Adsense

பழைய கவிதைகள் இரண்டு


1.
சென்ற முறை பார்த்ததைக் காட்டிலும்
இந்த முறை ரமணியிடம் பச்சை நிறம் அதிகம் தென்பட்டது
ஸ்ரீதர் ராவ் பல வருடங்களாகவே வெளிர் நீலமாகவும்
வெண்மையுமாகவும் மட்டுமே இருக்கிறார்
எதேச்சையாய் கண்ணாடியைப் பார்த்தபோது
என் பிம்பம் பழுப்பும் மஞ்சளும் சிவப்பும் கலந்து இருந்தது
கடைசியாக என்னிடம் கை குலுக்கிய இவன்
உள்ளங்கை ஈரத்தில் புதிதாய் சேர்ந்த பழுப்பு நிறத்தோடு
யாரிடமோ பேசிக் கொண்டிருக்கிறான்
"நான் தனியாளாக நின்று ..."
--------
2.
"பத்து வருடங்களுக்கு முன்
நான் வசித்த வீடு இது " என்றேன்
அடையாளம் தெரியாதபடி மாற்றியமைக்கப்பட்ட
வீட்டிலிருந்து வெளிப்பட்டு
என்ன வேண்டும் என்று கேட்டவளிடம் .
சிரித்தபடியே உள்ளே சென்று
என் படுக்கையறைக்குள் நுழைந்து கொண்டாள்

No response to “பழைய கவிதைகள் இரண்டு”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman