Adsense

எங்கே செல்லும் இந்த பாதை


10,000த்துக்கு கொஞ்சம் மேலே cushion கொஞ்சம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் இப்போது இருக்கும் நிலையையைப் பார்த்தால் எந்த அளவிலும் support இல்லை. இன்னும் இறக்கம் எதிர்பார்க்க வேண்டியது நம் கடமை. எதிர்பார்க்காதது மடமை (அட அட என்ன rhyme நோட் பண்ணுங்கப்பா)
- FII விற்பது நிற்கவில்லை
- RBI Credit policy review presentation -October 24 நடக்கவிருக்கிறது (repo rate cut எதிர்பார்க்கலாம் - 100 basis points வரை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது)
- புற நிகழ்வுகளுக்கு ஏற்ப சூழ்நிலை மாறுகிறது (CRR cut இருந்ததால் இந்த வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் ஏறுமுகம் காட்டியது). விலை வீழ்ச்சி தொடர்வது நல்ல அறிகுறி அல்ல. நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் அதிக பாதிப்பில்லாத ஒரு சமநிலையில் தான் கரடி ஆடத்தை நிறுத்தும்
- அடுத்த வருடம் எலெக்ஷன் வேறு வருகிறது, அப்போது தொங்கு பாராளுமன்றம் வந்தால் (இப்போது இருக்கும் நிலையில் வருமென்று எனக்குத் தோன்றவில்லை) நிலைமை தற்காலிகமாக இன்னும் சிக்கலாகும்
- இன்னும் 6 மாதத்திற்கு பச்சை என்பது ஆச்சரிய குறி தான்
-இப்போது இருக்கும் நிலையில் Fixed Deposit முலம் நல்ல வட்டி கிடைத்தால் அது தான் லாபகரமான முதலீடு - மூத்த குடிமக்கள் mutual fundகளை தற்காலிகமாக மறந்து விட்டு வங்கிகள் நோக்கி செல்லுதலே ஆதாயம் என்று படுகிறது
- இரண்டு மூன்று வருடம் வரை காத்திருக்க பொறுமை இருப்பவர்கள் மட்டும் ஷேர் மார்க்கெட்டில் அதிக முதலீடு செய்வது குறித்து யோசிக்கலாம்

ம்ஹும்...சரி, அது எக்கேடு கெட்டு வேண்டுமானாலும் போகட்டும். கார்ட்டூன் போடுவதற்கு ஒரு விஷயம் கிடைத்ததே - அது வரை சந்தோஷம்.

No response to “எங்கே செல்லும் இந்த பாதை”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman