Adsense

வேசியின் மக்களும் தேச பாதுகாப்பும்


எந்த ஒரு ஆண்மகனைப் பற்றியும் உலகத்தில் இருக்கும் எந்த ஒரு மொழியிலும் சொல்லப்படும் மிகக் கேவலமான வசவு அவனது பிறப்பைக்குறித்ததாகத் தான் இருக்கிறது. பெரும்பாலும் அவனது தாயைக் குறித்ததாகத்தான் இருக்கும். இந்த பத்தியின் துவக்கம் இப்படி அமைந்ததற்கான காரணம் மேலும் படிக்கும் போது ஒருவேளை தெரியலாம்.

இப்போது 24 மணி நேரமாக நாம் டி வியில் இடைவிடாது பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் பரிதாபத்தையோ பயத்தையோ யாருக்கும் ஏற்படுத்துவதாயில்லை. கோபத்தை தான் ஏற்படுத்துகிறது. அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் வாழும் மக்களை எதுவும் செய்ய முடியவில்லை என்று இந்தியாவில் முக்கியமாக மேலை நாட்டு மக்கள் தங்கும் மிகவும் பிரபலமான ஓட்டல்களை குறிவைத்தது, யூதர்கள் வாழும் "நரிமன் ஹவுஸை" குறி வைத்து தாக்கியது தேசத்தின் பாதுகாப்பு எந்த லட்சனத்தில் இருக்கிறது என்பதைத் தான் காட்டுகிறது. மேலை நாடுகளில் பாதுகாப்பாக இருக்கும் மேலை நாட்டு மக்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது இந்த சம்பவம். நாட்டுக்குள் சர்வ சாதரணமாக வந்து நடந்து போய் சுட்டு சாதாரண மனிதர்களை பிணைக் கைதிகளாக கொண்ட தீவிரவாதிகள் மேல் கூட இல்லை கோபம்.

எவ்வளவு அடித்தாலும் சுரணையில்லாமல் தேசபாதுகாப்பில் மீண்டும் மீண்டும் ஒரு மிகவும் பலவீனமான ஒரு தேசமாக இருக்கும் ஒரு இந்தியாவைக் குறித்து தான் நம் அனைவரின் கோபமும். ஏறக்குறைய 1981 முதல் இந்தியா தீவிரவாதத்தின் இலக்காக இருக்கிறது. பம்பாய் மட்டும் எத்தனை முறை அடி வாங்கியிருக்கிறது ? 1993 குண்டு வெடிப்பை நம்மில் எத்தனை பேர் மறந்திருக்க முடியும். 1997 மும்பை எலக்ட்ரிக் ரயிலில் நடந்த குண்டு வெடிப்பை ? இப்போது நடந்திருக்கும் கொடுமையை இந்த வாழ்நாளில் நம்மால் மறக்க முடியும். என்று எனக்குத் தோன்றவில்லை. மும்பை போன்ற ஒரு நகரத்துக்கே இந்த கதி என்றால், சிறு நகரங்களுக்கு? அங்கு வாழும் மக்களின் கதி என்ன ? அங்கே இன்னும் எவ்வளவு எளிதாக நுழைந்து விட முடியும்.

என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் நம் உளவுத்துறை. RAW என்ற அமைப்பு எதற்காக இருக்கிறது. டி வி யில் தோன்றி மிகவும் துரதிருஷ்டவசமானது என்ற அறிவிப்பைத்தவிர வெறு எதுவும் செய்வதறியாது வேடிக்கைப் பார்த்துக் கொண்டு ஓட்டு வங்கிக்காக பயந்து தேச பாதுகாப்பை அடகு வைத்த வக்கற்ற அரசியல்வியாதிகள் நாம் தேர்ந்தெடுத்த புண்ணியவான்கள் தான். ஒரு நாள் முழுவதும் பங்கு வர்த்தகம் முடங்கி விட்டது. இந்தியா வந்த கிரிக்கெட் குழு பாதுக்காப்பு கேட்டு விலகிக் கொள்கிறது. மேற்கத்திய நாடுகளைப் பொறுத்த வரை இந்தியா இனி ஒரு பாதுகாப்பற்ற நாடு. இந்திய அணு உலைகளே பாதுகாபற்று தான் இருக்கின்றன. இந்த நிலையில் அணு ஆயுதங்கள் தயாரிப்பது குறித்து பெருமைப் படுகிறோம். பார்லிமெண்டிலேயே புகுந்து பயங்கர வாதிகள் கை வரிசையை காட்டிய பின்னும் புத்தி வராத தேசம் இந்தியாவாகத்தான் இருக்கும்.

பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் தேசமாக சொல்லிக்கொள்ளும் இந்த தேசத்தில் சாமானிய மனிதனுக்கு உயிர் வாழும் உத்திரவாதம் கூட கிடையாது என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை. சில மாதங்களுக்கு முன்பு நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கும் பின்பு கூட தேசபாதுகாப்பில் எந்த விதமான முன்னேற்றமும் இல்லாத ஒரு நாடு உலகத்திலேயே இந்தியாவாகத்தான் இருக்கும். மேலை நாடுகளிலுருந்து பீட்ஸா சாப்பிடவும் கோக் குடிக்கவும் கற்றுக் கொண்ட நாம் மேலை நாட்டு மக்களைப் போல புத்திசாலித்தனமாக நமது தலைவர்களை தேர்ந்தெடுக்க கற்றுக்கொள்ள முடியாததை என்ன சொல்வது? நம்மில் எந்த அரசியல் கட்சி தலைவராவது பொது மேடையில் வந்து மக்கள் முன்னிலையில் தமது கட்சியின் கொள்கை நிலைப்பாடை ஒவ்வொரு பிரச்சனையின் அடிப்படையில் அந்து துறை வல்லுனர்களோடு விவாதிக்க முடியுமா? எந்த ஒரு பிரச்சனைகாவது இந்த முடிவைத்தான் எடுக்கப் போகிறேன் என்று சொல்ல முடியுமா ? மக்களின் பிரச்சனைகளிலிருந்து அவர்களை விடுவித்து நம்பிக்கை அளிக்க முடியுமா ? என்றைக்காவது நமது மக்கள் ஜாதி மதம் இலவசங்களைப் பார்க்காமல் ஓட்டு போட்டிருக்கிறோமா ?

இன்றைய பார்லிமெண்டில் இருக்கும் உருப்பினர்களில் ஏறக்குறைய 24 % மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. சிபி சோரன் சிறையிலிருந்து விடுதலையாகி வந்து இப்போதைய காங்கிரஸ் ஆட்சியை காப்பற்றி விட்டு ஜார்க்கெண்டை ஆள போயாகிவிட்டது. பீகார் என்ற ஒரு மாநிலத்தையையே 20 வருடம் பி்ன்தங்க வைத்து விட்டு லாலு மேலாண்மை கல்லூரிகளில் பாடம் எடுக்க துவங்கியாகி விட்டார். தமிழ் நாட்டில் முதலமைச்சருக்காக போட்டியிடும் இரண்டு பெரிய கட்சி தலைவர்களும் மீதும் ஊழல் வழக்குகள் உள்ளன. உள்ளாட்சி தேர்தலை நடத்த விடாமல் செய்தவர், சொந்த காரணத்துக்காக பந்த் நடத்தி பொது சொத்துக்கு சேதம் விளைவித்தவர், சட்ட ஒழுங்கை பாதுகாப்பாக வைக்கத் தெரியாதவர் இன்றைக்கு தமிழ் நாட்டின் முதலமைச்சர். வோரா கமிட்டியின் பரிந்துரை என்ன ஆனது ?

இந்த நிலை இந்தியாவுக்கும் இந்தியர்களுக்கும் ஏற்பட யார் காரணம்? அரசியல்வியாதிகளா? தீவிரவாதிகளா? இல்லை. சுரணையற்ற குடிமக்களான நாம் அனைவரும் தான். ஒவ்வொரு முறை விழும் போது மீண்டும் எழ திராணி இருக்கும் இந்த தேசத்துக்கு மீண்டும் விழாமல் இருக்க வேண்டும் என்ற புத்தி வராமல் ஏன் போனது ? இன்னும் எத்தனை நாளுக்குத் தான் பொறுக்கப் போகிறது பூமி ஆளப் பிறந்த இந்த சமுகம். ஓட்டுரிமை என்ற மகத்தான ஆயுதத்தை பயன்படுத்தாமல் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக முடியாது. இந்த பார்லிமெண்ட் தேர்தலில் ஓட்டுப்போடும் முன் ஒரு நாளாவது இந்த ஐந்து வருடங்களில் இந்தியாவில் என்ன நடந்து இருக்கிறது என்பதை இணையத்திலோ பிற மீடியாக்களிலோ வந்த செய்திகளை பார்த்து/ கேட்டு விட்டு ஒரு முடிவு எடுங்கள்.

நாமெல்லாம் பாரதத் தாயின் மக்கள் என்று சொல்லிக்கொள்கிறோம். பாரத மாதாவே, சுரணையில்லாத எங்களை பெற்றெடுக்க நீ எத்தனைப்பேருடன் படுத்தாய்?

One response to “வேசியின் மக்களும் தேச பாதுகாப்பும்”

உங்கள் எழுத்தில் கோபம் தெறித்தாலும், கருத்துக்கள் பெரும்பாலும் ஏற்கத்தக்கவையே. நாம் தான் அரசியல்வியாதிகளை தேர்ந்தெடுக்கிறோம் என்றாலும், அரசியல் களத்தில் இருக்கும் எல்லாமும் ஒரே மாதிரி தானே இருக்கின்றன. மதம், சாதி, இனம் தாண்டி மனிதம் பார்க்கும் Statesmen எல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் மட்டும் தான் வாழ்கிறார்கள் :-(

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman