Adsense

தமிழ் சினிமா கேள்விகள் - தொடராட்டம்


தொடராட்டம் என்று ஒன்று vitual-ஆக நடத்துகிறார்கள். அதில் பங்கேற்க பிரசன்னா அழைத்திருந்தார். அவருக்கு நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா. என்ன உணர்ந்தீர்கள்?

பதில்: நிச்சயமாகத் தெரியவில்லை. ஊரில் புதிதாக AC தியேட்டர் வந்திருக்கிறது என்று அந்த அனுபவத்துக்காக ஒரு படத்துக்கு கூட்டிச் சென்றார்கள். அது தான் நினைவுக்கு இருக்கிறது. பிற்காலத்தில் அந்த படம் வாழ்க்கை (சிவாஜி நடித்தது) என்று அம்மா மூலம் தெரிந்து கொண்டேன். கொஞ்சம் விவரம் தெரிந்த பின் சரித்திர படங்கள் மட்டுமே விருப்பம். மற்ற சினிமா எல்லாம் எனக்குப் புரியவில்லை. (அக்காலங்களில் பெரும்பாலும் வீட்டில் ராஜா ராணி கதைகளை மட்டுமே குழந்தைகளுக்கு சொல்வார்கள், காதல் மற்றும் சமுக கதைகள் சொல்லாதது என் புரியாமைக்கு காரணமாக இருக்கலாம்)
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த சினிமா?
பதில்: சரோஜா
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
பதில்: முழுதாக பார்த்த படம் - நாயகன் (எத்தனையாவது முறையாக என்று தெரியவில்லை) - வீட்டில் - எதோ ஒரு சேனலில் - பிரமிப்பு குறைந்தது, சில சமயம் வசவசவென்று செயற்கையாக இருப்பதாக தோன்றியது. இன்னொரு முறை முழுதாக உட்கார்ந்து பார்க்க முடியாது
4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
பதில்: தில்லுமுல்லு - சமுக தமிழ் சினிமாவை ஜாலியாக ரசிக்கலாம் என்று தோன்ற வைத்த படம். ஒரு halfyearly leave-இல் திண்டுகல்லில் இருக்கும் சித்தப்பா வீட்டில் VHSஇல் பார்த்தது. அது வரை சரித்திர படம் மட்டுமே பார்த்து வந்தேன். அதைதவிர ஹேராமையும், விருமாண்டியையும் இந்த பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-அரசியல் சம்பவம்?
பதில்: வடிவேலு தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்தது (எங்களை வைச்சு காமெடி கீமெடி பண்ணலையே...)
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
பதில்: அபூர்வ சகோதரர்கள்-இல் வரும் வாழவைக்கும் காதலுக்கு ஜே பாடலுக்கு முன் வரும் கமலின் கோட்டோவியம். பல நாட்கள் மண்டை காய்ந்து graphics என்ற வார்த்தையை தெரிந்து கொண்டேன்
6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
பதில்: இணையத்தில் மட்டும். ஆனால் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.
7.தமிழ் சினிமா இசை?
பதில்: MSV, Raja, Rehman.
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
பதில்: உண்டு. Ikuru, Life is beautiful & Seventh Seal
9. தமிழ் சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ் சினிமா மேம்பட அது உதவுமா?
பதில்: இல்லை
10. தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: Science fiction எடுப்பார்கள். அதில் நிச்சயம் அம்மா செண்டிமெண்ட் காட்சி, மழையில் குறைந்த ஆடையில் நனையும் நாயகி, விரல் சொடுக்கி சபதம் செய்யும் நாயகம் எல்லாம் சிரஞ்சீவியாய் இருக்கும். வில்லன் மட்டும் முன்பை விட புத்திசாலியாக இருப்பார் ஆனால் கடைசியில் செத்துப்போவார். ஆஸ்கர் விருதுக்காக படம் எடுத்துக் கொண்டிருப்பார்கள்.
11.அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: ஒன்றும் பெரிதாக் நஷ்டம் வராது. தமிழ் நாடெங்கும் ஒரே ஸ்டைல் டிரஸ் இல்லாமல், வித்தியாசம் வித்தியாசமாக ஆடை அணிவார்கள். அரசியல் நிகழ்வுகளுக்கும், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். சபாக்களில் டிசம்பர் சீஸன் போக மற்ற சீஸன்களில் நாடகம், மெல்லிசை கச்சேரிகள் நடக்கும், ரெக்கார்ட் டாண்ஸ் கொஞ்சம் மாறுபட்ட வடிவத்தில் சமுகத்தில் உயிர் பெறும். 1940-இல் இருந்த கேளிக்கை சூழ்நிலை அறிவியலில் துணையுடன் கொஞ்சம் வேறு மாதிரி சமுகத்தில் உயிர் பெறும். அப்புறம் யாராவது பெருமுயற்சி செய்து சினிமாவை மீண்டும் உருவாக்குவார்கள் (சற்றே மாறுபட்ட வடிவத்தில்)

தொடர யாரையும் அழைக்கப்போவதில்லை.

No response to “தமிழ் சினிமா கேள்விகள் - தொடராட்டம்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman