Adsense

Internet-இன் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் சில apps


இனி வரும் காலத்தில் நல்ல connectivity மட்டும் இருந்தால் போதும் நீங்கள் ஒரு கணிப்பொறியில் செய்யும் எல்லா செயல்களையும் இணையத்தின் வழியாக செய்து கொள்ளலாம். தகவல்களை சேமிக்கவும், எழுதவும், படம் வரையவும் நீங்கள் எந்த செயலியையும் உங்கள் கணிப்பொறியில் நிறுவ வேண்டிய கட்டாயம் இருக்காது. எல்லாவற்றையும் கணிப்பொறியிலேயே சேவைகளாக யாரோ ஒருவர் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் (மைக்ரோசாஃப்டோ, யாஹுவோ, கூகிளோ, இல்லை வேறு யாரோ). அந்த சேவைகளை நீங்கள் விரும்பும் படி பயன்படுத்திக்கொண்டால் மட்டும் போதும். இப்போது லைசன்ஸ் அடிப்படையில் விற்கப்படும் சில மென்பொருள்கள் எதிர்காலத்தில் சேவைகளாக இலவசமாக வழங்கப்படும். இதனால் பல புதிய Business modelகள் தோன்ற வாய்ப்பு உண்டு. அதோடு இல்லாமல் innovation என்பது rule of the day ஆக இருக்கும். இப்போது இணையத்தில் பல innovative-ஆன குட்டி குட்டி சேவைகள் கவனத்தைக் கவர்கின்றன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு பல நல்ல நல்ல சேவைகள் தோன்ற வாய்ப்பு உண்டு. இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியது தான் web 2.0. இதைப் பற்றி lecture அடிக்காமல் கவனத்தை கவரும் சேவைகளைத் தரும் applicationகளைப் பற்றி மட்டும் பேசுவோம்.
TinyURL
முதலில் tinyurl என்று ஒரு application (http://www.tinyurl.com/). உண்மையில் சொன்னால் பெரிய engineering எல்லாம் இல்லை. ஆனால் surprisingly simple solution. ரஷயர்கள் விண்வெளிக்குப் பென்சில் எடுத்துச் சென்ற கதையைப் போல. நீங்கள் யாருக்காவது check out this site என்று மின்னஞ்சல் அனுப்பும் போது வெட்டி ஒட்டும் url மட்டும் நான்கு வரிக்கு நீண்டு உங்கள் புருவம் சுருங்கியிருக்கிறதா? அப்படி என்றால் உங்களுக்கு இந்த tinyurl பிடிக்கும். நீங்கள் அப்படிபட்ட எதாவது url கொடுத்தால் இந்த வலைத்தளம் அதை சுருக்கிக் கொடுக்கும். அதை நீங்கள் உங்கள் நன்பருக்கு அனுப்பினால் போதும்.
PageFlakes/ Netvibes வகையறாக்கள்
இந்த தளங்களால் (http://www.pageflakes.com/; http://www.netvibes.com/) என்ன நன்மை என்றால் நீங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து வைத்த சில தகவல்களைப் இங்கேயும் சேமித்து வைத்திருந்தால் உங்கள் கம்ப்யூட்டர் பக்கத்தில் இல்லாத சமயத்தில் கூட எதையும் உங்களால் பார்க்க முடியும் - அதற்கு பல அப்ளிகேஷன்களை கோர்த்து இந்த ஆபத்துகால டெஸ்க்டாப்பை நீங்கள் உருவாக்கி வைப்பது தான். ஒரே websiteக்குள் புகுந்து email பார்ப்பது, stock market update பார்ப்பது, உங்கள் ஊரின் தட்பவெட்பம், ஒரு டாலர் 42 ரூபான்னா 100 டாலர் எவ்வளவு என்பது போன்ற அறிய calculation செய்வது, இப்படி பல விஷயங்களை பல website களை நோண்டாமல் ஒரே வெப்ப்சைட்டில் பார்க்கலாம். அது ஒரு பெரிய நன்மை. என்ன சிக்கல் என்றால் எல்லாம் தீப்பெட்டி தீப்பெட்டியாக எதோ ஹவுசிங் போர்டு குவார்டர்ஸ் மாதிரி இருக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக plugin-களை இழுத்துப் போடுகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு கண்களை சுருக்க வேண்டியிருக்கும். கூகிளில் கூட igoogle என்று ஒரு ஆப்ஷன் பார்த்திருப்பீர்கள். அந்த மாதிரி தான் இதுவும்.
Yahoo Pipes
எனக்கு என்னவோ அடுத்த sensation application இதுவாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. இதன் மூலம் நீங்கள் உங்களுக்குத் தேவையான தகவல்களை நீங்களே வடிகட்டிக் கொள்ளலாம். அந்த தகவல்கள் எதேனும் website-இல் இருக்கலாம், பிளாகில் இருக்கலாம் இல்லை RSS feed ஆகக் கூட இருக்கலாம். இதை உங்களுக்குத் தேவையான படி வடிக்கட்டிக் கொள்ள கொஞ்சம் ஆப்பரேட்டர்களும், சில functionகளும் (string, date time, location, number) தந்திருக்கிறார்கள் - இவற்றையெல்லாம் நல்ல முறையில் இணைத்து பைப் உண்டாக்குவது "மகனே உன் சமத்து" என்கிறார்கள் யாஹு. கொஞ்சூண்டு programming மூளை இருந்தால் போதும் - உபயோகமான நல்ல பைப்புகள் செய்து விடலாம். நான் செய்த ஒரு சோதனை பைப் இந்த urlஇல் இருக்கிறது. இன்னொரு சகாயம் என்னவென்றால், இப்படி நீங்கள் செய்யும் இந்த பைப்புகளை உங்கள் வலைப்பதிவுகளில் எளிதாக இணைக்க முடிகிறது.
shorttext.com/ tinypaste.com
இந்த இரண்டு வெப் சைட்கள் மீது (http://www.tinypaste.com/ ; http://www.shorttext.com/) எனக்கு அவ்வளவாக நல்ல அபிப்ராயம் இல்லை. இரண்டும் எதோ ஒரு குட்டி செய்தியை இணையத்தில் சேமித்து வைக்க உதவுகின்றன என்ற வகையில் சரி. அதற்கு மேல் இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவகையில் கூகிள் புக்மார்க் மற்றும் கூகிள் நோட்ஸ் மாதிரி தான் - அதாவது நீங்கள் ஒரே IDயிலிருந்து சேமிப்பதால் மறக்காமல் இருக்கும் - இது அப்படியில்லை. லாகின் பாஸ்வேர்ட் எல்லாம் தராததால் இந்த தளம் கொடுக்கும் url-ஐ நீங்கள் எங்காவது சேமிக்க வேண்டும் இல்லையேல் மறந்து விடுவீர்கள்.
Moblf
இதன் (http://www.moblf.com/) முலம் மொபைல் ஃபோன் வழியாக SMS அனுப்புவதன் மூலம் வெப்சர்வீஸ்களைப் பெற முடியும் என்கிறார்கள் - ஆனால் சோதனை செய்து பார்க்க முடியவில்லை. குறிப்பாக கூகிள் மற்றும் linkedin எப்படி செயல்படுகிறது என்று அறிய ஆசை. இதே போல ஒரு சேவையை சில காலத்திற்கு முன்பு surfmail (http://www.surfmail.it/) என்று ஒரு website பிரபலமாக இருந்தது - ஆஃபிஸில் cricinfo வை மேட்ச் சமயத்தில் சில நேரங்களில் முடக்கி விடுவார்கள். அப்போது இதை உபயோகப்படுத்த ஆசைப்பட்டோம். ஆனால் இது அவ்வளவாக சரியாக வேலை செய்யவில்லை. இது போல மொபைலில் SMS அனுப்பினால் webpage தருவார்களா என்று பார்க்க ஆசை. இது மட்டும் சாத்தியம் என்றால் - இது உண்மையிலேயே cool app

மேலும் நேரம் கிடைக்கும் போது இன்னும் சில website பற்றி எழுத ஆசை.

2 Responses to “Internet-இன் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் சில apps”

நல்ல தெரிவுகள். இது போல் நுட்பத்தைத் தமிழில் எழுதும் பதிவுகளுக்குப் பஞ்சமா இருக்கு. தொடர்ந்து எழுதுங்க. நன்றி.

Ramya Ramani said...

வாவ் நல்ல உபயோகமான பதிவு.. கண்டிப்பாக எல்லாருக்கும் பயன்படும் .நன்றி :)

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman