Adsense

சத்யம் - இனி எல்லாம் சுகமா ?


சத்யம் - ஒரு வழியாக களேபர கூத்துகள் முடிந்து ஒரு நிலைப்பாடு எட்டப்பட்டிருக்கிறது. நேற்று டெக் மஹிந்திரா சத்யத்தின் strategic investorஆகக் கூடிய வாய்ப்புஅளிக்கப்பட்டிருக்கிறது - அதாவது டெக் மஹிந்திரா ரூ 2889 கோடி கொடுத்து சத்யத்தில் 51 % பங்குகளை வாங்க தலைப்பட்டிருக்கிறது. இதில் ரூ 1756 கோடியை (31 %க்கான பங்கு) இந்த 21ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும். மீதி இருக்கும் 20 %க்கான பங்குகளை Open offer மூலம் திரட்டப்போவதாகவும் அறிவித்திருக்கிறது. ராஜூவின் வாக்குமூலத்திற்குப் பின் அமைக்கப்பட்ட புதிய போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் டெக் மஹிந்திரா பணம் கட்டுவதில் எந்த விதமான குழப்படியும் ஏற்படாது என்று நம்பிக்கை தெரிவித்தது (அவர்களுக்கு) ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயம்.

இது தான் சிறந்த முடிவா என்றால் அதை காலம் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இந்த டீலை இன்றைய தேதியில், மூன்றாம் நபரான நம் கைகளில் இருக்கும் தகவல்களைக் கொண்டு பேசுவோம்.

1) முக்கியமான விஷயம் Tech Mahindra சத்யத்தில் controlling authority ஆகியிருக்கிறது. சத்யத்தில் Tech Mahindra-வைத் தவிரவும் சில investors உண்டு. இதே Bid-இல் Tech Mahindra உடன் போட்டியிட்ட L&T ஏற்கனவே 12 % பங்கு களை வாங்கி இருக்கிறது. இதை இன்னும் 6 மாதங்களுக்கு L&T விற்கக்கூடாது என்று தற்போதைய போர்ட் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. Tech mahindra இந்த bid-ஐ ஜெயித்திருப்பதனால் L&Tஇன் பங்கு முதலீட்டாளர் என்ற நிலையில் தொடரும். எனக்கு L&T நீண்ட கால முதலீட்டாளராக தொடரும் என்றே தோன்றுகிறது - L&Tக்கு வேறு எதேனும் பொருளாதார நெருக்கடி ஏற்படாத வரையில்.

2) சத்யத்தை வேறு ஏதேனும் நிறுவனம் வாங்குவது சத்யத்திற்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு Tech Machindra வுக்கு strategically important. Tech Mahindra இதுவரையில் தொலை தொடர்புத் துறை சார்ந்த ஐ டி சேவைகளை வழங்கி வருவதில் முன்னனியில் இருக்கும் நிறுவனம். இதன் வருவாயில் பெரும் பங்கு British Telecom இடமிருந்து தான் வருகிறது. மற்ற verticalகளில் அவ்வளவு பெரிய ஆதிக்கம் கிடையாது. ஆக, telecom அல்லாத கஸ்டமர் அடித்தளத்தை உருவாக்குவது இந்த நிறுவனத்தின் முக்கியமான தேவை மட்டுமல்ல நீண்ட காலம் இருப்பதற்கான ஆக்ஸிஜனும் ஆகும். இந்த டீலினால் பல பெரிய அளவிலான ஐ டி சேவைகள் அளிப்பதற்கான வாய்ப்புகள் Tech Mahindraவைத் தேடி வருவதற்கான சாத்தியக்கூறுகள் தோன்றியிருக்கின்றன. இதுகாரும் ஒரு vertical (Telecom) -இல் மட்டுமே பலமான கம்பெனியாகத் தோன்றியிருந்த தோற்றமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறும். சத்யத்தைப் பொருத்தவரை உற்பத்தி நிறுவனங்களும் மற்றும் BFSI வாடிக்கையாளர்களும் (வங்கிகள், இண்சூரன்ஸ் நிறுவனங்கள், நிதி சேவைகள் வழங்கும் நிறுவனங்கள்) அதன் பலம் (உண்மையில் BFSI நிறுவனங்கள் தான் ஐ டி அவுட்சோர்சிங்கில் பெரும் பங்கு வகிக்கிறார்கள் - இதனாலேயே தற்போதைய பொருளாதார பின்னடைவு ஐ டி நிறுவனக்களையும் படுத்துகிறது). இந்த வாடிக்கையாளர்களை இந்த டீலின் மூலம் Tech M அடைய முடியும்.
இந்த சூழ்நிலையிலேயே சத்யத்தில் செய்திருக்கும் முதலீடு சத்யத்தைப்போலவே Tech Mக்கும் முக்கியமானதாகிறது.

3) சரி, Tech Mahindraவுக்கு இனிமேல் எல்லாமே ஏறுமுகம் தானா என்றால் அப்படி எல்லாம் சொல்ல முடியாது. ஒரு மூழ்கும் கப்பலை வாங்கியிருக்கிறது Tech Mahindra. ஏறக்குறைய 10,000க்கும் மேற்பட்ட பணியாளர்களும் பல கஸ்டமர்களும் சத்யத்தை விட்டு சென்று விட்ட நிலையில், மூழ்கும் கப்பலின் ஓட்டைகளை அடைத்து,மீண்டும் அதை சீறிப் பாய வைக்க வேண்டிய மிகப்பெரிய வேலை Tech mahindra விடம் இருக்கிறது. ஆனால் ஓட்டைகளை அடைக்கவும், தற்போதைய வேகத்தில் ஓடசெய்யவுமே இன்னும் அதிக முதலீடு தேவைப்படும் (ஏறக்குறைய 1200 கோடி). அப்போது தான் இந்த முதலீட்டின் மூலம் லாபம் பார்க்க முடியும். ஆனால் லாபம் பார்க்க எவ்வளவு நாள் ஆகும் என்பதை நிர்ணயம் செய்ய வேண்டியது இன்னும் செய்ய வேண்டிய செலவுகளும், அந்த செலவுகளை கட்டுப்படுத்த Tech Mahindra கையாள வேண்டிய உத்திகளும் தான்.

4) இந்த சூழ்நிலையில் Tech Mahindra சந்திக்க வேண்டிய சவால்கள் மிக அதிகம் - முதலாவது Integration குறித்த சவால்கள். இனிமேல் சத்யத்தை எப்படி Tech Mahindra நடத்தப் போகிறது என்பது தான் அதி முக்கியமான சித்தாந்தம் சார்ந்த சவால். இந்த விஷயத்தைக் குறித்த தெளிவான நிலைப்பாடை எடுக்க வேண்டியது Tech M தான் என்றாலும், அவர்களுக்கு இருக்கக்கூடிய options 2. முதலாவது சத்யத்தை சத்யமாகவே நடத்தலாம் - எப்படியென்றால், சத்யம் பெயரை மாற்றாமல், தற்போதைய Executive Layerஐ அப்படியே வைத்துக் கொண்டு வெறும் Status report வைத்துக் கொண்டு கட்டுப்படுத்தலாம். ஆனால் அப்படி இருக்கவா இவ்வளவு பெரிய தொகை கொடுத்து இவ்வளவு பெரிய ரிஸ்கை எடுத்திருக்கிறது Tech M. ஆக அப்படி செய்ய வாய்ப்பு மிகவும் இல்லை. இரண்டாவது சத்யம் நிறுவனத்தை Tech M உடன் இணைத்து அதன் செயல்பாடுகளை ஒருங்கிணைப்பது. இப்படி செய்வதால் சில நடைமுறை சங்கடங்களை சந்திக்க வேண்டும். இப்படி இருங்கிணைந்த கம்பெனியை எப்படி அழைப்பார்கள் - சத்யம் என்றா அல்லது Tech M என்றா ? அல்லது இரண்டும் இல்லாத வேறொன்றாகவா ? Tech M ஐக் காட்டிலும் சத்யம் அதிக வருவாய் ஈட்டும், அதிக கஸ்டமர் கொண்ட NASDAQ listed கம்பெனி. நிறைய பேருக்குத் தெரியும். ஆனால் சமிபத்திய குளறு படியால் brand image அடிபட்டிருக்கிறது. இதனால் இப்படி இணைந்த கம்பெனியைக் கொண்டு ஒரு புதிய brandஐ உருவாக்க முணைவது புதிய துவக்கத்திற்கு சங்கொலியாக இருக்குமென்றாலும் கடினமான காரியம். நேரம் பிடிக்கக்கூடியது. புதியதாக Vision definitionஇல் இருந்து Value Prop வரை உருவாக்க வேண்டும்.

5) பொதுவாக Senior Management layer இல் இரண்டு கம்பெனியிலும் ஒரே வேலையை செய்யும் ஆட்கள் இருப்பார்கள் அவர்களை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார்கள் என்பது முக்கியமான முடிவு. மற்றும் சத்யத்திலிருந்து ஏற்கனவே பல பேர் வேலையை விட்டு போய்க்கொண்டு இருக்கும் நிலையில் இருக்கும் பணியாளர்களில் மிகுந்த திறமை வாய்ந்தவர்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை தக்க வைத்துக் கொள்ளவேண்டும். மேலும், இரண்டு organization culture இணைவதால் அதிகமான குழப்பம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. சின்ன சின்ன process முதல் எல்லாவற்றையும் மீண்டும் ஒரு முறை சரி பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஏற்கனவே financial irregularity-ஆல் பாதிக்கப்பட்ட சத்யத்தின் financial process-ஐ கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு பார்க்க வேண்டிய தேவையும் Tech M-க்கு இருக்கும். இரண்டு கம்பெனிகளிலும் இருக்கும் டிபார்ட்மெண்டுகளை ஒருங்கிணைக்க வேண்டிய தேவையும் இருக்கும். இதையெல்லாம் செய்து முழுமையான ஒரு customer value உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் தான் Tech M இப்போது இருக்கிறது. இதையெல்லாம் சரி செய்து steady state-க்கு வர குறைந்தது 1 வருடம் ஆகும்.

6) இரண்டு நிறுவனங்களும் இப்போது பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக இருக்கின்றன. இன்னும் சில காலாண்டுகளில் இரண்டு கம்பெனிகளுமே டிலிஸ்ட் செய்யப்பட்டு இன்னும் கொஞ்ச காலம் பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக நடக்க வாய்ப்பு உண்டு. Tech Mஇன் பிராண்டை அப்படியே வைத்துக் கொள்ளும் பட்சத்தில் Tech M பப்ளிக் லிமிடெட் கம்பெனியாக தொடர வாய்ப்பு உண்டு.

7) இன்னும் ஒரு குழப்பம் மிஞ்சி இருப்பது போர்ட்டை பொறுத்தது. இப்போதைக்கு Tech M-இல் கிட்டதிட்ட 31 % முதலீடு வைத்திருக்கிறது. இப்போது Tech M சத்யத்தில் 51 % முதலீடு செய்திருக்கிறது. அப்படியென்றால் BTக்கும் சத்யத்துக்கும் என்ன சம்பந்தம். ஒன்று விட்ட முதலீட்டாளர் என்று வைத்துக் கொள்ளலாம் :) - இப்போது புதிதாக அமைப்படப்போகிற சத்யத்தின் போர்ட் எப்படி இருக்கப்போகிறது என்கிறது மில்லியன் டாலர் கேள்வி.

சரி எது எப்படியோ, சத்யம் குளறுபடி இந்தியாவிற்கு மிகவும் முக்கியமான கேஸ் ஸடடியாக அமையும். ராஜூ கையை தூக்கிய 4 மாதத்திற்குள் புதிய investor-ஐ கொண்டு வந்தது அரசால் அமைக்கப்பட்ட போர்ட்டின் சாதனை. இனிமேல் crisis management பற்றி எல்லா IIMகளும் கேஸ் இந்த ஸ்டடியை வைத்துக் கொள்ளும். இப்போது இருக்கும் நிலையில் சத்யம் இன்னும் இரண்டு காலாண்டு நீடித்திருந்தால் கூட போதும் சத்யத்திற்கு நாம் மலர் வளையம் வைத்திருக்க வேண்டியிருக்கும். அரசின் துரித நடவடிக்கையும் போர்ட்டின் செயல் திறமை உண்மையில் பாராட்டப் பட வேண்டியது.

No response to “சத்யம் - இனி எல்லாம் சுகமா ?”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman