Adsense

திரட்டி அனுபவங்கள்


என்னுடைய திரட்டிக்கு வெற்றிகரமாக ஐந்து வாசகர்கள் கிடைத்து விட்டார்கள் :-) ஆறு பேர் பின் தொடர்ந்தாலும் ஐந்து பேர்தான் படிக்கிறார்கள் - தினமும் குறிப்பிட்ட இடங்களிலிருந்து ஐந்து பேர் வருவது மட்டும் தெரிகிறது.
மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது இந்த அனுபவம் - இணையத்தை மேய்ந்து யார் யார் என்ன என்ன எழுதுகிறார்கள் என்று ஆராய்வதிலேயே பல மணி நேரம் போய் விடுகிறது - சில மிக நல்ல பிளாகர்கள் கண்ணில் படுகிறார்கள். இவ்வளவு பேரை இவ்வளவு நாள் எப்படி கண்டுக்காமல் விட்டோம் ? பிரம்மராஜன் தொடர்ந்து வலைபதிவதாய் தெரிகிறது .
பிளாக்லோகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு பல வலைதளங்கள் வந்துள்ளன. என்னால் எல்லாவற்றையும் இணைத்துக் கொள்ள முடியும் என்று தோன்றவில்லை. சில நல்ல வலைபதிவு முகவரிகளும் கிடைக்கின்றன. அவற்றை இணைத்துக் கொள்ள நான் சில புதிய பகுதிகளை ஏற்படுத்த வேண்டும் உ-ம் - மருத்துவம். இன்னும் பல தளங்களில் தகவல்களைப் பிரிக்கலாம் என்று தோன்றுகிறது. வேர்ட்பிரஸில் ஃபீட் தராவிட்டாலும் எப்படி செய்திகளை பிரிப்பது என்று trial and error-இல் கண்டுபிடித்தது என் ப்ரொக்ராமிங் நாட்களின் சந்தோஷத்தை எனக்குத் தந்தது.
ஹிட்டுக்கு ஆசைப்படாமல் பொறுமையாக செய்தாலும் நல்ல தகவல்களை மட்டும் சேகரிக்கும் திரட்டியாக பிளாக்லோகம் செயல்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நல்ல தகவல்களை கண்டுபிடிப்பதில் நேரம் பிடிக்கிறது. 10 வலைப்பதிவுகளை வாசித்தால் ஒன்று தேறுகிறது. சிலர் சில விஷயங்களைப் பற்றி மட்டும் தெளிவாக எழுதுகிறார்கள் - ஃபீட் கிடைப்பதில்லை. நிறைய நேரம் செலவழிக்க வேண்டியிருக்கிறது.
நல்ல எழுத்து பல இருந்தாலும் இணையத்தில் கொட்டிக் கிடப்பது மொக்கைகளும், மனதில் தோன்றியதையெல்லாம் எழுதும் போக்கும் தான். சுஜாதா சொன்னது சரி தானோ என்று சில சமயம் தோன்றுகிறது.

2 Responses to “திரட்டி அனுபவங்கள்”

Veera said...

நன்றி கே சீ, இது நீங்கள் தமிழை வாழ வைப்பதற்காக,

உங்கள் தமிழ் ஞானம் என்னை மிகவும் வியக்க வைக்கிறது.

மென்பொருள் துறையில் தமிழ் பேசினாலே ஏளனமாக பார்க்கும் இந்த காலத்தில்,
உங்கள் கருத்துக்களை தாய் மொழியில் பகிர்ந்து கொள்வதை கண்டு நான் பெருமிதம் கொள்கிறேன்.

உங்கள் கருத்துக்கள் நேர்த்தியாகவும் செம்மையாகவும் இருக்கிறது.

உங்களுடன் பணியாற்றுவதில் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது .

உங்களின் இந்த சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வீரபாகு

வீரா - ஐ டி ஆசாமிங்க நிறைய பேர் தமிழ்ல பிளாக் பண்றாங்க - என்னை விட நல்லாவே. அதையும் படிங்க.

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman