கிழே கொடுக்கப்பட்டவைகளில் எத்தனை உண்மை?
௧) லேம்மிங்-கள் மலையுச்சியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்ளும்
௨) பச்சோந்திகள் சுற்று சூழளுக்கு ஏற்றவாறு தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்ளும்
௩) நிலவிலிருந்து பார்த்தால் சீனப் பெருஞ்சுவர் தெரியும்
௪) அலெக்சாண்டர் கிரகம் பெல் தொலைபேஸியை முதன் முதலில் கண்டு பிடித்தார்
௫) ரோம் எரியும்போது நீரோ பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்
௬) பேஸ்பால் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப் பட்டது
௭) Survival of the fittest என்ற கோட்பாட்டை உருவாக்கியவர் சார்லஸ் டார்வின்
௮) இறந்த பின்னும் நகமும் முடியும் வளரும்
௯) இந்த உலகத்தில் இருக்கும் பெரும்பான்மையான பிராணவாயு மரங்களிடமிருந்து தான் கிடைக்கின்றன
௧0) முதன் முதலில் பென்சிலினைக் கண்டுபிடித்தவர் அலெக்சாண்டர் பிளமிங்
௧௨) ஹிட்லர் ஒரு சைவ ஆசாமி
http://www.thenatureofreality.com/facts.htm-படி மேலே சொன்னவை ஒன்று கூட உண்மை இல்லையாம். விக்கி பீடியாவையும் பார்த்தேன் - ஆமாம் என்கிறது அதுவும். மேலே சொன்னவை எல்லாம் காலம் காலமாக சொல்லப்பட்ட நம்பிக்கைகள் தான்.




One response to “உண்மைகளும் நம்பிக்கைகளும்”
இல்லை நண்பரே! மேற்கண்ட தகவலில் எத்தனை பொய் என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. அது என்னவென்றால், பச்சோந்திக்குத் தான் இருக்கும் இடத்திற்கு ஏற்றதான நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை அதற்கு உண்டு. இதை நேரில் கண்டு வியந்தவன் நான். கிராமத்தில் இதனைப் 'பச்சை ஓணான்' என்று குறிப்பிடுகிறார்கள். அறிவியல் உண்மைகள் கூட சில நேரங்களில் பொய்யாகின்றன. அந்த அறிவு நமக்கு எட்டிய அறிவுதானே ஒழிய உண்மையானது அல்ல. காலத்துக்குக் காலம் அறிவியல் உண்மைகள் கூட மாறுபடலாம். ஆனால், எல்லா அறிவியல் உண்மைகளும் மாறும் என்று சொல்வதற்கில்லை. எனினும் மாற்றம் என்பது மானடத் தத்துவம் நண்பரே!
Post a Comment
Trackbacks
Leave a trackback