Adsense

கல்லூரி


சென்ற வார இறுதியில் கல்லூரி காணக்கிடைத்தது. என்னுடைய சில அலுவலக தோழர்களால் பெரிதும் சிபாரிசு செய்யப்பட்டது. காதல்-க்குப்பின் என்னால் யதார்த்தம் மீறிய படங்களை தருவதைப் பற்றி யோசிக்க முடியவில்லை என்று பாலாஜி சக்திவேல் ஒரு பேட்டியில் கூறியிருந்தது வெறு இந்த படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டது. ஒருவழியாக சென்ற சனிக்கிழமை இந்த படத்தைப் பார்ப்பது என்று முடிவெடுத்து Seasons-இல் அதற்கான டிக்கெட்டுகளையும் பதிவு செய்தாகிவிட்டது.இந்த படத்தை எடுத்த பாலாஜி சக்திவேலையும் தயாரிப்பாளர் சங்கரையும் முதலில் பாராட்ட வேண்டும். சில காரணங்கள் உண்டு
1) முன் பின் பரிச்சயம் ஆகாத முகங்களைக் கொண்டே ஒரு முழு நீள திரைப்படத்தை பார்க்க வைத்ததற்காக (எனக்கு தெரிந்த வரை முதலில் அறிமுகம் என்று போட்டு விட்டு தான் நடிகர்கள் பெயரை போடவேண்டும் - தமண்ணாவைத் தவிர). கதாநாயகன் சார்ந்த ஒரு Industry ஆக இருக்கும் சினிமாவில் அதன் வரம்புகளை மீறி கதையை மையப்படுத்தி நடிகர்களை பாத்திரங்களாக தோன்ற செய்யும் முயற்சி செய்தமைக்கு - காதல் மற்றும் இந்த திரைப்படத்துக்கு
2) இரட்டை அர்த்த வசனங்கள் பேசும் மாணவர்களும், லோ ஹிப்பில் சேலை கட்டிய ஒரு பெண் விரிவுரையாளரும், கேணத்தனமாக வகுப்பெடுக்கும் ஒரு தமிழ் வாத்தியாரும், மைக்ரோ ஸ்கர்ட் அணிந்து கல்லூரிக்கு வரும் கதாநாயகியும், மாணவ தலைவர் எலக்ஷன் காட்சிகளும் இல்லாத ஒரு கல்லூரியை தமிழ் திரைப்படத்தில் காட்டியதற்கு
3) கல் குவாரியில் கல்லுடைக்கும், மூட்டை தூக்கும், ஆட்டோ ஓட்டும், வயல் வேலையில் கூலி ஆளாகும் குடும்பங்களிலிருந்து முதல் தலலமுறையாக கல்லூரி வாசலை மிதிக்கும் மாணவர்களைக் காட்டியமைக்கு. அதுவும் அந்த ஆதிலட்சுமி கதாபாத்திரம் வெகு இயல்பு. கேன்வாஸ் ஷூ போட்டபடியே எல்லா காட்சிகளிலும் வரும் கதாநாயகன் வெகு பொருத்தம் (எனக்கு பள்ளியில் என்னுடன் பத்தாவது வரை படித்த (!?) ராஜா தான் நியாபகத்துக்கு வந்தான் - ஷாட் புட் போடுவான், ஜாவலின் த்ரோ போடுவான், எப்போதாவது பள்ளிக்கு வரும் போது கதிர் அறுத்த கதை சொல்வான்).
4) விரசமில்லாத நகைச்சுவைக்காக (ஏங்க நீங்க சொல்லுங்க - கொஞ்சம் ஓவர் டோஸ் என்றாலும் முதல் முறை வந்த போது கண்ணில் நீர் வர சிரித்தேன்)
5) வீரம் என்ற பெயரில் அடி தடி ரத்தசகதி காட்சிகள், அர்த்தமேயில்லாத பன்ச் டயலாக் இல்லமல் ஒரு படத்தை எடுத்ததற்காக

மேலே சொன்ன இந்த காரணத்தைத் தவிர வேறு எதற்கும் இந்த படம் சிறந்த படமாக தோன்றவில்லை. செய்திதாளில் வந்த ஒரு மிகவும் உணர்ச்சிமயமான செய்தியை எடுத்துக் கொண்டு அந்த செய்தியிலிருந்து பின்னோக்கி சென்று கதையை உருவாக்கி இருக்கும் சாமர்த்தியம் புரிகிறது. ஆனால் கதையில் எந்த விதமான இறுக்கமோ, கட்டிபோடும் சம்பவங்களோ இல்லை (இறுதி காட்சி தவிர). ஒவ்வொரு மாணவணுக்கும் ஒரு பின்புலம் இருப்பதைச் சொன்னவுடன், அந்த வாழ்வியல் சார்ந்த ஒரு பிரச்சனையை ஆழமாக சொல்லுவாரோ என்று எதிர்பார்த்தேன் - இல்லை. உண்மையில் அவர்கள் ஒரு சாதாரண குடும்பத்து ஆசாமிகள் என்றோ எந்த விதமான பிண்ணனி தகவல்களும் கொடுக்காவிட்டாலும் கதையில் எந்த பாதிப்பும் வந்திருக்காது. தென்றல் கடந்து செல்லுவதைப்போல breezy-ஆக கதை நகரப்போகின்றதா என்று பார்த்தால் அப்படியும் இல்லை. இடையிடையே கனம் கூடுகிறது. ஆனால் திரைக்கதையால் அதைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை. காலேஜ் கல்சுரல் என்று அமைத்த காட்சியெல்லாம் மகா மொக்கை. மிகவும் மெல்லிய கதையை வைத்துக்கொண்டு மூன்று மணி நேரம் எப்படி படத்தை ஓட்டுவது என்று இயக்குனர் திண்டாடியிருப்பது நன்றாக தெரிகிறது. இரண்டாம் பகுதி நகரவேயில்லை. நட்பைப் பற்றி தீவிரமாக பேசப்போகிறாரா, காதலைப் பற்றி பேசுகிறாரா இல்லை ஒரு சிறு நகரத்தில் இருக்கும் கல்லூரியின் நிகழ்வுகளை யதார்த்தமாக பதிந்திருக்கிறாரா என்ற சந்தேகம் எனக்கு கடைசி வரை இருந்தது. படத்தை சோகமாக முடிப்பது தான் யதார்த்தம் என்றாகி விட்டது என்றே நினைக்கிறேன்.

இந்த படம் ஒரு வேளை நிச்சயம் நல்ல படமாக வந்திருக்ககூடும் தேவையற்ற பல பகுதிகளை நீக்கிவிட்டால். இறுதி காட்சியே மூலமான இந்த படத்தில் அந்த காதல் episode, நட்பு என்று டயலாக் பேசும் episode, சீனியர் லவ் லெட்டர் எபிசோடை எல்லாம் எடுத்து விட்டு இறுதி காட்சியை தந்திருந்தாலே இப்போது இருக்கும் version-ஐக் காட்டிலும் பல மடங்கு நன்றாக இருந்திருக்கும். Alfred Hitchcock சொன்னது தான் நியாபகம் வருகிறது - "What is drama but life with the dull bits cut out".

இந்த படத்தில் அழுத்தம் இல்லை. மிகவும் மேம்போக்காக செல்வதாகவே தோன்றுகிறது. இயக்குனர் கல்லூரியின் வாழ்வியலை காட்ட முயற்சிக்கவில்லை - செய்தியை ஆதாரமாக வைத்துக் கொண்டு அதைச் சுற்றி சினிமா எடுக்க முயன்றிருக்கிறார். அவ்வளவே. எண்ணை வடியும் முகங்களும், முன்பின் பார்த்திராத தடங்களும் மட்டுமே யதார்த்த சினிமா ஆகிவிடுவதில்லை இல்லையா. சினிமாவில் ஒரே சம்பவம் மீண்டும் மீண்டும் நிகழ்வது போன்ற பிரமை ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. அந்த காரணத்தாலோ என்னவோ சில காட்சிகளுக்குப்பின் சலிப்பு தட்ட ஆரம்பித்துவிடுகிறது. எதோ சம்பவங்களை தனித்தனியாக எடுத்து ஒரு தலைப்பின் கீழ் வரிசையாக் அடுக்கியது போல் இருக்கிறது.

இருப்பினும், சமிபத்திய சில காலங்களில் தமிழ் சினிமா அடைந்து வரும் மாற்றங்கள் மிகவும் அசுவாசப்படுத்துவதாகவே இருக்கின்றது. மிகவும் அபரிமிதமான நாடகத்தன்மையிலிருந்து மெல்ல விலகி யதார்த்தத்தை நோக்கியும் வாழ்கையை நோக்கியும் நகரும் இந்த பயணத்தில் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே தமிழ் சினிமா இருக்கிறது. வாழ்விலிருந்து எடுக்கப்படாமல் கிராமம்/சிறுநகரம் சார்ந்த படங்களை யதார்த்த சினிமா என்று விளங்கிக் கொள்ளப்படும் தவறான கற்பிதம் தோன்றி விடுமோ என்ற பயம் தோன்றுகிறது. ஒவ்வொரு படத்திலும் எதோ ஒரு பகுதியோ அல்லது ஒரு நடிகரின் நடிப்போ தான் ஆத்மார்த்தமாக இருப்பதாக தோன்றுகிறது. மற்றவை எல்லாம் வெளிப்பூச்சுகள். இருப்பினும் "ஆக்ஷன் சப்ஜெக்ட்"-ஐயும் "யூத் சப்ஜெக்ட்"-ஐயும் விட்டு தமிழ் சினிமா மெல்ல வெளியே வரத்துவங்கியிருப்பதற்கு கொஞ்சம் சந்தோஷப்படலாம்.

யதார்த்தவாத தமிழ் சினிமாவில் பெரும் குறையாக (நான் விளையாட்டில் சேர்த்துக் கொள்வது சிவாஜி, மன்மதன், போக்கிரி, சாமி வகையறாக்களை அல்ல) நாம் பார்ப்பது முழுமையில்லாத பாத்திரப்படைப்பு, அளவுக்கதிகமான நீளம் மற்றும் அழமில்லாத உணர்ச்சிகள் (ஒரே கதையில் பல்வேறு உணர்ச்சிகளையும் காட்டும் போக்கு). கதைகள் ஒரே கோணத்தை நோக்கியதாக அல்லாமல் பல கோணங்களிலும் சிதறி அழுத்தத்தை இழப்பதற்க்கு வணிக ரீதியான சிக்கல்கள் மிக முக்கியமான காரணம். இந்த பிரச்சனை பூனைக்கும் மணிகட்டும் வேலையாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இப்போது தோன்றியிருக்கும் இந்த momentum-ஐ சிரியாக பயன்படுத்திக்கொண்டால் நிச்சயம் உலக தரத்துக்கு தமிழிலும் சிறந்த படங்களை எடுக்க முடியும். அவ்வாறு எடுக்கப் படும் படத்தில் ஒரே ஒரு படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றால் கூட போதும். ஆட்டத்தின் விதிகள் மாறத் துவங்கிவிடும்.

இந்த படத்துக்கு கடைசி நேரத்தில் வர முடியாமல் போன நன்பனிடம் போன் பேசும் சொன்னேன் "You didn't loose any thing”.

பிகு: வெற்றி பெறுவோம் பாட்டைக் கேட்டதும் நஸ்ருதின் ஷாவும் ரவி பாஸ்வானியும் கையை நீட்டியபடி ஹம்ஹே காம்யாப் என்று பாடுவது தான் தோன்றியது. படம் பெயர் சரியாக நியாபகம் வராமல் தவித்தேன். நல்ல வேளை இந்த பதிவு மண்டை குடைச்சலை முடிவுக்கு கொண்டு வந்தது.

2 Responses to “கல்லூரி”

rakee said...

i have seen your blog its interesting and informative.
I really like the content you provide in the blog.
But you can do more with your blog spice up your blog, don't stop providing the simple blog you can provide more features like forums, polls, CMS,contact forms and many more features.
Convert your blog "yourname.blogspot.com" to www.yourname.com completely free.
free Blog services provide only simple blogs but we can provide free website for you where you can provide multiple services or features rather than only simple blog.
Become proud owner of the own site and have your presence in the cyber space.
we provide you free website+ free web hosting + list of your choice of scripts like(blog scripts,CMS scripts, forums scripts and may scripts) all the above services are absolutely free.
The list of services we provide are

1. Complete free services no hidden cost
2. Free websites like www.YourName.com
3. Multiple free websites also provided
4. Free webspace of1000 Mb / 1 Gb
5. Unlimited email ids for your website like (info@yoursite.com, contact@yoursite.com)
6. PHP 4.x
7. MYSQL (Unlimited databases)
8. Unlimited Bandwidth
9. Hundreds of Free scripts to install in your website (like Blog scripts, Forum scripts and many CMS scripts)
10. We install extra scripts on request
11. Hundreds of free templates to select
12. Technical support by email

Please visit our website for more details www.HyperWebEnable.com and www.HyperWebEnable.com/freewebsite.php

Please contact us for more information.


Sincerely,

HyperWebEnable team
info@HyperWebEnable.com

என்ன KC ரொம்ப நாளாய் BLOG போடவே இல்லை ?

 
© 2009 அஞ்சறைப் பெட்டி.
Design by psdvibe | Bloggerized By LawnyDesignz |Ad block added by krishchandru | Distributed by Deluxe Templates | Header photo by Kannan Seetharaman