் டாஸ் மிகவும் முக்கியமான காரணியாக இருக்கும். இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இரவில் கொஞ்சம் திண்ற வேண்டியிருக்கலாம்.

இந்த வருடத்தைப் பொருத்தவரை நான் சென்னைக்குத் தான் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று விரும்பினாலும், நடு நிலையிலிருந்து பார்த்தால், வேறு இரண்டு டீமை நாம் போட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும்.
1) டெல்லி டேர் டெவில்ஸ்
2) கொல்கத்தா நைட் ரைடர்ஸ்டெல்லி டீமைப் பொறுத்தவரை இவர்கள் முதல் நான்கு விக்கெட்களை விடாமலே எல்லா ஆட்டங்களையும் ஆடிவிடுவார்களோ என்று மலைக்கத் தோன்றுகிறது. அதிரடி ஃபார்மில் இருக்கிறார்கள் சேவாக்கும் கம்பீரும். இவர்கள் போதாதென்று டேவிட் வார்னரும் AB டிவில்லியர்ஸும் இருக்கிறார்கள். பிரதீப் சங்க்வான் நாம் கவனிக்க வேண்டிய இன்னோரு ஆட்டக்காரர். சென்ற முறை போல கெப்டன்ஸியில் சேவாக் சொதப்பாமல் இருந்தால் கில்லி டீம் இவர்கள்.கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கு சென்ற முறை இல்லாத பலம் இந்த முறை இருக்கிறது (கங்குலி கேப்டனாக இல்லாதைப் பற்றி நான் சொல்லவில்லை). ஓப்பனிங் ஆட்டக்காரர்கள் அதிரடியாக இருக்கும் இன்னோரு அணி இது. சென்ற முறை groin strain காரணமாக ஆடாமல் இருந்த கெய்ல் இந்த முறை எல்லா ஆட்டங்களிலும் இருப்பார் என்பது பந்து வீச்சாளர்கள் வயிற்றில் புளி மூட்டையை கரைத்தது போல் இருக்கும். இவர் போதாதென்று அணியின் புதிய தலைவர் மெக்குலம் வேறு. பந்து வீச்சில் அஜந்தா மெண்டிஸ் இருப்பது இன்னொரு பலம். இந்த அணி சென்ற முறை இவரை தவற விட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஒரு நாள் போட்டிகளில் இந்தியாவுக்கு காட்டிய தண்ணியிலிருந்து தெரிந்து கொண்டிருப்பார்கள்.சென்னைக்கு வருவோம் - தோனி பெரிய பலம். எந்த சூழ்நிலையிலும் பயப்படாமல் நிதானமாக ஆடும் கேப்டன் எல்லா அணிக்கும் கிடைத்து விடுவதில்லை. இதைத் தவிர இந்த சீசன் முழுதும் ஹைடன் விளையாடக் கிடைத்திருப்பது பெரிய பலம். ஆனால் இன்னொரு துவக்க ஆட்டக்காரர் நமக்கு சரியில்லை - வித்யுத் அல்லது பார்த்திவ். இருவருமே முழுவதுமே நம்பத்தகுந்த ஆட்டக்கார்கள் இல்லை. புது வரவான ஃபிளிண்டாஃபை ஓப்பனிங் ஆட சொன்னாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். சமிபத்தில் அண்ணன் ஹேட்ரிக் எடுத்து கலக்கியிருப்பதால் மீது அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது. பந்து வீச்சைப் பெறுத்தவரை நிடினிஅணியில் இருப்பது மிகவும் சவுகரியமாக இருக்கும் அதுவும் தென்னாப்பரிக்காவில் போட்டி நடைபெற இருக்கிறது என்பதால். இருக்கவே இருக்கிறார் முரளி.ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்ற முறை வெற்றி பெற்ற அணி என்றாலும் இரண்டு முக்கியமான ஆட்டக்காரர்கள் இல்லாமல் இந்த முறை களம் இறங்குகிறது இந்த அணி. சொஹைல் தன்வீர் மற்றும் ஷேன் வாட்ஸன். இருவரும் சென்ற முறை ராஜஸ்தானின் வெற்றிக்கு மிகப் பெரியப் பங்கு வகித்தனர். இவர்கள் இல்லாதது அணிக்கு நிச்சயம் பின்னடைவாக இருக்கும். இருப்பினும் யாருமே எதிர்பார்க்காத ஒரு அணியை வைத்துக் கொண்டு சென்ற முறை கோப்பையை ஜெயித்துக் காட்டிய ஷென் வார்னேக்கு இது இன்னுமொரு சவால் என்ற அளவுக்குத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இவர்கள் வெற்றி நிலையை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.மும்பை இந்தியன்ஸ் - கிழட்டு சிங்கங்கள் இரண்டு தூணாக இருந்துக் கொண்டு மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனம் தரும் அணி இது. அன்றைக்கு அவர் தினம் என்றால் பேயாட்டம் ஆடி ஆட்டத்தை தனி மனிதனாக முடிக்கும் ஜெயசூர்யா நிச்சயம் கவனிக்கப் படவேண்டியவர். இந்த முறை எல்லா ஆட்டங்களிலும் ஹர்பஜன் விளையாடுவார் என்று எதிர்பார்ப்போம் (யாரையும் அடிக்காமல் சமத்தாக விளையாடினால்). இப்போது ஜாகிர் கான் இருக்கும் ஃபார்மில் மனிதர் எந்த பேட்ஸ்மேனுக்கும் சரியான சவாலாக இருப்பார்.

மேலே சொன்ன அணிகளிலிருந்து தான் கடைசி இரண்டு தேர்வாகும் என்பது என் கணிப்பு. அதிலும் இந்த முறை ராஜஸ்தான் ராயல்ஸ் மீது எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை.

கிங்க்ஸ் XI அணி சென்ற முறையைக் காட்டிலும் சற்றே சக்தி குறைந்திருக்கின்றனர். இவர்களும் ராஜஸ்தானும் இந்த முறை சரியான எடையுள்ள அணி என்று எனக்குத் தோன்றுகிறது.

பெங்களுருவும், டெக்கான் சார்ஜர்ஸும் போட்டியில் கலந்து கொள்கின்றனர். இவர்கள் underdogs என்பதால் சில ஆட்டங்கள் சென்ற பிறகு இவர்களைப் பற்றி பேசலாம்.

No response to “ஆரம்பிச்சாச்சு கொண்டாட்டம்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman