Adsense

தவளைகள்




தவளைகள் தோன்றுவதற்கு இன்னும்
சில மணி நேரமே பாக்கியிருக்கும் சந்தியா வேளையில்
என்னுடைய இந்த மூங்கில் நாற்காலியில்
சாய்ந்தபடி யோசிக்கிறேன்.
நீ எழுதிவிட்டுப் போன சிலவற்றை
மீண்டும் பிரதியெடுத்தேன். சிலவற்றை
மொழிப்பெயர்த்தேன். பலவற்றை உருவம்
தெரியாதபடி மாற்றினேன்.
எழுந்து டீ குடித்துவிட்டு வந்த போது
தோன்றிய கவிதையையும் எழுதிவிட்டு
மீண்டும் நீ திரும்பப்போவதில்லை என்று
தோன்றியபோது கைகளை நெட்டி முறித்தபடியே சிரித்தேன்.
நீயும் திரும்பி சிரித்தாய் எந்த கல்மிஷமுமில்லாமல்.
அடர்த்தியான நிசப்தத்தை குலைக்க
தவளைகள் சத்தமிடத்துவங்கின, நேற்றைப் போலவே.

No response to “தவளைகள்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman