Adsense

யாஹூ பைப்ஸ் கொண்டு ட்விட்டருக்கு mashup செய்யும் விதம்


Twitter (அனேகமாக எலோரும் பயன்படுத்துகிறோம்), இதில் நம் நண்பர்கள் பலரிடமிருந்தும் நம்மிடமிருந்து பலரும் தகவல்கள் பெறமுடிகிறது. இதில் சிக்கல் என்னவென்றால் சில பேரை நாம் reciprocate செய்ய வேண்டும் என்பதற்காக நம் twitter following list-இல் இணைத்துக் கொள்வதுண்டு. அவர்களிடமிருந்து நமக்கு பெரும்பாலும் கிடைக்கும் தகவல்கள் இன்று காலை சாப்பிட்ட பொங்கலில் உப்பில்லை வகையறா தான். இப்படி 30 - 40 பேர் தகவல்கள் தரும் வேளையில் நமக்கு கிடைக்க வேண்டிய நல்ல தகவல்கள் கண்ணில் படாமல் போவதற்கான சாத்தியங்கள் அதிகம். அதுவும் twitter-இன் web interface செம கடியாக இருக்கிறது - sequential listing, no pagination - படித்து விட்டு tweetகளை orkut-இருப்பது போல delete செய்ய முடியாது. இப்படி பல குறைகளை அடுக்கலாம்.

இதிலிருந்து தப்பிக்க - அல்லது சிக்கல்களை குறைக்க ஏதாவது mash up platform உதவியுடன் சின்னதாக ஒரு mash up செய்து கொள்ளலாம் என்று நினைத்தது yahoo pipes-ஐ நோண்டியதில் கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்தது.

நான் உருவாக்கிய mash up மூலம் சாதிக்க நினைத்தது என்ன ?

- Simple - Twitter-இல் கிடைக்கும் மலை போன்ற tweetகள் மத்தியில், சின்னதாக நான் யாருடைய tweetகளை படிக்க விரும்புகிறேனோ அதை மட்டும் படிக்க தேவையான வசதி (அவை தவறாமல் என் கண்ணில் பட வேண்டும் என்று விரும்பினேன்). எனக்கு இருக்கும் followers எண்ணிக்கைக்கும் நான் follow பண்ணுபவர்களின் எண்ணிக்கைக்கு எனக்கு twitter-ஏ அதிகம் ;-) அதிகம் பேரை தனது network-இல் வைத்திருப்பவர்களுக்கு இந்த mashup உதவும்.

சரி, எப்படி செய்வது ?
- முதலில் அதற்கு தேவை ஒரு mashup platform. நான் தேர்ந்தெடுத்தது yahoo pipes - ஏற்கனவே இங்கு நோண்டியதால் அதையே பிடித்துக் கொண்டு தொங்குவது என்று முடிவு செய்தேன்.

- இரண்டாவது, உங்கள் twitter-இல் இருந்து உங்களுக்கு செய்தி ஓடைகள் வரவேண்டும். அதற்காக உங்கள் twitter-இல் இருக்கும் RSS என்ற பட்டனை அழுத்தவும். இது இப்போது உங்களுக்கு ஒரு http pop up window ஒன்றை வீசும். அதில் உங்கள் twitter user ID/ Password-ஐ உள்ளிடவும். http://twitter.com/statuses/friends_timeline/XXXXXXXX.rss - என்பது போன்ற ஒரு url உங்களுக்குக் கிடைக்கும்.

- இப்போது நீங்கள் யாஹு பைப்பை துவக்கிக் கொள்ளுங்கள் (pipes.yahoo.com) - Create my pipe என்ற பட்டனை நீங்கள் அழுத்தியவுடன் உங்களுக்கு யாஹூ பைப்பை உருவாக்க தேவையான workbench கிடைத்து விடும். இதை பார்க்க உங்களுக்கு flash 9 plugin தேவைப்படும். யாஹீ பைப்பில் sources என்ற செக்ஷன் கீழ் இருக்கும் fetch feed என்ற module-ஐ தேர்வு செய்யவும். அதில் இருக்கும் url textbox-இல் உங்களுக்கு twitter-இல் கிடைத்த RSS url-ஐ உள்ளிடவும். இதை உள்ளிட்டால் மட்டுமே உங்களுக்கு twitter-இல் இருக்கும் மொத்த feedஉம் கிடைத்து விடாது. காரணம் twitter user ID: password கேட்கும். அதனால் இதை உள்ளிட்டவுடன் யாஹு பைப் தகவல்களை அள்ள முடியவில்லை என்று 401 காட்டும்.

- இதற்கு மாற்று வழி உண்டு. நீங்கள் உள்ளிட்ட url-ஐ கொஞ்சம் மாற்ற வேண்டும். http://twitter.com/statuses/friends_timeline/XXXXXXXX.rss என்று உள்ளிட்ட url-ஐ பின்வரும் format-இல் மாற்றவும்.
http://username:password@twitter.com/statuses/friends_timeline/XXXXXXXX.rss - என்று மாற்றி உள்ளிடவும். இதில் username:passoword என்ற இடத்தில் உங்கள் username மற்றும் password-ஐ உள்ளிடவும். ஆனால் பலருடனும் பகிர்ந்து கொள்ள நேரும் இது போன்ற mashup -இல் எப்படி password பொன்ற சென்சிடிவ் தகவலை பகிர்ந்து கொள்ள முடியும். ? இதற்கும் சில குறுக்குவழிகள் உள்ளன. private string என்று ஒரு module இருக்கிறது. அதை பயன்படுத்தி நீங்கள் url-ஐ உருவாக்க முடியும். அப்படி செய்தால், உங்களைத் தவிர வேறு யாரேனும் உங்கள் pipeஐ பார்க்க நேர்ந்தாலும், source-ஐ edit செய்ய முயன்றாலும், பாஸ்வேர்ட்டைப் பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் தைரியமாக இந்த mashup-ஐ உருவாக்கிக் கொள்ள முடியும். யாரேனும் உங்கள் pipe-ஐ copy செய்து கொண்டால் கூட இந்த private string field-இல் இருக்கும் data காப்பியாகாது. Blank-ஆகவே இருக்கும். அவர்களுக்கு உங்கள் பாஸ்வேர்ட் தெரிந்தாலேயன்றி அவர்களால் உங்கள் pipe-இன் results-ஐ பயன்படுத்தமுடியாது. சரி, இப்படியாக நீங்கள் உங்களுக்குத் தேவையான பைப்பை தயாரித்தவுடன் twitter-இல் உங்களுக்கு வந்த tweet அனைத்தும் செய்தியோடைகளாக yahoo pipes-இல் கிடைக்கும். இனிமேல் உங்கள் சித்து விளையாட்டை காட்டலாம்.


- Operator section-இல் இருக்கும் filter module-ஐ எடுத்துக் கொள்ளுங்கள். இதில் நீங்கள் யார் அனுப்பும் tweetகளைப் படிக்க வேண்டுமோ அவர்கள் பெயரை நீங்கள் உள்ளிடுங்கள். நான் என்னுடைய சோதனையில் prakash என்று உள்ளிட்டிருக்கிறேன். நீங்கள் இது போல யார் பெயரை வேண்டுமானாலும் உள்ளிட்டுக் கொள்ளுங்கள், எத்தனை வேண்டுமானாலும் உள்ளிட்டுக் கொள்ளுங்கள். நான் இந்த screen shot-இல் எப்படி உள்ளிட்டிருக்கிறேன் என்று பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.- சரி, யாரிடமிருந்து tweetகளை பெற வேண்டும் என்று முடிவு செய்தாகிவிட்டது. அவரிடமிருந்து எப்படிபட்ட செய்திகளை நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் ? ஒருவேளை technology சம்பந்தப்பட்ட செய்திகளை மட்டுமே எதிர்பார்ப்பதானால் இது போன்ற ஒரு key word directory -ஐ உருவாக்கிக்கொள்ளுங்கள். இது தான் twitter-இல் tagging இல்லாத குறையை பெரிது படுத்திக் காட்டுகிறது. நீங்கள் உங்கள் tweet எந்த வகை என்று சொல்வதற்கு இப்போது twitter-இல் வசதி இல்லாததால், இது போன்ற mashup களால் உங்களுக்கு நீங்கள் விரும்பும் படி accurateஆக உங்களுக்கு செய்திகளை பிரித்துத் தர முடியாது. ஒரு வேளை twitter user community சில ஒழுங்கு முறைகளை (standards) tweet செய்ய பயன்படுத்தினால் இந்த பிரச்சனை தீர வாய்ப்புண்டு. உதாரணம், கடைசி 5-6 character-களை நிச்சயம் tag-ஆக மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீங்கள் உங்கள் tweet எழுதி முடித்தவுடன் mokkai, tech, news, cinema etc...இப்படிபட்ட standards இருந்தால் yahoo pipe போன்ற mash up platform மூலம் எளிமையாக தேவையான தகவல்களைப் பிரிக்க முடியும்.

- சரி, இதுவும் செய்தாகி விட்டது. இப்போது இன்றைக்கு வந்த செய்தியை மட்டும் எப்படி காண்பிப்பது. இதற்கென பிரத்தியேகமாக date builder இருக்கிறது. அந்த Date builder module-இல் date என்ற text fieldஇல் 12:00am UTC today என்று உள்ளிடவும். பின்பு அந்த date builder-ஐ filter உடன் படத்தில் காண்பிப்பது போல இணைக்கவும். நீங்கள் தேர்வு செய்யும் filter criteria item.y:published.utime is greater than என்பதாக இருக்கட்டும். படத்தில் காட்டியபடி.

இப்போது உங்கள் பைப்பை நீங்களே கட்டி முடித்து விட்டீர்கள். சரி இப்போது உங்கள் பைப்புக்கு பெயர் சூட்டி சேமித்து விடுங்கள். சேமித்தவுடன் Runpipe என்று ஒரு ஆப்ஷன் வரும். அதை அழுத்தினால் உங்கள் பைப்பின் முடிவுகள் ஒரு தனி windowsவில் தெரியும். பைப் கட்டிக்கொண்டிருக்கும் போதே இடையிடையே result preview-வும் workbench-இல் பார்த்துக் கொள்ளலாம்.

பி கு: yahoo pipes சமயத்தில் முழுவதுமாக results-ஐ பிக் அப் செய்யாது போன்ற தோற்றத்தைத் தருகிறது. ஒரு கண்டிஷனுக்கு வேலை செய்யும் பைப் - அதே போன்ற மற்றொரு data-ஐ எடுத்துக் கொள்ளாமல் படுத்துகிறது. ஒருவேளை இது beta நிலையைத் தாண்டும் போது சரியாகக்கூடும்.

No response to “யாஹூ பைப்ஸ் கொண்டு ட்விட்டருக்கு mashup செய்யும் விதம்”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman