Adsense

மூவர் இருவராவார்களா ?


மைக்ரோசாஃப்ட் யாஹூவை வாங்க தனது விருப்பத்தை அறிவித்த செய்தி புதிதில்லை (3 நாள் பழசு). இது ஏற்கனவே எதிர்பார்த்த செய்தி தான். இந்த டீல் இன்று முடியவில்லை என்றால் இன்னும் கொஞ்ச நாளில் நடந்தே ஆக வேண்டும்.

சரி, மைக்ரோசாஃப்ட் ஏன் யாஹூவை வாங்க முன் வர வேண்டும் – அதுவும் கிட்டதட்ட 45 பில்லியனுக்கு (60 % பிரியம் யாஹுவின் பங்குக்கு). கூகிளை சமாளிக்க வேறு வழியில்லை. யாஹுவிடம் மைக்ரோசாஃடிடம் இல்லாத சில பெரிய விஷயங்கள் இருக்கின்றன. தற்போது கூகிளுக்கு அடுத்த நிலையில் அதிக பயன்பாட்டில் இருக்கும் யாஹூவின் தேடு பொறி மைக்ரோசாஃப்டிடம் கிடையாது. இன்னொறு முக்கியமான கோணம் யாஹுவிடம் இருக்கும் ஆன் லைன் அட்வர்டைசிங் செய்யும் சக்தி. யாஹூ 2003இல் Overture-ஐ வாங்கியதன் முக்கியமான காரணமே தனது ஆன் லைன் விளம்பர portfolio-வை ஸ்திரப்படுத்த தான். இந்த இரண்டு இடத்திலும் மைக்ரோசாஃப்ட் கூகிளைக் காட்டிலும் யாஹுவைக் காட்டிலும் பின் தங்கியே இருக்கிறது. இந்த ஆன்லைன் அட்வர்டைசிங் ஏறக்குறைய 40 பில்லியன் டாலர் மார்கெட் – 4-5 வருடத்துக்குள் 100 பில்லியனை தொட்டுவிடும் என்று பேசிக்கொள்கிறார்கள். இப்போது இந்த ஆன் லைன் விளம்பரத்தில் ஏறக்குறைய சக்ரவர்த்தியாக இருக்கும் கூகிளை சமாளிக்க மைக்ரோசாஃப்டுக்கு யாஹு தேவை.

யாஹுவைப் பொறுத்தவரை இந்த offer ஒரு விதத்தில் பழம் நழுவி பாலில் விழுந்த மாதிரி. இரண்டு வருடமாக தள்ளாடிக் கொண்டிருந்த அதன் பங்குகள் இந்த செய்திக்குப் பிறகு எகிறத்துவங்கியிருக்கிறது (ஏறக்குறைய 47 %).




அந்த நிலையில் கூகிளை சமாளிக்க மைக்ரோசாஃப்ட்டோடு ஜோடி சேர்வதில் எந்த தப்புமில்லை. சென்ற வருடம் மே மாத வாக்கில் மைக்ரோசாஃப்ட் யாஹுவை வாங்க அடி போட்டு முன் வைத்த அந்த டீலை யாஹூ புறம் தள்ளியது நினைவிருக்கலாம். Yang (விஜயகாந்த் போல ;-)) தனியாளாக கூகிளை சமாளிப்பேன் என்று சொன்னார். ஆனால் இது வரை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவுமில்லை. இந்த நிலையில் இந்த முறையாவது இந்த டீலை ஒத்துக் கொண்டால் தேவலை.

இந்த நிலையில் Eric Schmidt யாஹுவிடம் நேசக்கரம் நீட்டியுள்ளார். யாஹூவின் வளர்ச்சிக்காக உதவுவதாக. ஏனென்றால், மைக்ரோசாஃப்டும் யாஹுவும் ஒன்று சேர்ந்தால் கூகிளுக்குத் தலைவலி. இப்போது கத்துக்குட்டியாக இருக்கும் அதன் Google apps, Google OS இன் வளர்ச்சி சற்று மந்தமாகக்கூடும். Office applications மற்றும் desktop operating system இரண்டிலும் மார்க்கெட்டை கையில் வைத்திருக்கும் மைக்ரோசாஃப்டிடம் யாஹு போல ஒரு search engine-உம் இருந்து விட்டால் கூகிளுக்கு திண்டாட்டம் தான்.


ஆனால் அப்படியே இந்த டீல் நிகழ்ந்து விட்டாலும் அடுத்த நாளே எந்த மாற்றமும் ஏற்படாது. இன்னும் கொஞ்சம் காலம் பிடிக்கும். இவ்வளவு பெரிய acquisition-க்குப் பிறகு உடனே operation-இலும் வெற்றிக் கொடி கட்ட முடியாது மைக்ரோசாஃப்டால். குறைந்தது ஒரு வருடமாவது பிடிக்கும்.

இன்னும் அதிக விலை வரக்கூடும் என்பதால் யாஹு இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

No response to “மூவர் இருவராவார்களா ?”

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman