Adsense

எழுதுங்கள் திரட்டப்படும்


கூகிள் ரீடரும் பிற திரட்டிகளும் கொத்தாக தகவல்களை அள்ளித்தருவது எனக்கு சவுகரியாமாக இல்லாததால் இந்த திரட்டியை நான் என் சொந்த உபயோகத்திற்கு வடிவமைத்தேன். சில நாட்களாகவே யாஹூ பைப்ஸ் மூலம் தகவல்களை திரட்டி வந்தாலும் அவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு இடத்தில் சேர்த்து வைக்க ஆசை. அதன் விளைவே இந்த திரட்டி. என் தனிப்பட்ட உபயோகத்திற்கு நான் பயன்படுத்தி வந்ததால் பொத்தாம் பொதுவாக நான் திரட்டவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட வலை பதிவுகளை மட்டுமே திரட்டுகிறேன். உங்களுக்கும் என் திரட்டி பயன்படலாம் என்பதால் பொதுவில் வைத்திருக்கி்றேன்.

மற்ற திரட்டிகளைக் காட்டிலும் எனக்கு இந்த திரட்டி சில சவுகரியங்களைத் தந்தது.
1) தகவல்கள் பல பிரிவுகளின் கீழ் வகை படுத்தப்பட்டிருக்கும் (இதற்காக நான் தகவல்கள் உள்ளேயும் சில குறிச்சொற்கள் கொண்டு தேடுகிறேன். பெரும்பாலும் சரியான result வந்தாலும் சில சமயம் குறிசொல் மட்டுமே கொண்டே அவ்வளவாக சம்பந்தமில்லாத சில பதிவும் வந்துவிடுகிறது.
2) திரட்டப்படும் ஒவ்வொரு பதிவின் முதன் சில பகுதிகள் இதில் காணக்கிடைப்பதால் மேலே படிக்கும் ஆர்வம் தூண்டப்படலாம் இல்லாவிட்டால் அபத்தமான ஒரு பதிவை படிப்பதிலிருந்து தப்பிக்கலாம்
3) இவை அனைத்தையும் பொட்டி பொட்டியாக வலைதளத்தில் நிறுவிக்கொள்ளும் வசதி இருப்பதால், முதல் பக்கத்திலேயே பல பகுதிகளையும் நிறுவி விடலாம் - என்ன ஒரு இடைஞ்சல் என்றால், ஹவுஸிங் போர்ட் குவர்ட்டர்ஸ் மாதிரி பாக்க ஒரு தினுசாக இருக்கிறது.
4) இதன் மூலம் தனி மனித தலையீடு இல்லாமல் இணையத்தில் எழுதப்படும் பதிவுகள் துறை வாரியாக பகுக்கலாம். நான் இருந்தாலும் செத்தாலும் இந்த திரட்டி தகவல்களை திரட்டிக் கொண்டே இருக்கும் நான் உள்ளே புகுந்து தகவல்களை உள்ளிட தேவையில்லை. சில புதிய தளங்களை நான் இணைக்க விரும்பினால் அதையும் நான் என் index-இல் சேர்த்துக் கொள்வேன் அவ்வளவே
5) திரட்டப்படும் தளங்கள் அனைத்தும், பலராலும் படிக்கப்படும்/ புதுபிக்கப்படும் தளங்கள் என்பதால் வாசிப்பு அனுபவத்திற்கு எந்த குறையும் இருக்காது என்பது என் நம்பிக்கை - அப்படி புதுப்பிக்கப்படாத தளங்களை நான் என் index-இல் இருந்து நீக்கி விடுவேன்
6) நிகழ்காலத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தைப் பற்றிய தகவல்களை நான் முன்னிறுத்த முடியும் - உம். புத்தகவிழா, தேர்தல் - இதன் செய்திகளை நான் மொத்தமாக ஒரே இடத்தில் அள்ளி வைக்க முடியும். புத்தகவிழா முடிந்தவுடன் அதன் பிறகான டப்பாவை கடாசிவிட்டு (ஆர்கைவ் செய்து விட்டு) வேறு ஒரு டப்பாவை அந்த இடத்தில் வைக்க முடியும் (ராமலிங்க ராஜுவை தேடுவதற்குமுன் என்னை நித்திராதேவி ஸ்பரிசிக்க தயாராக இருப்பதால் ராஜுவை பிறகு பார்க்கலாம் என்று தள்ளிவைத்து விட்டேன்)

இதை வடிவமைக்கும் போது நான் கண்ட சில குறைகள்.
1) தமிழில் துறை வாரியாக எழுதுபவர்கள் மிகக்குறைவு (விரல் விட்டு எண்ணி விடலாம் )
2) தமிழில் பதிபவர்களில் பலரும் பதிவுகளை வகைப்படுத்துவதில்லை - இணையத்துக்கு இருப்பது போல தமிழ் வலைதள பதிவர்களுக்காக ஒரு consortium ஒன்றை தோற்று வித்து சில பொது விதிகளை ஏற்படுத்தினால் தகவல்கள் பரிமாற்றத்துக்கும் சேகரிப்புக்கும் வினியோகத்துக்கும் பெரிதும் பயன்படலாம் (சத்தியமா சீரியஸாக சொல்கிறேன்)

நீங்கள் வலைபதிவராகவோ இல்லை உங்களுக்குத் தெரிந்த நல்ல பதிவு அடிக்கடி புதுபிக்கப்படும் பதிவுகள் இருந்தால் எனக்குத் தெரியப்படுத்தவும் - அவற்றை வாசித்துவிட்டு பொருத்தமாக இருந்தால் என்னுடைய திரட்டியில் சேர்த்துக் கொள்கிறேன்.

இந்த-வை கிளிக் செய்யாதவர்களுக்காக தள முகவரி - http://bloglogam.blogspot.com

திரட்டி உங்களுக்கு பிடித்தால் சவுகரியமாக இருந்தால் பயன்படுத்துங்கள் இல்லாவிட்டால் ஏன் பிடிக்கவில்லை என்று ஒரு வார்த்தை bloglogam@gmail.com என்ற முகவரிக்கு எழுதுங்கள். வேறு ஏதேனும் பதிவு வகை தேவைப்பட்டாலும் தெரியப்படுத்தவும் (நமிதாவின் தொப்புள் வகையறா பதிவுகளை எல்லாம் திரட்ட உத்தேசமில்லை).

2 Responses to “எழுதுங்கள் திரட்டப்படும்”

Anonymous said...

Kaycee,

I just visited your bloglogam and found it very interesting. Congrats !! Very well defined blog and good thinking , I must say !!

Thanks, but who are you...Not many people know me by that spelling :-)

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman